மீம்ஸ் போட்டு திட்டும் விமர்சகர்களுக்கு ரஜினியின் சூப்பர் பதிலடி

மீம்ஸ் போட்டு திட்டும் விமர்சகர்களுக்கு ரஜினியின் சூப்பர் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth reaction to his political entry memesஇன்று 5வது நாளாக ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது அவர் சோஷியல் மீடியாவில் மீம்ஸ் மற்றும் விமர்சிக்கும் நபர்களுக்கு தன் பதிலை அதிரடியாக கொடுத்துள்ளார்.

அவர் பேசியதாவது….

சோஷியல் மீடியாவுல சிலர் திட்டி எழுதுவதை பார்ப்பேன். அது எனக்கு கஷ்டமில்ல.

ஆனால், ஏன் தமிழ்மக்கள் இப்படி கீழ்த்தரமா போயிட்டாங்க. இப்படி எழுதுறாங்க நினைப்பேன்.

அந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்துறாங்களே அப்படின்னு வருத்தம் தோணுது.

உலகத்துல எல்லாத்துக்கும் எதிர்ப்பு இருக்கு. எதிர்ப்பு இல்லாம வளர முடியாது.

அதுவும் அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். ஒருவிதத்துல அவங்களே நமக்கு உதவி பண்றாங்க”

என்று மீம்ஸ் போட்டு விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார்.

‘கடமையை செய்யுங்கள்; போர் வரும்போது சந்திப்போம்.’ – ரஜினி பேச்சு

‘கடமையை செய்யுங்கள்; போர் வரும்போது சந்திப்போம்.’ – ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini welcomeரஜினிகாந்த் இன்று 5வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார்.

அப்போது ஒரு சின்ன கதையை கூறி தன் அரசியல் பிரவேசத்தை சூசகமாக தெரிவித்தார்.

பழைய காலங்களில் அரசர்கள் இருப்பார்கள். படைபலம் இருக்கும். ஆனால் ஆட்கள் குறைவாக இருப்பார்கள்.

ஆனா, போர் என்று வரும்போது எல்லா ஆண்களும் சேர்ந்து போரிடுவாங்க.

மத்த நேரம் உழைச்சுட்டே இருப்பாங்க. வீர விளையாட்டுகள் எல்லாம வச்சது, அவங்க உடலை பலப்படுத்தணும்னுதான்.

அவங்க கடமையை செஞ்சுட்டே இருப்பாங்க. போர்னு வரும்போது மண்ணுக்காக, மானத்துக்காக போராடுவாங்க. அது போல எனக்கும் கடமை, இருக்கு. தொழில் இருக்கு.

அதுபோல் ரசிகர்கள், நீங்க ஊருக்கு போங்க, கடமையை செய்யுங்க. எனக்கும் வேலை இருக்கு. நான் என் வேலையை பார்க்குறேன்.

ஆனால் போர்னு வரும்போது நாம கண்டிப்பா பார்த்துப்போம். ஆண்டவன் எப்போதும் நம்முடன் இருப்பான். நன்றி.” என கூறினார் ரஜினிகாந்த்.

Rajinikanth again confirmed his political entry by telling King Story

‘நான் பச்சை தமிழன்; தூக்கியெறிந்தால் இமயமலையில் விழுவேன்..’ ரஜினி

‘நான் பச்சை தமிழன்; தூக்கியெறிந்தால் இமயமலையில் விழுவேன்..’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த ஒரு வாரமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று 5வது நாளாக ரசிகர்களை சந்தித்து ரஜினி பேசி வருகிறார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது…

நான் தமிழனாங்கற கேள்வி அடிக்கடி வருது. இப்போ எனக்கு 67 வயசு ஆகுது.

23 ஆண்டுகள் மட்டும்தான் கர்நாடகத்துல இருந்தேன். 44 ஆண்டுகள் இங்க, உங்க கூடவே வளர்ந்தேன்.

கர்நாடகத்துல இருந்து ஒரு மராட்டிக்காரனாகவோ, கர்நாடகக்காரனாவோ வந்தாலும் எனக்கு பணத்தையும் புகழையும் அள்ளிக்கொடுத்து நீங்க என்னை தமிழனாகவே ஆக்கிட்டாங்க.

இப்ப நான் பச்சைத்தமிழன். என் மூததையர்கள் கிருஷ்ணகிரில இருந்தவங்கன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்.

என்னைய தமிழக மக்கள் வீசி எறிந்தால், நான் இமயமலையில போய்தான் விழுவேன். வேற எங்கயும் போய் விழமாட்டேன்.

ஏன்னா, நல்ல மனசுள்ள தமிழ்மக்கள் இருக்கிற இங்க இருக்கணும்,

இல்லைன்னா, இமயமலைலதான் இருக்கணும்.

என்னை நல்லா வாழ வச்சீங்க. என்னை வாழ வைச்ச தெய்வங்கள் நீங்கள்.

நீங்க நல்லா இருக்கணும்னு நான் நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு. இதற்கு ஏன் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க.” என்று ஆவேசமாக பேசினார் ரஜினி.

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

முதன்முறையாக ரஜினியுடன் இணையும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Samuthirakaniகடந்த நான்கு தினங்களாக தன் ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு, தான் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் போட்டோ சூட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

ரஞ்சித் இயக்கவுள்ள இதன் படப்பிடிப்பு வருகிற மே 28ஆம் தேதி தொடங்கவுள்ளது.

நாயகியாக ஹீமா குரோஷிமா நடிக்க, தனுஷ் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர் ரஜினிகாந்துடன் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

தனுஷின் தயாரித்த விசாரணை, விஐபி, விஐபி 2 உள்ளிட்ட படங்களில் சமுத்திரக்கனி நடித்திருந்தார் என்பது இங்கே கவனித்தக்கது.

Samuthirakani to play an important role in Rajinis Thalaivar161

ரஜினி அரசியலுக்கு வரலாமா.? நண்பர் ராஜ்பகதூர் ரியாக்சன்

ரஜினி அரசியலுக்கு வரலாமா.? நண்பர் ராஜ்பகதூர் ரியாக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini in Immense Pressure To Join Politics says his friend Raj Bahadurகர்நாடகாவில் ஒரு பேருந்தில் நடத்துனராக தன் வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி இன்று இந்தியாவே போற்றும் அளவுக்கு ஒரு மாபெரும் மனிதராக வளர்ந்து இருக்கிறார்.

1968ஆம் ஆண்டுகளில் ரஜினியுடன் சேர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தவர் ராஜ்பகதூர்.
இன்றுவரை இவர்களது நட்பு தொடந்துக் கொண்ருக்கிறது.

புகழின் உச்சிக்கே போனாலும் இன்றும் மாறாத நட்பை அவர் மீது கொண்டிருப்பவர் ரஜினி.

இந்நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நண்பர் ராஜ்பகதூர்தன் அண்மையில் பேட்டியில் கூறியதாவது…

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு தமிழகம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து அடிக்கடி ரஜினி பேசுவார்.

அவர் அரசியலுக்கு வர வேண்டும் என மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன் ஒரு விழாவில் ரஜினியை சந்தித்தேன். அப்போது பதட்டமாக இருந்தார்.

என்னெவென்று கேட்டபோது, அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசினார்.

அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

Rajini in Immense Pressure To Join Politics says his friend Raj Bahadur

‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

‘ரஜினி தலையில் ஒன்னுமில்ல…’ முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politicsகடந்த 25 வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் பேசிய ரஜினியோ, தான் அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதை போல மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

இதனால் பலரும் பலவிதமாக பேசி வருகின்றனர்.

ஒரு சிலர் ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் முகநூல் பதிவில் அவர் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

அதில்…

‘தென்னிந்தியர்கள் மீது எனக்கு மதிப்பு அதிகம். ஆனால், அவர்கள் நடிகை, நடிகர்கள் மீது முட்டாள்தனமான பக்தி வைத்திருப்பதுதான் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஏன் இப்படி சினிமா நட்சத்திரங்களை மிகைப்படுத்துகிறார்கள்?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி கணேசனின் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றேன்.

படத்தின் துவக்கத்தில், சிவாஜி கணேசனின் காலை மட்டும்தான் காட்டினார்கள். அதற்கே ரசிகர்கள் அரங்கையே அதிரவைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்… அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்?

வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்று நினைக்கிறேன்.

அமிதாப்பச்சன் போன்று ரஜினி தலையிலும் ஒன்றும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

Ex Supreme Court Judge Markandey Katju oppose Rajinis entry in politics

More Articles
Follows