‘தொடரி’யை தொடர்ந்து 2 படங்களை இயக்கும் பிரபுசாலமன்

‘தொடரி’யை தொடர்ந்து 2 படங்களை இயக்கும் பிரபுசாலமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhu solomon stillsபிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி இம்மாத (செப்டம்பர்) ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனை தொடர்ந்து, இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கவிருக்கிறாராம் பிரபு சாலமன்.

ஒன்று கும்கி படத்தின் இரண்டாம் பாகம் என்பதை நாம் முன்பே பார்த்தோம்.

இதன்பின்னர் கும்கியின் முதல் பாகத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறாராம்.

முதல் பாகத்தை பார்த்த இந்தி பிரபலம் ஒருவர் இதை இந்தியில் பிரபு சாலமனே இந்தியில் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டாராம்.

சிவகார்த்திகேயன் – ஸ்நேகா கேரக்டர்கள் பற்றி ரெமோ தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் – ஸ்நேகா கேரக்டர்கள் பற்றி ரெமோ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and snehaரெமோ படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் ஆர்.டி.ராஜா.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, ஸ்னேகா, பஹத்பாசில், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

“மோகன் ராஜா இயக்கும் இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை அலசுகின்ற படம்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை இப்படம் பிடிக்கும்.

இதில் உள்ள அனைத்து கேரக்டர்களும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல.

அதுபோல சிவகார்த்திகேயனின் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது.

இதுவரை ஏற்காத வேடத்தை ஸ்னேகா ஏற்றுள்ளார்.

அவருடைய வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும் கேரக்டராக இப்படம் அமையும்.

அவர் யாருக்கும் சகோதரியாகவோ ஜோடியாகவோ நடிக்கவில்லை” என்றார்.

சூப்பர் ஸ்டாருடன் இணையும் யூத் மியூசிக் டைரக்டர்

சூப்பர் ஸ்டாருடன் இணையும் யூத் மியூசிக் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth stillsஷங்கர் இயக்கிவரும் 2.ஓ படத்தை தொடர்ந்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார்.

வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகும் எனத் தெரிகிறது.

இதில் வழக்கமான தன் டெக்னிசீயன்களை ரஞ்சித் பயன்படுத்துவார் என்றும் தெரிகிறது.

ஒளிப்பதிவுக்கு முரளி, படத்தொகுப்புக்கு பிரவீன், கலைக்கு ராமலிங்கம் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்நிலைக்கு இசைக்கு மட்டும், இளைஞர்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கலாம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் சென்னை வந்த பிறகுதான், படத்தின் மற்ற தகவல்களை ரஞ்சித் அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

தெறியுடன் கனெக்ஷன் ஆன ரெமோ

தெறியுடன் கனெக்ஷன் ஆன ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theri remo movie stillsசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கியுள்ள ரெமோ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், படத்தின் விநியோகமும் படு வேகமாக இருக்கிறது.

தற்போது இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதன் கர்நாடகா உரிமையை பிரபல சௌத் சைட் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதே நிறுவனம்தான் அட்லி-விஜய் கூட்டணியில் உருவான தெறி படத்தையும் கர்நாடகாவில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சிட்டார் விஷால்…’ – சுரேஷ் காமாட்சி

‘ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சிட்டார் விஷால்…’ – சுரேஷ் காமாட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishal stillsகன்னா பின்னா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இலங்கை தமிழர்கள் குறித்து சேரன் பேசியிருந்தார்.

இதற்கு சேரன் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விஷால் கூறியிருந்தார்.

தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது…

“ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து என்ற பழமொழி அப்படியே இந்த விஷாலுக்கும் பொருந்தும்.

செலிபிரிட்டி கிரிக்கெட்டில் ஆரம்பித்தது வினை. இந்த அப்பாஸ் ஒழுங்கா இருந்திருந்தா, இந்த ‘புரட்சித் தளபதி’ கேப்டனாயிருக்க வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்.

அங்கேதான் இந்த ‘ஆட்டைக் கடிக்கும் வேலை’ ஆரம்பித்தது. கேப்டனானதும் தெலுங்கில் மட்டுமே மாட்லாடும் ரமணா, விஷ்ணு விஷால் போன்ற இன்னும் சிலரையும் சேர்த்துக் கொண்டு வலம் வர ஆரம்பித்தார் விஷால்.

கிரிக்கெட்டில் கேப்டனானதும், நடிகர் சங்கத்துக்கும் கேப்டனாக ஆசைப்பட்டு நாடகங்கள் நடத்தி பதவிக்கும் வந்தாச்சு. மாட்டையும் கடிச்சாச்சு.

இப்போ குறிக்கோள் தயாரிப்பாளர் சங்கம். வாங்க வேணாங்கல. ஆனா, தயாரிப்பாளர் சங்கத்தையும் தெலுங்கு பேச வச்சிரலாம்னு கனவுலகூட நினைக்காதீங்க ராசா. அதை சிறப்பான தமிழர்களே வழி நடத்துவார்கள்.

நீங்க கொஞ்சம் திரும்பிப் பார்த்து இந்த நடிகர் சங்கத்துக்கு என்னவெல்லாம் சொல்லிப்புட்டு பதவிக்கு வந்தீங்களோ அதை நிறைவேத்தப் பாருங்க.

நடிகர் சங்கத்துல ஒண்ணும் கிழிக்க முடியாத நீங்க, ஏன் தயாரிப்பாளர் சங்க நாற்காலியை நோக்கி இந்த ஓட்டம் ஓடணும்..???

