‘பைரவா’ தமிழ் சொல் இல்லை; வரிவிலக்கு மறுப்பால் கோர்ட்டில் வழக்கு

Vijay Keerthy sureshபரதன் இயக்கத்தில் விஜய் நடித்து உருவான படம் பைரவா.

இப்படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியானது.

இப்படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளித்திருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு வரிவிலக்கு தர மறுத்துவிட்டது.

‘பைரவா’ என்கிற சொல் தமிழ் வார்த்தை இல்லை என்பதால், வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதாக புதுவை அரசின் பொழுது போக்குதுறை ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு….

வரிச்சலுகை மறுக்கப்பட்டதால், புதுவை மாநில விநியோகஸ்தரான ஜி.ஆர்.துரைராஜ், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

எனவே, இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி புதுவை மாநில உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொழுது போக்குத் துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார்.

Puducherry govt refuse to give tax exemption to Bairavaa

Overall Rating : Not available

Latest Post