சிம்பு வீட்டு வாசலில் தர்ணா.; கல்யாணம் கட்டிக்க அடம்பிடிக்கும் ஸ்ரீநிதி

சிம்பு வீட்டு வாசலில் தர்ணா.; கல்யாணம் கட்டிக்க அடம்பிடிக்கும் ஸ்ரீநிதி

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தன்னை பன்முகத் திறமையாளராக வளர்த்துக் கொண்டவர் நடிகர் சிலம்பரசன்.

இவரின் வயது 40 நெருங்கிவிட்ட போதிலும் அவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளை காதலித்து வந்தார்.

ஆனால் அந்த காதல் திருமணம் வரை செல்லவில்லை. அந்த நடிகைகளுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருமணம் நடக்க வேண்டி சிம்பு செய்த பரிகாரம் என்ன தெரியுமா?

சிம்புக்கு அவரது பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் தேடி வருகின்றனர். ஆனாலும் வரன் செட்டாகவில்லை.

இந்த நிலையில் சிம்புவை திருமணம் செய்ய அடம்பிடித்து வருகிறார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

இந்த நடிகை ஸ்ரீநிதி அண்மைக்காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அண்மையில் அஜித் நடித்த வலிமை படத்தை கிண்டலடித்தார்.

அஜித் ஸ்மார்ட்டாக இருந்தார். ஆனால் வலிமை படத்தை பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமையில்லை என பேசியிருந்தார்.

அது அப்போதே சர்ச்சையானது.

இந்த நிலையில் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் ‘ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் மட்டும் தான் மீதம் இருப்போம்’ போல எனக் குறிப்பிட்டு இருந்தார்.

சிம்பு திருமணம் பற்றி கேட்டவுடன் கண்ணீர் சிந்திய டி.ஆர்

இதனையடுத்து சிலர் ஏன். நீங்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளலாமே? என கமெண்ட் அடித்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இத்தனை ஆண்டுகள் சிம்பு சிங்கிளாக இருந்திருக்கிறார் என்பதை என்னால நம்பவே முடியல. எல்லாரும் எங்கள சேர்த்து வைங்க ப்ளீஸ்!…

சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டமா? லவ்வுக்குலாம் போராட்டம் இல்லையா? என ஸ்ரீநிதி பதிவிட்டுள்ளார்.

Protest at Simbu’s doorstep .; Sreenithi who tries to marry simbu

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படம் ஜீன் 3ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி இருப்பதால் விக்ரம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து தளபதி 67 படத்தை இயக்குவது குறித்து அவரே அப்டேட் கொடுத்துள்ளார்.

தளபதி 67 படம் மாஸாக அதே சமயம் கிளாஸாக இருக்கும் என ஒரு விழாவில் லோகேஷ் கனகராஜ் உறுதிப்படுத்தி பேசியுள்ளார்.

Lokesh Kanagaraj talks about Thalapathy 67

விஜய்ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி.; உலக மருத்துவ அரசியலை உலுக்கிய உண்மைச் சம்பவம்

விஜய்ஸ்ரீ ஜி-யின் அடுத்த அதிரடி.; உலக மருத்துவ அரசியலை உலுக்கிய உண்மைச் சம்பவம்

கடந்த 2019ஆம் ஆண்டில் 87 வயதான சாருஹாசனை ஹீரோவாக்கி படம் இயக்கியவர் விஜய்ஸ்ரீ ஜி. அப்போதே சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.

இதன்பின்னர் பிரபல பிஆர்ஓ நிகில் முருகனை கதையின் நாயகனாக்கி பவுடர் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகி வருகிறது. ஜீன் இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து 14 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகிய மோகனை மீண்டும் நாயகனாக்கி ஹரா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக குஷ்பூ நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆதவன், ஜெயக்குமார், ரயில் ரவி, மனோபாலா, ஸ்வாதி, பிருந்தா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

மனோ பிரஹத் ஆகியோர் ஒளிப்பதிவு செய்ய, லியாண்டர் லீ மார்ட்டி இசையைமத்து வருகிறார். குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

கோவையை சேர்ந்த மோகன் என்பவருடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ. ஹரா படத்தை தீபாவளி சமயத்தில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார் விஜய்ஸ்ரீ.

இந்த படம் இந்திய அரசியல் மற்றும் உலக மருத்துவ அரசியலை உலுக்கும் படமாக உருவாகி வருகிறது.

