ROBOT LOVE MY3.. மீண்டும் இணைந்தது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

ROBOT LOVE MY3.. மீண்டும் இணைந்தது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த சீரிஸில் முன்னணி நட்சத்திரங்களான ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி ஐயர், அஷ்னா ஜவேரி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ மற்றும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற காமெடி பிளாக்பஸ்டர் வழங்கிய, பிரபல இயக்குநர் ராஜேஷ் எம் இந்த “மை3” சிரீஸை இயக்கியுள்ளார்.

ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸுக்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளர் கணேசன் இசையமைத்துள்ளார். அஷிஷ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மை3” தயாரிப்பை Trendloud நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

“மை3” டைட்டில் அறிவிப்பை ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ் இணைந்து பிக்பாஸ் ஹவுஸ் நிகழ்ச்சியில் அறிவித்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

“ஒரு கல் ஒரு கண்ணாடி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை ஹன்ஷிகா & இயக்குநர் ராஜேஷ் உடன் இணைந்து இந்த வெப் சீரிஸில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajesh and Hanshika teams up for MY3

சூர்யா கைவசம் 6 படங்கள்.. கங்குவா முதல் ரோலக்ஸ் வரை..; ஆறுமே அசத்தல்

சூர்யா கைவசம் 6 படங்கள்.. கங்குவா முதல் ரோலக்ஸ் வரை..; ஆறுமே அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது ‘கங்குவா’ என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட 10 விதமான கெட்டப்புகளில் சூர்யா தோன்றுவார் எனக் கூறப்படுகிறது. சூர்யா பிறந்த நாளில் இந்தப் படத்தின் வீடியோ கிளிப்ஸ் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

‘கங்குவா’ படத்தை முடித்த பின்னர் சூர்யா கைவசம் கிட்டத்தட்ட ஐந்து படங்கள் உருவாக ரெடி ஆகி வருகிறது.

இதை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம்.. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் இடம்பெற்ற ரோலக்ஸ் கேரக்டர் மட்டும் ஒரு படம்..

இவை இல்லாமல் ‘இரும்பு கை மாயாவி’ என்றொரு படம்.. மேலும் சந்துமாடேடி ஒரு படம் என 5 படங்களை சூர்யா கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Suriya lineup projects updates

65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

65 ஆண்டுகள் ப்ளாஷ்பேக்..: சினிமாவில் PRO பணியை தொடங்கி வைத்த MGR – RMV

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு சினிமாவை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க இன்று பல மீடியாக்கள் இருந்தாலும் 65 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் தொடர்பாளர்களை இந்தப் பணியை செய்து வந்தனர்.

ஒரு படம் பற்றிய தகவல்களை மீடியாக்களிடம் கொண்டு சேர்க்க திரைத்துரைக்கும் மீடியாக்களுக்கும் பாலமாக இருப்பவர்தான் இந்த பி ஆர் ஓ (எ) மக்கள் தொடர்பாளர்கள்.

இவர்கள் கொடுக்கும் செய்திகளையே மீடியாக்கள் தங்களது நாளிதழ்கள் இணையதளங்கள் யூடியுப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

முதல் முதலாக தமிழ் திரைப்படம் துறையில் ‘பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ) என்ற பணி புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில் மூலம் 22/ஆகஸ்ட் 1958 இன்றுதான் உதயமானது.

தமிழ் திரைப்பட துறையில் ‘நாடோடி மன்னன்’ படத்தின் மூலம் முதல் பொதுஜனத் தொடர்பாளர் (பி.ஆர்.ஒ) பிலிம் நியூஸ் ஆனந்தன் உதயமானதற்கு காரணமாக இருந்தவர்கள். இவர்களே…

*புரட்சித்தலைவர் எம்ஜிஆர்*.

*இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு*.

*ஆர்.எம் வீரப்பன்*.

*வித்வான் வே.லட்சுமணன்*.

*திரைப்பட துறையில் பி.ஆர்.ஓ என்ற பணிக்கு ஆணிவேராக இருப்பதற்கு இந்த நான்கு பேர் தான் காரணம்*.

