3வது முறையாக இணையும் ஆர்யா-ஜீவா; லைக்கா தயாரிக்கிறது

3வது முறையாக இணையும் ஆர்யா-ஜீவா; லைக்கா தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya jeeva arya jiivaரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது லைக்கா புரொடக்ஷன்ஸ்.

இதில் நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதற்கு முன்பு ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதுபோல் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்

இப்படத்தை “நான்”, “எமன்” ஆகிய படங்களை இயக்கிய ஜீவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Jiiva and Arya teamsup for Lyca Productions

தமிழக அரசை எதிர்த்து தியேட்டர்கள் நாளை முதல் மூடல்

தமிழக அரசை எதிர்த்து தியேட்டர்கள் நாளை முதல் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre crowd in tamilnaduஜீலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டள்ளது.

இதனால் ஒரே வரி ஒரே நாடு என்ற அடிப்படையில் நாடு இயங்கி வருகிறது.

ஆனால் தமிழக சினிமா துறையில் இந்த வரியுடன் மாநில அரசின் 30% வரியும் இணைந்துள்ளது.

எனவே சினிமாத்துறைக்கு 58% வரி விதிப்பு ஏற்புடையதல்ல என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் இன்று பேட்டியளித்தார்.

அது குறித்து அவர் கூறியதாவது…

‘எல்லா துறையிலும் விலையை அவர்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.

ஆனால் சினிமா டிக்கெட் கட்டணத்தை அரசே முடிவு செய்கிறது.

இது சிறிய பெரிய படங்களுக்கும் பொருந்துகிறது.

நாங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. ஆனால் மாநில அரசின் வரியை (30%) எதிர்க்கிறோம்.

ஜீன் 30ஆம் தேதி மாலைதான் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அனைத்து வரிகளையும் சேர்த்து, கிட்டதட்ட 100 ரூபாயில் 68% வரியை செலுத்த வேண்டியுள்ளது.

இரட்டை வரியை நாங்கள் ஏற்கமாட்டோம். இதனால் பல சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.

நேற்று முதல் நடைமுறைக்கு வந்த வரியை தியேட்டர் உரிமையாளர்கள் கட்ட முடியவில்லை.

ஆகையால் நாளை முதல் திரையரங்கு மூடப்படுகிறது.

சில தியேட்டர்களில் நேற்றே சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

திரைப்படத்துக்கு ஏற்ப சினிமா டிக்கெட் விலையை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இவர்களின் முடிவை பரிசீலிக்க சொல்லி, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Theatre Owners Association announced strike and closed all theatres

இனி படம் இயக்கவே மாட்டேன்… அஜித்துக்கு தோல்வி கொடுத்த இயக்குனர் முடிவு

இனி படம் இயக்கவே மாட்டேன்… அஜித்துக்கு தோல்வி கொடுத்த இயக்குனர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yegan movieநடன இயக்குனர், நடிகர் என வலம் வந்தவர் ராஜூ சுந்தரம்.

முதன்முறையாக இவர் அஜித், நயன்தாரா நடித்த ஏகன் படத்தை இயக்கினார்.

ஆனால் இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் வெளியான ‘யானும் தீயவன்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

அப்போது ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது…

“யானும் தீயவன் படத்தை இயக்க முதலில் என்னிடம்தான் கேட்டனர்.

ஆனால் ஏகன் படம் ஒழுங்காக ஓடவில்லை. அப்போதே இனி படங்களை இயக்கக்கூடாது என முடிவு எடுத்து விட்டேன்.

என் சகோதரர் பிரபுதேவா கடுமையான உழைப்பாளி. இயக்குனராக அவர் வெற்றி பெற்று வருகிறார்.

இயக்குனர் வேலை கடினமானது. என்னால் முடியவில்லை. எனவே நடனத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்த உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Hereafter i wont direct movies says Dance Master Raju Sundaram

‘சூறாவளி’க்காக காட்டுக்குள் கஞ்சா விற்கும் காவல் துறையினர்

‘சூறாவளி’க்காக காட்டுக்குள் கஞ்சா விற்கும் காவல் துறையினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abi Saravanan Manishajith and Thaman Kumar teams up for Sooravaliமலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.

இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர் தான் இயக்குனர் குமார் நந்தா.

மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான ‘பிரஜூஷா (Prajusha)’ கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்தப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா.

கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு V.S. சஜி ஒளிப்பதிவு செய்ய, ராம் இசையமைக்கிறார்.

தொட்டால் தொடரும், சேது பூமி படங்களின் நாயகன் தமன் குமார் & கேரளா நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி படங்களின் நாயகன் அபி சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷாஜித் கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் அருண் பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஒருபக்கம் கஞ்சா விற்கும் கும்பல். இன்னொரு பக்கமோ அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்கு கஞ்சா விற்கின்றனர்.

இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப்படம் விவரிக்கிறது.

கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வரும் ‘ஜூலை 10’ முதல் சுமார் 15 நாட்கள் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்: தமன் குமார், அபி சரவணன், மனிஷாஜித், அருண் பத்மநாபன் மற்றும் பலர்.
தயாரிப்பு: ஷ்யாம் மோகன் – கோல்டன் விங்ஸ் நிறுவனம்
ஒளிப்பதிவு: V.S.சஜி
இசை: ராம்
ஸ்டண்ட்: நாக் அவுட் நந்தா
நடனம்: கூல் ஜெயந்த் & சுரேஷ்
இயக்கம்: குமார் நந்தா

Abi Saravanan Manishajith and Thaman Kumar teams up for Sooravali

Abi Saravanan Manishajith and Thaman Kumar teams up for Sooravali

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரிலீஸாகும் அடிமைப்பெண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mgr jayalalithaa adimai pennஇந்தாண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். வி.ராம்மூர்த்தி ஒளிப்பதிவு. கே.சங்கர் இயக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும்.

எம்.ஜி.ஆர், அடிமைப்பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார். அவரது கட்டுமஸ்தான புஜங்களும், புடைத்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம்,

52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக்காட்டுகிறது.

ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.

சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை’ என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.

வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே.

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.

MGR Jayalalitha starring Adimai Penn Digital version release soon

கமலை ரஜினியாக மாற்றிய டைரக்டர் வெங்கட்பிரபு

கமலை ரஜினியாக மாற்றிய டைரக்டர் வெங்கட்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabu motta bossகமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் நடைபெறும் கலாட்டக்களை பலர் பலர் விமர்சித்து வந்தாலும் தினமும் டிவியில் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான வெங்கட் பிரபு Black Ticket Company in Sneak Peak என்ற பெயரில் ஒரு வீடியோவை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெறும் சில நிகழ்வுகளை கிண்டடிலத்துள்ளனர்.

அவரின் வழக்கமான சென்னை 28 டீம் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இதற்காக மொட்டை பாஸ் என்ற கெட்டப்புடன் வெங்கட் பிரபு வலம் வருகிறார்.

சிவாஜி படத்தில்  ரஜினிகாந்த் மொட்டை பாஸ் ஆக மாறியிருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Are u guys ready!!! Here is the sneak peak!!!

இதோ அந்த வீடியோவின் பதிவு…

 

 

 

More Articles
Follows