ராதிகா மகள் ரேயான்-மிதுன் திருமணம்; வாழ்த்திய பிரபலங்கள் யார்?

ராதிகா மகள் ரேயான்-மிதுன் திருமணம்; வாழ்த்திய பிரபலங்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rayane mithun weddingநடிகை ராதிகாவின் மகள் ரயானுக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடைபெற்றது.

மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் திரையுலக பிரபலங்கள் சூழ விமரிசையாக நடைபெற்றது.

நடிகர் சரத்குமார் பட்டு வேட்டி சட்டை அணிந்து தாடியுடன் காணப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் அவரது நெருங்கிய தோழி சசிகலா வந்திருந்து வாழ்த்தினார்.

மேலும் மணமக்களை வாழ்த்தியவர்கள் யார்? யார்? என்பதை பார்ப்போம்.

இயக்குனர் பாரதிராஜா, நடிகர் சிரஞ்சீவி, பிரபு, மணிரத்னம் மற்றும் மனைவி சுஹாசினி, பாக்யராஜ் மற்றும் மனைவி பூர்ணிமா, சிவகார்த்திகேயன், காயத்ரி ரகுராம், வித்யூலேகா ஆகியோரும் நேரில் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக நடைபெற்ற வரவேற்பு விழாவில் விஜய், விக்ரம், சூர்யா, ஜோதிகா, சுந்தர் சி, குஷ்பூ, பிரசன்னா, ஸ்னேகா, ரம்யா கிருஷ்ணன், ப்ரிதா ஹரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஸ்டைல் மன்னன் ரஜினிக்காக காத்திருக்கும் ஸ்டைலிஷ் டைரக்டர்?

ஸ்டைல் மன்னன் ரஜினிக்காக காத்திருக்கும் ஸ்டைலிஷ் டைரக்டர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth styleஇந்திய சினிமாவில் கிங் ஆப் ஸ்டைல் என்றால் அது ரஜினியைத்தான் குறிக்கும்.

இதுநாள் வரை முன்னணி இயக்குனர்கள் படங்களில் நடித்து வந்தார் ரஜினி.

அண்மையில் வெளியான கபாலி படத்தில் வளரும் இயக்குனரான ரஞ்சித் இயக்கத்தில் நடித்தார்.

இப்படம் ரஜினியை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது.

எனவே ரஜினிக்காக கதையுடன் பல புதுமுக இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தை முடித்துவிட்டு கௌதம் மேனன் இயக்கத்தில் ரஜினி நடிக்கக்கூடும் என செய்திகள் கோலிவுட்டில் வலம் வருகிறது.

என்னால நடிக்க முடியாது; சூட்டிங்கை நிறுத்திய விஜய்

என்னால நடிக்க முடியாது; சூட்டிங்கை நிறுத்திய விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay real imageபரதன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்கு தளபதி என்ற பெயர் வைக்கலாம் என முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதன் சூட்டிங் பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் நடைபெற இருந்தது.

விஜய் பட சூட்டிங் நடப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர்.

அப்போது கேரவனை விட்டு வெளியே வந்த விஜய், கூட்டத்தை பார்த்து ஷாக்காகி விட்டாராம்.

நிச்சயமாக இவ்வளவு கூட்டத்திற்கு நடுவே என்னால் நடிக்க முடியாது.

சென்னையில் இதுபோன்று செட் போட்டு சூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி சூட்டிங்கை நிறுத்தி விட்டாராம்.

எனவே செப்டம்பர் 2-ந்தேதி இதன் தொடர்ச்சி காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.

மீண்டும் விநாயகர் சதுர்த்தியில் வேதாளம்; ரசிகர்கள் உற்சாகம்

மீண்டும் விநாயகர் சதுர்த்தியில் வேதாளம்; ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vedalam ajith lakshmi menonஅஜித் நடித்த வேதாளம் கடந்த 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியானது.

இதில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலை போல, வீர விநாயகா வெற்றி விநாயகா பாடலும் சூப்பர் ஹிட்டடித்தது.

விநாயகர் சதுர்த்தி பாடலாக அப்படத்தில் இடம் பெற்றது.

தற்போது மீண்டும் விநாயகர் சதுர்த்தியுடன் இப்பாடல் கனெக்ஷக் ஆகிறது.

அடுத்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரபல டிவி சேனலில் வேதாளம் படத்தை ஒளிப்பரப்ப உள்ளனர்.

தன் பெயரையே குழந்தைக்கு சூட்டிய விஷால்

தன் பெயரையே குழந்தைக்கு சூட்டிய விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal kidநாளை ஆகஸ்ட் 29ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஷால்.

இதனை முன்னிட்டு இவரது கத்தி சண்டை படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாவது குறித்து நாம் முன்பே பார்த்தோம்.

இந்நிலையில் இன்று திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவ முகாமை விஷால் துவக்கி வைத்தார்.

அப்போது அந்த மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு பெயரிட வேண்டினர் ஒரு பெற்றோர்.

அக்குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார் விஷால்.

தேவி, விஷாலின் தாயார் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்-விஜய்க்கு 40…. சிவகார்த்திகேயனுக்கு 10

அஜித்-விஜய்க்கு 40…. சிவகார்த்திகேயனுக்கு 10

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan stillsதல-தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித், விஜய் இருவரும் தற்போதைய தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரங்கள்.

இதனால் இவரது படங்களுக்கு நல்ல மார்கெட் வேல்யூ உள்ளது.

இந்நிலையில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோவான சிவகார்த்தியேனின் படத்திற்கும் நல்ல மார்கெட் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் வெளியாக உள்ள ரெமோ படம் இதுவரை ரூ. 35 கோடி வரை விற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித்,விஜய் ஆகியவர்களின் படங்கள் இந்த வியாபாரத்தை தொட 40 படங்கள் வரை தேவைப்பட்டது.

ஆனால் குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் இந்த வியாபாரத்தை எட்டியிருக்கிறார்.

ரெமோ படம் சிவகார்த்திகேயனின் 10வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows