தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சூட்டிங்கை தமிழ்நாட்டில் வைக்க மாட்டார்கள்.
சூட்டிங் நடப்பது அறிந்துவிட்டால், திரளும் ரசிகர்களை சமாளிக்க முடியாது என்பதால், பெரும்பாலும் தமிழ்நாட்டில் சூட்டிங் வைப்பதையே தவிர்த்து வருகிறார்கள்.
அண்மையில் விஜய்யின் பைரவா படத்திற்காக, தமிழக பின்னணியை ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர்.
அதன்பின்னர் ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை ஷூட் செய்தனர்.
அதுபோல் அஜித்தின் 57வது படத்தின் முக்கிய காட்சிகளை சென்னையின் முக்கியமான வீதிகளில் படமாக்க நினைத்தாராம் சிவா.
ஆனால் அஜித் மறுக்கவே, பின்னர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால், ரஜினியின் 2.ஓ சூட்டிங்கை சென்னையை அடுத்துள்ள திருக்கழுங்குன்றம் பகுதியில் நடத்தியுள்ளார் ஷங்கர்.
அங்கே ரஜினியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தினம் வந்த வண்ணம் இருந்தனர்.
மேலும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி பாதுகாப்பாகவும், சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இருந்தபோதிலும் தன் ரசிகர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்துள்ளார் இந்த சூப்பர் ஸ்டார்.