ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்…

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன்.

இப்படம் ஆக்‌ஷன் நிறைந்ததாகவும், தனது முந்தைய படங்களை விட மிக விறுவிறுப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இப்படத்தின் 50% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளதாகவும்.

படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்படத்தை 2023 கோடையில் வெளியிட உள்ளதாகவும் கூறினார்.

Rajinikanth’s ‘Jailer’ movie Shooting update

‘வா வாத்தி…’ உருக வைக்கும் தனுஷ் – ஜிவி. பிரகாஷ் இசை கூட்டணி்

‘வா வாத்தி…’ உருக வைக்கும் தனுஷ் – ஜிவி. பிரகாஷ் இசை கூட்டணி்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடிப்பில் நேரடி தெலுங்கு படமாக உருவாகி வரும் படம் ‘சார்’. இந்த படம் தமிழில் ‘வாத்தி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.

வெங்கி அட்லூரி இயக்க நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்க படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா ஆகியோர் நடிக்கின்றனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் வெளியிடுகின்றனர்.

வாத்தியாராக தனுஷ் நடிக்கும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

நாளை 10-ம் தேதி இப்பட முதல் பாடம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் ஒரு வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதில்… ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ‘வா வாத்தி…..’ என்ற பாடலின் ஒருசில வரிகளை பாடி வெளியிட்டுள்ளார் தனுஷ். தமிழ் & தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனுஷ் இந்த பாடலை பாடியுள்ளார்.

அடுத்த மாதம் டிசம்பர் 2ல் படம் வெளியாகவுள்ளது.

#Dhanush | “என் உசுர உன் உசுரா தாரேன் கைமாத்தி” – கேட்கும்போதே காதல் துளிர்க்குது @dhanushkraja and @gvprakash

#VaathiFirstSingle #Vaathi

15 வருடங்களுக்கு முன்பே விஜய் – சூர்யா படங்களை ஓரங்கட்டிய ‘பொல்லாதவன்’ தனுஷ்

15 வருடங்களுக்கு முன்பே விஜய் – சூர்யா படங்களை ஓரங்கட்டிய ‘பொல்லாதவன்’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘பொல்லாதவன்’

இந்த படம் கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 8-ல் தீபாவளிக்கு வெளியானது. இந்த படத்தில் நாயகியாக திவ்யா நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார்.

இதே நாளில் (2007 தீபாவளிக்கு) விஜய் இரட்டை வேடத்தில் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘வேல்’ உள்ளிட்ட படங்களும் வெளியானது.

ஆனாலும் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இந்தப் படத்திற்குப் பிறகுதான் வெற்றிமாறன் தனுஷ் ஆகியோரின் கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன் பின்னர்தான் ஆடுகளம், வடசென்னை அசுரன் உள்ளிட்ட படங்களில் அவர்களை இணைந்தே இருந்தனர்.

இந்த நிலையில் பொல்லாதவன் வெளியாகி 15 வருடங்கள் ஆன நிலையில் நேற்று இந்தப் படத்தின் 15வது ஆண்டு விழாவை பட குழுவினர் கொண்டாடினர்.

15 Years of Polladhavan என்ற தனுஷ் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்த சந்திப்பில் 5 ஸ்டார் கதிரேசன் வெற்றிமாறன் தனுஷ் ஜிவி பிரகாஷ் ரம்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

15 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் சந்தித்துள்ளதால் ‘பொல்லாதவன் 2’ ஆரம்பிக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன.

Polladhavan

ஐக்கிய அரபின் ‘கோல்டன்’ விசா பெற்ற நடிகர் விக்ரம்..

ஐக்கிய அரபின் ‘கோல்டன்’ விசா பெற்ற நடிகர் விக்ரம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சீயான் விக்ரம்.

தற்போது, நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டபோது, ​​நடிகை பூர்ணா அல்லது ஷாம்னா காசிம் உடன் இருந்தார்.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

Actor Vikram has got Golden Visa from United Arab Emirates

ப்ளீஸ்.. ஒன் டைம்.: ரஜினியுடன் நடிக்க நெல்சனிடம் பிட்டு போடும் ‘பவுடர்’ பட பிரபலம்

ப்ளீஸ்.. ஒன் டைம்.: ரஜினியுடன் நடிக்க நெல்சனிடம் பிட்டு போடும் ‘பவுடர்’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் முக்கியமானவர் நடிகர் வையாபுரி.

இவர் கமல், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

ஆனால் இதுவரை ரஜினிகாந்த் உடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

தற்போது விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பவுடர்’ படத்தில் நாயகி அனித்ராவின் தந்தையாக நடித்துள்ளார்.

இந்த படம் தனக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் எனவும் ‘பவுடர்’ இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்து இருந்தார். இந்த படம் நவம்பர் 25ல் தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இந்த நிலையில் ரஜினியுடன் நடிப்பது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்…

“ரஜினியை ஒருமுறை சந்தித்தேன்.. அவர் வாங்க வையாபுரி.. கமல் கூட மட்டும் தான் நடிப்பீர்களா? என என்னிடமே கேட்டார்.

ரஜினியை பொறுத்தவரை அவர் தன் இயக்குனர்களிடம் இவரை இந்த படத்தில் நடிக்க வையுங்கள்… அவரை நடிக்க வைக்க வேண்டாம் என எதையுமே சொல்ல மாட்டார்.

இயக்குனரின் முடிவே என இருப்பார் ரஜினிகாந்த். எனவே அவரிடம் வாய்ப்பு கேட்க முடியாது. இப்போதும் கூட ‘ஜெயிலர்’ படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று நெல்சனிடம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.

ஆனால் எனக்கான கேரக்டர் அந்த படத்தில் இல்லை என்கிறார் நெல்சன்” என்றார் நடிகர் வையாபுரி.

வையாபுரி

Vaiyapuri asking Chance to Act with Rajini

வெங்கட் பிரபுவுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி கிருத்தி ஷெட்டி

வெங்கட் பிரபுவுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி கிருத்தி ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கிருத்தி ஷெட்டி.

இவர், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அந்த படத்தை தற்காலிகமாக ‘NC22’ என்று அழைக்கப்படுகிறது.

நவம்பர் 7தேதி வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு கிருத்தி ஷெட்டி வாழ்த்து தெரிவித்தது படப்பிடிப்பில் போது உண்மையில் மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருப்பதற்காக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன்.

உங்களுடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது.மேலும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெங்கட் பிரபு சார் என்று கிருத்தி ஷெட்டி.

Working with Venkat Prabhu is happy said Krithi Shetty

More Articles
Follows