தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அதிரூபன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், ஸ்ருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள படம் முப்பரிமாணம்.
ஜிவி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்படத்தின் டீசர் ரஜினியின் கபாலி படத்துடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இப்படம் மார்ச் 3ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் இப்படக்குவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது சாந்தனு பேசும்போது, இப்படத்தின் பாடல்களை ரஜினி சார் வெளியிட வேண்டி அவரை சந்தித்தோம்.
அப்போது அவர் இந்த டிரைலரை பார்த்தார்.
அவரது ஸ்டைலில் சில நிமிடங்கள் ஆலோசித்த அவர், மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டார்.
மறுபடியும் அவர் வேண்டும் என கேட்டது அவரது உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தை. அந்த தருணம் என்னால் மறக்கமுடியாது” என்றார்.
Rajinikanth asked once more to Shanthanu Bhagyaraj