சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

சந்தானத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் இணையும் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and rajeshகடவுள் இருக்கான் குமாரு படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை எம்.ராஜேஷ் இயக்குவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுநாள் வரை சந்தானத்தை ஒரு காமெடியன் ஆகத்தான் ராஜேஷ் இயக்கியிருந்தார்.

ஆனால் புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

சிவா மனசுல சக்தி, பாஸ்கர் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் அமோக வெற்றியால் சந்தானம், ராஜேஷின் இந்த புதிய கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகவுள்ள படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார் எம்.ராஜேஷ்.

காமெடி கதைக்களத்தில் ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகவுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தியேட்டர்கள் மூடல்; சூட்டிங் நிறுத்தம்; 410 கோடி ரூபாய் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 daysசினிமா தியேட்டர்களில் டிஜிட்டலில் படங்களை திரையிட கியூப் நிறுவனம் அதிகளவில் பணம் வசூலிப்பதை கண்டித்து கடந்த மார்ச் 1 முதல் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

தற்போது மூன்றாவது வாரமாக எந்த புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

இதுவரை 20 படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ரூ.100 கோடி வரை முடங்கியுள்ளது.

மேலும் தமிழ் தயாரிப்பாளர்கள் துவக்கியுள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, மார்ச் 16 முதல் கிட்டதட்ட 42 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சென்னையைத் தவிர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ரூ.410 கோடி முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இதுவரை இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிடவில்லை.

தொடர்ந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

Nearly Rs 400 Crores loss due to Tamil film industry strike for 20 days

நொடிக்கு நொடி என்ற குறும்படம் இரண்டு வாரத்தில் படைத்த சாதனை

நொடிக்கு நொடி என்ற குறும்படம் இரண்டு வாரத்தில் படைத்த சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nodikku Nodi short film made record in Youtubeசில குறும்படங்களும் இன்று ஓசைப்படாமல் உலகளவில் கவனிக்கப்படுகின்றன. பார்வையாளர்களால் ஆராதிக்கப்படுகின்றன.

‘நொடிக்கு நொடி’ என்கிற அரைமணி நேரக் குறும்படம் இரண்டு வாரத்தில் முகநூலில் ஒரு மில்லியன் ரசிகர்கள் பார்த்து குறும்படத்தில் ஒரு சாதனை படைத்துள்ளது. பல வி.ஐ.பிக்களும் படம் பார்த்துப் பாராட்டியுள்ளனர்.

இதை ‘காமன் மேன் மீடியா’ சார்பில் சதீஷ் குமார் எழுதி இயக்கிக் தயாரித்துள்ளார்.

அது மட்டுமல்ல இதில் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இது இவரது இயக்கத்தில் வந்துள்ள 2வது குறும்படமாகும். முதல் குறும் படம் ”இந்தியன் டூரிஸ்ட்”

‘நொடிக்கு நொடி’யில் சதீஷ் குமார் , சஞ்சய் , கிஷோர் ராஜ்குமார் , ஸ்வாதிஷா நடித்துள்ளனர்.

இது வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலில் ,சுழலில் சிக்கிக் கொண்ட மூன்று பாத்திரங்களில் மையம் கொள்ளும் கதை.

படித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒருவன், விருப்பமில்லாத வேலையில் இருக்கும் இன்னொருவன், காதலித்து ஈகோ மோதலால் பிரச்சினையில் பிரிந்துள்ள மற்றொருவன் என மூன்று பாத்திரங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட திரைக்கதை.

இக்காலத்துக்கு ஏற்றபடி நகைச்சுவை முலாம் பூசி உள்ளீடாக நல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

கடந்தகாலத்தின் துயரத்தை எண்ணி கவலையைத் தூசு தட்டி வருத்தப்படுவதும் எதிர்காலம் பற்றி அச்சப்படுவதும் என்று காலத்தை வீணடித்து நிகழ்கால நிம்மதியையும் அன்றாட ஆனந்தத்தையும் இழந்து விடாதீர்.

இதைப் புரிந்து கொண்டால் நொடிக்கு நொடி வரும் நேரம் எல்லாமே அனுபவிக்கத் தக்க இன்பமான தருணங்கள் தான் என்று உணர வைக்கிறது கதை.

இதைப் பார்த்து விட்டு நடிகர்கள் ராகவா லாரன்ஸ் , அருள்நிதி , சிபிராஜ் . ஆரி , இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, ‘கணிதன்’ சந்தோஷ் .’திருடன் போலீஸ்’ கார்த்திக் ராஜ், ‘அம்புலி ‘ ஹரிஷ் ,’ டிக் டிக் டிக்’ சக்தி ராஜன் , தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி , டிரை டண்ட் பிக்சர்ஸ் ரவீந்திரன் போன்ற திரையுலகப் பிரமுகர்கள் பாராட்டியுள்ளனர்.

