மீண்டும் கலக்க வரும் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி

மீண்டும் கலக்க வரும் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajesh and santhanam‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.

இதில் பெரும்பாலான படங்களில் காமெடி நாயகனாக சந்தானம் நடித்திருந்தார்.

தற்போது சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் ராஜேஷ் இறுதியாக இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தார்.

இந்நிலையில் சந்தானத்தை நாயகனாக வைத்து ராஜேஷ் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

“GST-ஐ அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவேன்” – கமல்

“GST-ஐ அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவேன்” – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Kamal Haasanநாடு முழுவதும் விரைவில் ஜிஎஸ்டி-ஐ மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

“சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது கலை.

ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியல்ல.

சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்.

28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றார் கமல்ஹாசன்.

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ரசிகர்களுக்கு ‘தெறி’ ட்ரீட்

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ரசிகர்களுக்கு ‘தெறி’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Theri vijayவிஜய்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு இதுவரை தலைப்பிடப்படவில்லை.

எனவே விஜய் பிறந்தநாளில் அதாவது ஜீன் 22ஆம் தேதி பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியாகவுள்ளது.

எனவே அன்றைய தின கொண்டாட்டத்திற்கு தற்போது விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு முன்பே தெறி படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை வெளியிட உள்ளதாக அதன் ஆடியோ உரிமையை வாங்கியிருந்த திங் மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் மற்றொரு விருந்துக்கும் விஜய் ரசிகர்கள் தயாராகவிட்டனர்.

80களின் மாஸ் ஹீரோ கெட்டப்பில் ஆட்டம் போடும் சிம்பு

80களின் மாஸ் ஹீரோ கெட்டப்பில் ஆட்டம் போடும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AAA simbuஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் யுவன் இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது பாடலை இன்று வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலுக்கான சூட்டிங்கை இன்று சென்னை, கிண்டியில் தற்போது படமாக்கி கொண்டிருக்கிறார்களாம்.

இப்பாடல் மதுரை மைக்கேல் என்ற கேரக்டருடைய பாடல் என்பதால், 80களின் மாஸ் ஹீரோக்கள் கெட்டப்பில் சிம்பு ஆட்டம் போடவிருக்கிறாராம்.

விஜய்க்கு பதிலாக ஜிவி. பிரகாஷ்…? இது சீமானின் ‘கோபம்’

விஜய்க்கு பதிலாக ஜிவி. பிரகாஷ்…? இது சீமானின் ‘கோபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

Director Seemanஇயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இருந்தபோதிலும் இடையிடையே படங்களில் கவனம் செலுத்தவும் இருக்கிறாராம்.

இவர் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் பணி புரியவிருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அது தடைப்படவே, ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து பணிபுரிய இருக்கிறாராம்.

இப்படத்திற்கு கோபம் என தலைப்பிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது விஜய்க்காக எழுதிய கதையா..? அல்லது வேறு ஒரு புதிய கதையா..? என்ற விவரங்கள் தெரியவில்லை

நட்பில் பிரிந்தாலும் பிறப்பில் இணைந்த இளையராஜா-மணிரத்னம்

நட்பில் பிரிந்தாலும் பிறப்பில் இணைந்த இளையராஜா-மணிரத்னம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ilayaraja-Maniratnam-Rahmanஅன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா.

இதனைத் தொடர்ந்து தற்போது வரை தன் இசையால் இந்திய மக்களை மகிழ்வித்து வருகிறார்.

தனது இசைப் பயணத்தில் 1000 படங்களை கடந்து, இன்றும் இசையின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.

ஒரு படத்திற்கு குறைந்தது 5 பாடல்கள் என்றால் நீங்களே பாடல்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

35 வருடங்களுக்கு முன், தூர்தர்ஷன் சேனல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

அதுவரை இந்திப் பாடல்கள் மட்டுமே தமிழகத்தில் பிரபலமாக இருந்தது.

அப்போது இந்திப்பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த தமிழனை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் இளையராஜாதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்தவர். அர்பணித்து கொண்டிருப்பவர். இவரை தொடர்ந்து தன் வாரிசுகளையும் இசைக்காகவே தாரை வார்த்தவர் எனலாம்.

பாடல்கள் மட்டுமில்லை பின்னணி இசையில் கைத்தேர்ந்தவர் இளையராஜா. வசனங்கள் இல்லாத காட்சிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பவர்.

திகில், செண்டிமென்ட் என எதையும் விட்டு வைக்கவில்லை. அனைத்திலும் தன் இசையை இசைக்க செய்து அந்த காட்சிகளை ரசிக்க செய்தவர்.

யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, ஜானகி, சித்ரா உள்ளிட்ட குரல்களை நம் செவிகளுக்கு தேனாக பாய்ச்சியவர். இவரின் இசை அவர்களின் குரல்களை அலங்கரித்தது.

தாய்க்கு சொந்த ஊரில் ஒரு கோயில் எழுப்பியுள்ளார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்.

முதல்முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் இசை அமைத்தவர். பல ராகங்களை உருவாக்கியுள்ளார்.

தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய பாணி பியானோ, கிடார் வாசிக்கக் கற்றுக்கொண்டார். லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாஸிகல் கிடார் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார்.

உலகத்திலுள்ள டாப் 10 பாடல்களில் இளையராஜா இசையமைத்த ‘தளபதி’ பட பாடல் “ராக்கம்மா கையதட்டு” இடம் பெற்றிருந்தது. நான்கு முறை சிறந்த பாடலுக்கான இந்திய தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.

இன்று (ஜீன் 2ஆம்) தேதி அவர் தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

‘தளபதி’ என்றால் அது மணிரத்னம் இல்லாமல் சாத்தியமாகுமா? ஆம்.. இன்று இளையராஜாவின் பிறந்தநாள் மட்டுமல்ல மணிரத்னத்தின் பிறந்தநாளும் கூட… வாழும் இரு சரித்திரங்களும் இன்றுதான் (ஜூன் 2ஆம் தேதி) பிறந்தனர்.

பகல் நிலவு படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம்.

அதன்பின்னர் ‘இதயகோயில்’, ‘மௌனராகம்’, ‘நாயகன்’ என தன் முத்திரையை ‘நச்’சாக பதித்தவர் மணிரத்னம். கமலுடன் கைகோர்த்த நாயகன் படம் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

அதன்பின்னர் இவர் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘அஞ்சலி’ போன்ற படத்தின் காட்சிகளும் பாடல்களும் இன்று வரை கவிதை சொல்லும்.

இதில் அஞ்சலி படம் இளையராஜாவின் 500வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் ரஜினி-மம்மூட்டி என இரு சூப்பர்ஸ்டார்களை ‘தளபதி’ படத்தில் இணையவைத்து தமிழ் சினிமாவில் புது ட்ரெண்டை உருவாக்கியவர் மணிரத்னம்.

‘மாஸ்’ ஹீரோவான ரஜினியை ‘க்ளாஸ்’ ஹீரோவாக காட்டியவர் மணிரத்னம். இளையராஜா-மணிரத்னம் இணைந்து பணியாற்றிய கடைசி படம் ‘தளபதி’தான்.

அதன்பின்னர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமானோடு இணைந்து பணியாற்றினார். சமீபத்தில் வந்த காற்று வெளியிடை படம் வரை இவர்கள் கூட்டணி தொடர்கிறது.

இனி இளையராஜா, மணிரத்னம் எப்போது இணைவார்கள் என்கிற கேள்வி ஒவ்வொரு ரசிகனின் மனதிலும் எழாமல் இல்லை.

இனி இவர்கள் நிழல் உலகில் இணையாமல் போனாலும் நிஜ உலகில் தங்கள் பிறப்பால் இணைந்தே இருக்கின்றனர்.

இது தெய்வத்தின் செயல். இனி எவராலும் பிரிக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை.

In June 2nd two legends of Tamil cinema Ilayaraja and Maniratnam celebrates their birthday

More Articles
Follows