‘கெஸ்ட் ரோல் இருக்கு குமாரு…’ ஜிவி. பிரகாஷுடன் ஜீவா

‘கெஸ்ட் ரோல் இருக்கு குமாரு…’ ஜிவி. பிரகாஷுடன் ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and jiivaஇயக்குனர் ராஜேஷ் இயக்கிய எல்லாப் படங்களிலும் கெஸ்ட் ரோலில் ஒரு ஹீரோ வருவார்.

சிவா மனசுல சக்தி தொடங்கிய முதல் இது தொடர்ந்து வருகிறது.

ஜிவி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கடவுள் இருக்கான் குமாரு என்ற படத்திலும் இந்த கெஸ்ட் ரோல் ஸ்டோரி தொடர்கிறது.

இந்த ரோலில் ஜீவா நடிக்கிறார்.

இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் இதுதானா?

ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.ஓ’ பர்ஸ்ட் லுக் இதுதானா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shankar rajinis 2pointO first looked leakedஎந்திரன் படத்தின் மாபெரும் சரித்திர வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இதில் ரஜினிகாந்துடன் அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ரூ. 350 கோடியில் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு பல கெடுபிடிகள் இருந்தாலும் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை பலரும் இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இதனை பார்க்கும்போது யாரோ சில விஷமிகள் செய்துள்ளதாக தெரிகிறது.

அதற்கான காரணங்கள் இவைதான்…

  • பொதுவாக ரஜினி மற்றும் ஷங்கர் பெயர்கள் டைட்டிலுக்கு மேலே வரும் இது கீழே உள்ளது.
  • இவையில்லாமல் ஷங்கரின் பெயர் எல்லாவற்றிற்கும் கடைசியாக உள்ளது.
  • ஆஸ்கர் விருது பெற்ற ஏஆர் ரஹ்மானின் பெயர் 2வது வரியில் உள்ளது.
  • மேலும் டயலாக் ரைட்டர் மற்றும் ரசூல் பூக்குட்டி போன்ற சொற்களில் எழுத்துப்பிழை உள்ளது.

இதனால் நிச்சயமாக இது 2.ஓ படத்தின் பர்ஸ்ட் லுக்காக இருக்க வாய்ப்பில்லை.

அட..செய்யுற தப்பா சரியா பண்ணியிருக்க வேண்டாமா?

ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் சௌந்தர்யா..?

ரஜினியை தொடர்ந்து தனுஷை இயக்கும் சௌந்தர்யா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush soundarya rajiniகலைப்புலி தாணு தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினி புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்பதை முன்பே பார்த்தோம்.

இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? என பெயரிடப்படலாம் எனவும் தகவல்கள் வந்தன.

இப்படத்தில் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையில், மோகன்லால் மகன் பிரணவ்வை நடிக்க நாடியிருக்கிறார்களாம்.

அவர் மறுக்கவே பின்னர் நாகார்ஜூனா அமலா தம்பதியரின் மகனான அகிலை நாட முற்பட்டார்களாம்.

ஆனால் இக்கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரஜினியே சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கு டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம் தனுஷ்.

எனவே, ‘கபாலி’ படத்தின் 100வது நாளில் செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் தகவலை தாணு அறிவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தொடர்ந்து சௌந்தர்யா இயக்கும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வேற லெவலை சொல்வார் ‘பைரவா’ – சுகுமார்

விஜய்யின் வேற லெவலை சொல்வார் ‘பைரவா’ – சுகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay cinematographer sukumarபரதன் இயக்கும் பைரவா சூட்டிங்கில் மும்முரமாக நடித்து வருகிறார் விஜய்.

சில பாடல் காட்சிகளின் சூட்டிங்கை இன்று முதல் தொடங்க விருக்கிறார்களாம்.

படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நவம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையில் விஜய், கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ரொமான்ஸை வெளிநாடுகளில் படமாக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

இந்நிலையில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரியம் சுகுமார், இப்படம் விஜய்க்கு வேற லெவல் படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.

பாட்டு, டான்ஸ், பைட் ஆகிய மூன்றும் விஜய்யின் படங்களின் ஸ்பெஷல். இவை மூன்றும் பைரவா படத்தில் டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இவர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

கீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..?

கீர்த்தி சுரேஷுக்காக இத்தனை ஹீரோஸ் வெயிட்டிங்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshஇன்றைய முன்னணி ஹீரோக்களின் முதல் சாய்ஸ் கீர்த்தி சுரேஷ்தான்.

ஒருவேளை இவரது கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால்தான் மற்ற ஹீரோயின்களை தேடுகிறார்களாம் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள்.

இவரது நடிப்பில் ரெமோ, பைரவா, பாம்பு சட்டை ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் இவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கிறதாம்.

இதனையடுத்து, லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜீனுடன் ஒரு படம், மற்றும் விஷாலுடன் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

இவை தவிர்த்து, ரேனிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கும் விஜய் சேதுபதி படத்திலும் கீர்த்தி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

விட்டா கீர்த்தியை புக் பண்ணிட்டுதான் ஹீரோவை புக் பன்னுவாங்க போலவே…!??!

பார்த்திபனுக்காக கோடிட்ட இடங்களை நிரப்ப வந்த சிம்ரன்

பார்த்திபனுக்காக கோடிட்ட இடங்களை நிரப்ப வந்த சிம்ரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthiban and simranநீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’.

இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

பார்த்திபனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்நிலையில் கெளரவ வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்ரன்.

இதுகுறித்து சிம்ரன் கூறும்போது… “எனக்கு பிடித்த கேரக்டராக இருக்கும்போது ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மற்றபடி என்னை நடிக்கும்படி யாரும் வற்புறுத்த முடியாது” என்றார்.

More Articles
Follows