இக் குறும்படத்திற்கு ஒளிப்பதிவு – பிரவீன் பாலு, இசை – எம்.. எஸ் ஜோன்ஸ் , எடிட்டிங் ரிச்சர்டு , சப் டைட்டில் ‘பாகுபலி’ புகழ் ரேக்ஸ். எழுத்து இயக்கம் ‘காமன் மேன்’ சதீஷ்குமார் .

‘நொடிக்கு நொடி’ குறும்படத்துக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.

Nodikku Nodi short film made record in Youtube

நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் படம் மூலம் டைரக்டராகும் ஆர்ட் டைரக்டர்

நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் படம் மூலம் டைரக்டராகும் ஆர்ட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Art director Ambrose going to direct Next Door couplesதமிழ் மற்றும் மலையாளம் படங்களில் கலை இயக்குநராக பணிபுரிந்த அம்ப்ரோஸ்.

நெக்ஸ்ட் டோர் கப்பிள்ஸ் எனும் படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் மலையாளத்தில் புகழ் பெற்ற பிண்ட்டோ கண்ணூர் மற்றும் மனோஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் கதை கேரளா, வயநாடுக்கு சுற்றுலா செல்லும் மூன்று பேர் அங்கே வரும் ஒரு சிறுவனை கடத்திக்கொண்டு சென்னைக்கு வருவது போலவும், அந்த சிறுவனைத் தேடி அவனுடைய பெற்றோர் வருவது போலவும் அமைக்கப் பட்டுள்ளது.

இதில் நாயகனாக புதுமுகம் ராகுலும் நாயகிகளாக அமலா மற்றும் அனிஷா அறிமுகமாகிறார்கள்.

படத்துக்கு திரைக்கதை – சாபு நெடுங்கோலம். ஒளிப்பதிவு – வினோத் ஜோசப். இசை – ஜான்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தை சிவ இந்து புரொடக்ஷன் சார்பில் சிவ இந்து தயாரிக்கிறார்.

தமிழ் திரைப்படத்துறையின் தற்போதைய போராட்டம் சுமூக நிலையை அடைந்தவுடன் , மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, கோவை மற்றும் கேரளாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Art director Ambrose going to direct Next Door couples

படங்களை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பிருத்விராஜ் ஒப்பந்தம்

படங்களை தயாரிக்க சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பிருத்விராஜ் ஒப்பந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sony Pictures International Productions in India ties up with Prithvirajமலையாளத்தில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தமிழிலும் நடிக்க ஆர்வம் கொண்டவர் பிருத்விராஜ்.

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக ஆகஸ்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் சில காரணங்களால் அந்த நிறுவனத்தில் இருந்து விலகிக்கொண்டார்.

இந்தநிலையில் தன் மனைவியுடன் சேர்ந்து ‘பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

தற்போது படங்களை தயாரிப்பதிலும் வெளியிடுவதிலும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார் பிருத்விராஜ்.

சமீபத்தில் மும்பை சென்று சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரான விவேக் கிருஷ்ணானியை சந்தித்து இதுகுறித்து ஒப்பந்தம் செய்துவிட்டு திரும்பியிருக்கிறார் இந்த மொழி நாயகன்.

Sony Pictures International Productions in India ties up with Prithviraj

ரஜினி-விஜய் செய்திகளுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கும் சன் டிவி

ரஜினி-விஜய் செய்திகளுக்கு மட்டும் நிபந்தனை விதிக்கும் சன் டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sun TV given some special attention for Rajini and Vijay newsஇந்திய சினிமாவில் ரஜினி படங்களுக்கு உள்ள மாஸ் நாம் அறிந்த ஒன்றுதான்.

தமிழகத்தை தாண்டியும் இவரது புகழ் கொடி கட்டி பறந்து வருகிறது.

அதுபோல் தமிழக அளவில் விஜய்க்கும் நல்ல மார்கெட் உள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒவ்வொரு படங்களில் நடிக்கின்றனர்.

விஜய் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார்.

ரஜினி படத்தை கார்த்திக் சுப்பராஜ் விரைவில் தொடங்கவுள்ளார்.

இந்நிலையில் சன் டிவி அலுவலகத்தில் உள்ள எடிட்டர் ரூமில் இவர்கள் குறித்த எந்த ஒரு செய்தி வந்தாலும் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என கட்டளையிட்டுள்ளனர்.

அந்த அறிக்கை எப்படியோ வெளியாகி தற்போது வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Sun TV given some special attention for Rajini and Vijay news

More Articles
Follows