அவரின் ட்விட்டர் பதிவில்…

தசைநார் சிதைவு நோய்க்கான ஊசி 16 கோடி ருபாய்! மருந்தின் விலையுடன் இறக்குமதி வரி, 6 கோடி சேர்த்து, 22 கோடி ரூபாய் !!செலவாகும் என அறிந்தேன்? #பவுடர் #ஹராவுக்கு பிறகு 4 தமிழக குழந்தைகளின் வலி வேதனையை பணத்திற்காக போராடியதை படமாக்காவுள்ளேன்.

என பதிவிட்டுள்ளார்.

இந்த படம் வெளியாகும்போது இது இந்திய மருத்துவம் மற்றும் அரசியல் உலகில் பேசும் பெருளாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்.

கூடுதல் தகவல்….

கடந்த 2021 செப்டம்பரில்… முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தங்களின் 9 மாத குழந்தையை காப்பாற்ற தமிழக அரசு உதவ வேண்டுமென சேலத்தைச் சேர்ந்த பூபதி-ஜெயந்தி தம்பதி முதல்வருக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை உடனடியாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

Vijay Sri g’s next is based on true story

ஹாட்ரிக் வெற்றிக்காக கார்த்தியுடன் இணையும் பிரபல இயக்குநர்

ஹாட்ரிக் வெற்றிக்காக கார்த்தியுடன் இணையும் பிரபல இயக்குநர்

நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர் அருண் ராஜா காமராஜ்.

இவர் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘கனா’ படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார்.

அதன் வெற்றியால் போனி கபூர் தயாரிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தையும் இயக்கினார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இரண்டு வெற்றிகளை தொடர்ந்து அருண் ராஜா இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் வந்துள்ளது.

இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறாராம். பான் இந்தியா படமாக இது உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதைக்களம் எனவும் தெரிய வந்துள்ளது.

ஏற்கெனவே கார்த்தி நடிப்பில் ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகவுள்ளன. இவை மூன்றும் இந்தாண்டுக்குள் ரிலீசாகிறது.

மேலும் ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் விஜய்சேதுபதியும் நடிப்பதாக கூறப்படுகிறது.

Karthi to team up with this director for his next

நட்சத்திர பட்டாளத்தை இணைத்து மீண்டும் படமெடுக்கும் சேரன்

நட்சத்திர பட்டாளத்தை இணைத்து மீண்டும் படமெடுக்கும் சேரன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களில் ஜொலித்தவர் சேரன்.

பிக்பாஸ் என்ற டிவி நிகழ்ச்சிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

சேரன் நடிப்பில் உருவான ‘ஆனந்தம் விளையாடு வீடு’ என்ற படம் கடந்த 2021ல் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியானது.

ஷிவாத்மிகா என் மகள்.. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட சூட்டிங் எனக்கு சொர்க்கம் – சேரன்

நந்தா பெரியசாமி இயக்கிய இந்த படத்தில் கௌதம், ஷிவாத்மிகா, வெண்பா, சரவணன், சௌந்தரராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் படம் இயக்க முடிவெடுத்துள்ளார் சேரன்.

இது வெப் தொடராக உருவாகவுள்ளது. இந்த ஆரி, கலையரசன் மற்றும் திவ்யபாரதி ஆகியோர் நடிக்கின்றனர்.

தழுதழுத்த குரலில் பாரதிராஜா அழைப்பு.. பதறியடித்து ஓடிய சேரன்.; என்ன நடந்தது..?

இவர்களுடன் முக்கிய கேரக்டரில் பிரகாஷ்ராஜ் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் இணைகின்றனர்.

இது வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாம்.

Director Cheran announced his next film

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் மோதும் விஜய்சேதுபதி

ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் மோதும் விஜய்சேதுபதி

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 31ல் விநாயகர் சதுர்த்தி தினத்தன்றும் ‘பொன்னியின் செல்வன்’ படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகிறது.

இத்துடன் வயதான தோற்றத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கார்த்தியின் 24வது படத்தை ‘ஜோக்கர்’, ‘ஜிப்ஸி’ படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்க வருகிறார்.

இதில் கார்த்தியுடன் இணைந்து விஜய்சேதுபதி நடிக்கிறார்.

விஜய்சேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் எனவும் கூறப்படுகிறது.

Karthi and Vijay Sethupathi joins for a new film

More Articles
Follows