ஆனந்தன்

Cinema PRO profession started in 1958

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

‘ஜாலிவுட்’டில் பங்கேற்ற ‘ஜெயிலர்’ நடிகர்.; ஐசரி கணேஷ் உருவாக்கிய தீம் பார்க்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சினிமா குடும்ப பொழுதுபோக்கு இடமான ’ஜாலிவுட்’ பிரம்மாண்டமாக பெங்களூரு நகரில் தொடங்கியுள்ளது.

விருந்தினர்களை மகிழ்விக்கும் வகையில் ‘ஜாலிவுட்’ குழுவின் நடனத்துடன் இந்த நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்வில் கர்நாடக துணை முதல்வர் ஸ்ரீ டி.கே. சிவக்குமார், புகழ்பெற்ற நடிக டாக்டர். சிவராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ டி.கே.சுரேஷ், ஸ்ரீபாலகிருஷ்ணா எம்.எல்.ஏ., திரு.எச்.ஏ.இக்பால் ஹுசைன் எம்.எல்.ஏ., மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தனர்.

ஜாலிவுட்டின் சேர்மனான டாக்டர். ஐசரி கே கணேஷ், விழாவை சிறப்பித்த அனைத்து பிரமுகர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

ஐசரி கே கணேஷ்

தனது பயணத்தைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக தனது கனவுகள் மீதான நம்பிக்கை, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத கடின உழைப்பு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

விருந்தினர்கள் அனைவரும் ஜாலிவுட்டின் வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பெயர் போன பெங்களூரு நகரத்தில் நிச்சயம் இந்த ஜாலிவுட் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும், டைட்டானிக், தி லாஸ்ட் வேர்ல்ட் மற்றும் ஐரோப்பிய பின்னணியிலான தெரு, ரோமன்சியா, பல்வேறு நீர் பூங்காக்கள் மற்றும் கடல் அலைகளைக் கொண்ட குளம் போன்ற ஜாலிவுட்டின் சிறப்பம்சங்கள் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது. இதுமட்டுமல்லாது, இங்கிருக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளும் மக்களை சுவை தரத்தை கூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஆகமொத்தத்தில், புதுமையான சினிமா அனுபவத்தை தேடுபவர்களுக்கான பொழுதுபோக்கு களமாக ‘ஜாலிவுட்’ அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஐசரி கே கணேஷ்

Isari Ganesh launches Jollywood at Bangaluru

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுகப்பற்று’ திரைப்படத்தின் வித்தியாசமான டீஸர் ஒன்றை, தயாரிப்பு நிறுவனம் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்னதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘டாணாக்காரன்’, ‘மான்ஸ்டர்’, ‘மாநகரம்’ என விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம், இறுகப்பற்று படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தின் வெளியீடு விரைவில் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, ரசிகர்களுக்குள் எதிர்பார்ப்பை உருவாக்கும் வண்ணம், ஒரு புதுமையான பாணியில் டீஸர் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக திரைப்பட டீஸர்களில், அந்தத் திரைப்படங்களின் காட்சிகளே இடம் பெறும். ஆனால் இறுகப்பற்று டீஸரில் உண்மையான திருமணமான ஜோடிகளின் வெளிப்படையான உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் அன்பு, அன்யோன்னியம், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்பது புலனாகி அது இறுகப்பற்று படத்தின் கருவைப் பிரதிபலிக்கும் வண்ணம் டீஸராகப் பயனபடுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக திருமணமான தம்பதிகளை வைத்து ஒரு நிகழ்ச்சியை படக்குழு நடத்தியது. இதில் பங்கேற்ற ஜோடிகள் தங்களின் துணை குறித்து சரியாக தெரிந்து கொள்ளும் வகையில், தங்கள் திருமண வாழ்க்கை குறித்து, புரிதல் குறித்து பேசி, கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தனர்.