எத்தனை நடிகர் சங்க உறுப்பினர்கள் எவ்வளவு மனக் குமுறலோடு உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா..? போய் அவர்களுக்கு உதவுங்கள். அவர்களை ரட்சியுங்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழர்கள் நாங்கள் ரட்சகனைத் தேடிக் கொள்கிறோம்.

அதுவும் காவிரி, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடிகர் சங்கம் போராடாது என அறிவிப்பு செய்த விஷாலுக்கு இப்போது இலங்கைத் தமிழர்கள் மீது ஏன் அக்கறை பொத்துக்கொண்டு வருகிறது..?

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது வாய் மூடி மவுனித்திருந்த விஷால், வாய் திறந்தது கேரளாவில் நாய்களைக் கொன்றபோதுதானே..? நாய்களுக்கு உயிர் அற்புதமெனக் கருதும் உங்களுக்கு தமிழர்களின் உயிர் என்னவாகப்பட்டது..?

நடிகர் சங்கத்தை தெலுங்கு பேசற சங்கமாக மாற்றி வைத்திருக்கும், நட்சத்திர கிரிக்கெட்டில் தெலுங்கு, கன்னட நடிகர்களுக்கு மட்டும் பாசத்தோடு விமான டிக்கெட் தந்துவிட்டு மற்ற நம் தமிழ் நடிகர்களை புறக்கணித்த உமக்கு எம் தமிழர்களின் இரத்தப் புழுதி பற்றி என்ன தெரியும்..?

அதை விடுங்கள். சேரனைப் பற்றி பேச விசாலுக்கு என்ன தகுதியிருக்கிறது..?

சேரன் யார் தெரியுமா..? இந்த மண்ணின் பதிவாளன். தன் படைப்புகளால் தமிழ் பேசும் உலகெங்கும் தன் காட்சி மொழியை வீசியவன்.

நிகழ்காலத்தில் நிற்கும் களப் போராளி. அன்று இருந்த அரசியல் சூழலில் ஈழம் என்று வாயெடுக்கத் துணியாத பல இன்றைய பேஸ்புக் போராளிகளுக்கு நடுவே அன்றே ஈழ மக்களுக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் சேரனின் குரலும் ஒன்று.

அவன் கோபக்கார பேச்சாளன். மனதில் பட்டதைப் பேசுபவன். அவன் தன் தாய் தமிழ் உறவுகளுடன் என்ன வேண்டுமென்றாலும் பகிர்ந்து கொள்வான்.

மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வான். அவன் ஈழத் தமிழர்களைத் தன் தொப்புள் கொடி உறவாக எண்ணி போராடியவன். அவன் பேசுவது தவறு, சரி என்பதை தாயா பிள்ளைகளா பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நீங்கள் யார் விஷால் இதில் கருத்து சொல்ல…?

ஈழ இரத்தம் சிந்தப்படும்போது ‘செல்லமே’ன்னு கொஞ்சிக்கிட்டும் ‘மதுரைக்காரன்டா’ன்னு பொய் வசனமும் பேசிக் கொண்டிருந்த, உங்களுக்கெங்கே ஈழத் தமிழர் வரலாறும், சேரனின் பங்களிப்பும் தெரியும்..?

சேரன் தன் அண்ணன்களிடமும், தம்பிகளிடம், அக்காக்காக்களிடம், தங்கைகளிடமும் அப்பாக்களிடமும், அம்மாக்களிடமும், அடித்துக் கொள்ளவும் திருத்திக் கொள்ளவும் கை கோர்த்துக் கொள்ளவும் எல்லா உரிமையும் கொண்டவர். அவர் சொன்னதை சரி தவறு என எண்ணெய் விட்டு எரிய வைக்க முயற்சிக்கும் துண்டாடும் சக்தியான நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான நீங்கள் யார் விஷால்..?

இனியேனும் நிம்மதியாக இருக்கட்டும் என்றிருக்கிறீர்களே..? அது என்ன அர்த்தத்தில் சொல்லப்பட்டது..?

இன்னும் விடியலற்ற சுதந்திரக் கனவுகளில் எப்போதாவது சொந்த நிலத்தில் நின்று வான் பார்க்க மாட்டோமா என்ற மனப் பிசைதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மக்களின் உள்மனம் தெரியாத உங்களுக்கு ஏன் இந்த வீண் தலையீடு..?

இத்தகைய பதிவே உங்களுக்கு அரசியல் முதிர்ச்சியோ, அனுபவமோ கிடையாது. சிறுபிள்ளைத்தனமான போக்கில் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற அணுகுமுறையில் பக்குவமற்று பயணிப்பவர் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டது.

முடிந்தால் சேரனிடம் வருத்தம் தெரிவியுங்கள். அதுதான் உங்கள் வரலாற்றிலே கிடையாதே. அதோடு இனியாவது நிம்மதியாக வாழட்டும் என்ற அர்த்தமற்ற உங்கள் இரக்கப் பதிவை சமூக வலைத் தளத்திலிருந்து நீக்கி குப்பையில் போடுங்கள்.

எதுவாக இருந்தாலும் நடிகர் சங்கத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். எங்கள் தமிழ் உறவுகளுக்குள் சிண்டு முடியும் வேலையைச் செய்யாதீர்கள்.”

என்று அறிக்கையில் சுரேஷ் காமாட்சி குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன்-நயன்தாரா கூட்டணியில் ஸ்நேகா

சிவகார்த்திகேயன்-நயன்தாரா கூட்டணியில் ஸ்நேகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sneha and sivakarthikeyan

ரெமோ படத்தை தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தையும் ரெமோ தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கவிருக்கும் இப்படத்தில் நயன்தாரா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் புன்னகை இளவரசி ஸ்நேகா முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows