தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று ஆகஸ்ட் 12… தனது 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் அறிமுகமானார் கமல்ஹாசன்.
முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசு தலைவர் விருதைப் பெற்றவர் இவர்.
இந்தப் படம் வெளியாகி இன்றோடு 63 வருடங்கள் முடிந்து 64 வது வருடம் தொடங்குகிறது. எனவே அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் 64-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கமல்.
தன் ட்விட்டர் பக்கத்தில்…
“64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள், என் மக்களுக்காக. உங்கள் நான்” என தெரிவித்துள்ளார்.
Kamal thanks note for 64 years of Kamalism