இந்த நிகழ்வு (அனுமதியுடன்) படம் பிடிக்கப்பட்டே, டீஸராக வெளியாகியுள்ளது.

திருமண உறவில் இருப்பது தொடர்பான பொதுவான அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் பார்வையாளர்களை ஆழமான மட்டத்தில் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இந்த டீஸர் உருவாக்கப்பட்டுள்ளது.

உண்மையான தம்பதிகள் தங்கள் தனிப்பட்ட பயணங்கள், போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதைக் காண்பிப்பதன் மூலம் பல்வேறு பின்னணியில் இருந்து பார்வையாளர்களுடன் இணைவதை டீஸர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிஜ தம்பதிகள், வெளிப்படையாக தங்களின் தனிப்பட்ட பயணங்கள், பிரச்சினைகள், சந்தோஷங்கள் குறித்துப் பேசுவது, அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசுகையில்…

“திரைப்பட ரசிகர்களை ஈர்க்கும் புதுமையான யோசனைகளை நாங்கள் தொடர்ந்து திரைக்குக் கொண்டு வருகிறோம். தற்போது இறுகப்பற்று திரைப்படத்தின் உலகை, அந்த உணர்வை பார்வையாளர்களுக்குத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம், இது பார்வையாளர்களை அவர்களின் சொந்த உணர்வுகளையும் அனுபவங்களையும் யோசித்து, உணர வேண்டும் என்ற எண்ணத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

MUST WATCH உங்க பார்ட்னர்கிட்ட எவ்ளோ GAP..? ‘இறுகப்பற்று’ டீசர் உணர வைக்கும்.!

TEASER LINK – https://youtu.be/FBdtwYDAjlw

Unveiling Teaser of Irugapatru – A Glimpse into Real Relationships

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட காசோலை மோசடி வழக்கு.; கோர்ட் உத்தரவு என்ன.?

ரஜினியின் ‘கோச்சடையான்’ பட காசோலை மோசடி வழக்கு.; கோர்ட் உத்தரவு என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டில் திடீர் உடல் நலக்குறைவால் ரஜினிகாந்த் சென்னை போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் உயர்தர சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அப்போது அவர் நடிக்க இருந்த ‘ராணா’ என்ற திரைப்படம் நிறுத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் பூரண குணமடைந்து 2011 ஜூலை 13ஆம் தேதி சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அதன் பின்னர் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது இளைய மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் ரஜினியுடன் தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

கே எஸ் ரவிக்குமார் திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதியிருந்தார். இந்த படம் அனிமேஷன் என்ற போதிலும் திரைக்கதைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதுவே முழு படமாக அமைந்திருந்தால் பெரும் வரவேற்பு பெற்று இருக்கும் என ரசிகர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

கடந்த 2014-ல் வெளியானது. அப்போதே இந்த படத்தில் சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என பிரச்சனை எழுந்தது.

இப்படத் தயாரிப்பு பணிகளுக்காக பெங்களூருவைச் சேர்ந்த ஆட் பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்திடமிருந்து, இப்படத்தை தயாரித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளி மனோகர் கடன் பெற்றதாகவும், இதற்காக லதா ரஜினி உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் முரளி மனோகர், ஆட் பீரோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அபிர்சந்த் நஹாருக்கு கடந்த 2014-ல் வழங்கிய ரூ.5 கோடிக்கான காசோலை பணமின்றி திரும்பியது.

இதனையடுத்து முரளி மனோகருக்கு எதிராக அபிர்சந்த் நஹார் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், முரளி மனோகருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதி்த்து கடந்த 2021 டிச.4 அன்று தீர்ப்பளித்தது.

மேலும் அபிர்சந்த் நஹாருக்கு வழங்க வேண்டிய ரூ. 5 கோடிக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டி வீதம் ரூ. 7.70 கோடியை வழங்க வேண்டுமெனவும் முரளி மனோகருக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெங்களூரு உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விளம்பர நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Rajinis Kochaidaiyaan Advertisement case issue Court order

More Articles
Follows