‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது.?

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு எப்போது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ஆம் ஆண்டில் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா ஆகியோர் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’.

மேலும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், சுப்பு பஞ்சு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய தூணாக விளங்கியவர் நடிகர் சந்தானம்.

ஆர்யா நயன்தாரா காதல் மற்றும் ஆர்யா சந்தானத்தின் காமெடி இந்தப் படத்தை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கொண்டு சேர்த்தது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போ தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் இரண்டாம் பாக எடுக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வருகிற செப்டம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சமீபத்திய பேட்டில் ஒன்று சந்தானம் தெரிவித்து இருந்தார்.

Boss Engira Baskaran part 2 shoot updates

ரஜினி கஷ்டத்தை புரிஞ்சிப்பார்.; வீட்டை அடமானம் வைத்த ‘ஜெயிலர்’ பட இயக்குனர்

ரஜினி கஷ்டத்தை புரிஞ்சிப்பார்.; வீட்டை அடமானம் வைத்த ‘ஜெயிலர்’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2023 ஆகஸ்ட் 10ஆம் தேதி..: ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதே நாளில் இதே ஜெயிலர் என்ற பெயரில் ஒரு மலையாள படமும் ரிலீஸ் ஆகிறது.

அதுமட்டுமில்லாமல் நாளை ஜூலை 28ஆம் தேதி இரண்டு ‘ஜெயிலர்’ படத்தின் பாடல்களும் ஒரே நாளில் வெளியாகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஜெயிலர் பட கதை:

ரஜினி ஜெயிலராக பணிபுரியும் சிறைச்சாலையில் மிகப்பெரிய குற்றவாளியை திருட்டுத்தனமாக வெளியே எடுக்க ஒரு கும்பல் அலைகிறது.. ரஜினிக்கும் அந்த கும்பலுக்கும் நடக்கும் மோதல் தான் ‘ஜெயிலர்’ படத்தின் கதை எனக் கூறப்படுகிறது.

மலையாள ‘ஜெயிலர்’ படத்தின் கதை :

1957ல் நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு ‘ஜெயிலர்’ உருவாக்கப்பட்டுள்ளது. 5-6 கிரிமினல்கள் ஒரு ஜெயிலரை கொல்ல திட்டம் போடுகிறார்கள். இதில் தியான் சீனிவாசன் ஜெயிலராக நடிக்க சக்கிர் மடத்தில் என்பவர் இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சக்கிர் மடத்தில் என்பவர் இந்த இரு ‘ஜெயிலர்’ பட தலைப்பு குறித்து பேசி இருக்கிறார்.

“நாங்கள் 2021 ஆம் ஆண்டிலேயே ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பை கேரளாவில் பதிவு செய்து விட்டோம். ஆனால் 2022 ஆம் ஆண்டுதான் ரஜினியின் ‘ஜெயிலர்’ பட தலைப்பு வெளியானது.

அதன் பின்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

சன் பிக்சர்ஸுக்கும் ரஜினி அண்ணாவுக்கும் தென்னிந்தியத் திரைப்படச் சங்கத்திற்கும் சேர்த்து கடிதம் எழுதினேன்.

நாங்கள் ‘ஜெயிலர்’ பட டைட்டிலை மாற்ற சொல்லவில்லை. ஆனால் கேரளாவில் மட்டுமாவது மாற்ற வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறோம்.

இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கு ரூ. 5 கோடி செலவானது. எனது வீட்டையும் மகள்களின் நகைகளையும் அடைமானம் வைத்துள்ளேன். காரை விற்றுவிட்டேன். வெளியிலும் கடன் வாங்கியுள்ளேன். வட்டிக் கட்டவே சிரமமாக உள்ளது.

எனது எதிர்காலமே ‘ஜெயிலர்’ படத்தில்தான் அடங்கியிருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை செய்துக் கொள்ளலாமா என்ற எண்ணம் வருகிறது.

ரஜினி அண்ணாவுக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்கள் படம் கேரளாவில் மட்டும்தான் வெளியாகிறது..

ரஜினி அண்ணாவுடன் மோகன்லால் சேட்டனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எனவே மலையாள ரசிகர்கள் முதலில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கு தான் முன்னுரிமை கொடுத்துப் பார்ப்பார்கள்.

ரஜினி அண்ணா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்பவர். எனவே என் கஷ்டத்தை புரிந்து கொள்வார் என நினைக்கிறேன்.” என்ன தெரிவித்திருக்கிறார் ஜெயிலர் இயக்குனர் சக்கிர் மடத்தில்.

இது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்கிர் மடத்தில்

Malayalam Jailer in trouble will Rajini take action

OFFICIAL : சூர்யா – கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் பிரபல ஒளிப்பதிவாளர்

OFFICIAL : சூர்யா – கார்த்தி – அரவிந்த்சாமி கூட்டணியில் பிரபல ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி.

கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

பிசி ஸ்ரீராம்

PC Sreeram to wield the camera for Karthi’s 27th movie

19 வயதில் பிரபல அரசியல்வாதியை திருமணம் செய்த நடிகை குட்டி ராதிகா

19 வயதில் பிரபல அரசியல்வாதியை திருமணம் செய்த நடிகை குட்டி ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கர்நாடகா மாநிலத்தில் பிறந்து. தமிழ், கன்னடம் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா.

