லாரிகளில் தண்ணீர்; சிட்லபாக்கம் ஏரி சுத்தம்..; அசத்தும் ரஜினி ரசிகர்கள்

New Project (1)சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார். எனவே தன் ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஏராளமான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

தற்போது சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக லாரிகளில் குடி தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்த செய்திகளை நாம் பார்த்தோம்.

இந்த நிலையில், தர்மபுரி உள்ளிட்டசில மாவட்டங்களில் வீடுகள் தோறும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து கொடுத்துள்ளனர்.

மேலும் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சிட்லப்பாக்கம் ஏரியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தம் செய்து தூர்வாறும் வேலைளை தொடங்கியுள்ளனர்.

இந்த பகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேரில் சென்றுபார்வையிட்டு ரஜினி ரசிகர்களை பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த நற்செயலை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

Overall Rating : Not available

Latest Post