குட்டி ராதிகா ஒன்பதாவது படித்துக் கொண்டு இருக்கும் போதே, ‘நீல மேக சியாமா’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்த குட்டி ராதிகா, தமிழில் ‘வர்ணஜாலம்’, ‘மீசை மாதவன்’, ‘உள்ளக்காதல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார்.

கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘இயற்கை’ படத்தில் ஷாம் நடித்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக குட்டி ராதிகா நடித்திருந்தார்.

அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது.

‘இயற்கை’ படத்திற்கு பின் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவார் என்று எதிர்பார்த்த குட்டி ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த 2000ம் ஆண்டு குட்டி ராதிகா தனது 14 வயதில் ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் திடீரென இறந்தார். இவரின் மரணம் குறித்து குட்டி ராதிகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, சர்ச்சையில் சிக்கிய குட்டி ராதிகா, சினிமாவிலும் பொது இடத்திலும் தலைகாட்டாமல் இருந்தார்.

திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்த குட்டி ராதிகா, அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த H.D.குமாரசாமிக்கும் தனக்கும் 2006ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், திருமண விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்பதால், இத்தனை ஆண்டு வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

நடிகை குட்டி ராதிகாக்கு தற்போது 36 வயது,H.D.குமாரசாமிக்கு தற்போது 63 வயது இருவருக்கும் இடையே 27 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், நடிகை குட்டி ராதிகா தன் அப்பா வயதில் இருப்பவரை திருமணம் செய்து கொண்டார் என நெட்டிசன் கூறிவருகின்றனர்.

மேலும், குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

குட்டி ராதிகா

kutty Radhika got married to who was 27 years older than her

சூர்யாவின் ‘கங்கா கங்கா கங்குவா…’ பாடல் வரிகள் இதோ..; புரிஞ்சவங்க பிஸ்தா.?!

சூர்யாவின் ‘கங்கா கங்கா கங்குவா…’ பாடல் வரிகள் இதோ..; புரிஞ்சவங்க பிஸ்தா.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என கூறப்படும் வரும் நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘கங்குவா….’ என்ற பாடல் கிளிப்ஸ் வீடியோ வெளியானது.

இந்தப் பாடல் வரிகள் பல நூறாண்டு காலத்திற்கு முன்பு உள்ள வரிகளை கொண்டிருப்பதால் பலருக்கு இதன் வரிகளின் அர்த்தம் புரியாமல் இருந்தன.

இந்த நிலையில் இதன் பாடல் வரிகளை வெளியிட்டுள்ளார் வசனகர்த்தா மற்றும் பாடலாசிரியரான மதன் கார்க்கி.

“ஆழிக்குள் கொடி நட்ட மாறாக்கன் வழிவந்து

வேழத்த விழவெச்ச கொச்சாமி வழிவந்து

பஞ்சத்தச் செயிச்செடுத்த இளம்பன் வழி வந்த

பெருமலையப் பேத்த தங்கையனுந்த பேரன்

சச்சாங்கனச் சாச்ச செந்தீயினுந்த மவன்

மண்டயாத்து மலயேறி கொண்டலப் புடிக்கவும்

வெங்காட்டு மரமேறி வெண்வேங்க அடிக்கவும்

அரத்தித் தீவேறி அச்சத்தக் காட்டவும்

முக்காட்டுக் களிறேரி திக்கெல்லாம் ஓட்டவும்

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

எங்க கங்கா

ஒருநூறு புலிநகமும் மாரறைய

சருகூரும் உரகங்க நின்னுறைய

கரையூரும் திரையெல்லாம் முகம் வரைய

பெருமாச்சிப் பறையெல்லாம் பேர் பறைய

ஒண்டையே ஒண்ட வீரந்தைன்

சண்டையே ஏங்கஞ் சூரந்தைன்

தீ அவ பெத்தத் தீரந்தைன்

எங்க பெருமாச்சிக்காரந்தைன்

கங்கா கங்கா கங்குவா’…

Gangs Ganga Kanguva song lyrics here

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை விழா ஏற்பாட்டில் விபத்து.; அசாம் இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

ரஜினியின் ‘ஜெயிலர்’ பட இசை விழா ஏற்பாட்டில் விபத்து.; அசாம் இளைஞர் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிசரஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார்.

இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்ற ‘காவலா… தலைவர் அலப்பறை… ஜுஜிபி…’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் நாளை ஜூலை 28ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் மாலத்தீவில் தன் ஓய்வு விடுமுறையை முடித்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

தற்போது ‘ஜெயிலர்’ இசை விழா ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நேரு ஸ்டேடியத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட நபர் மின்சாரம் தாக்கி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அவருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் மாலா (26) என்ற இளைஞர் மின்சாரம் தாக்கியதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த விபத்து நடந்துள்ளதை அடுத்து பெரியமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Accident at Jailer audio launch arrangements spot

More Articles
Follows