பிரபுதேவா பெயரை அழித்து பாசிட்டிவிட்டியாக மாற்றிய நயன்தாரா

பிரபுதேவா பெயரை அழித்து பாசிட்டிவிட்டியாக மாற்றிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Positivity tattoos text in Nayantharas left handதென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்கிறார் நயன்தாரா.

இவர் 33 வயதை தாண்டிவிட்டாலும் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவுடன் காதல் கொண்டார். அதன்பின்னர் அது முறிந்து போனது.

பின்னர் பிரபுதேவா காதல் திருமணம் வரை சென்றது. இதற்காக பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்தும் செய்தார்.

ஆனால் இந்த காதலும் முறிந்துபோனது.

பிரபுதேவா உடன் காதல் கொண்டபோது தனது இடது கையில் பிரபு என பச்சைக் குத்திக் கொண்டிருந்தார் நயன்தாரா.

அந்த பச்சையை தற்போது அழிக்காமல் அதை அப்படியே கொஞ்சம் மாற்றி பாசிட்டிவ்விட்டி என பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திலுள்ள நயன்தாராவின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது. அதில் அந்த Positivity பச்சை க்ளியராக தெரிகிறது.

இப்படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Positivity tattoos text in Nayantharas left hand

nayanthara hand positivity

புதுமையான நிகழ்ச்சியை அரங்கேற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்

புதுமையான நிகழ்ச்சியை அரங்கேற்றும் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music director Ramesh Vinayakam going to conduct live stage showஇன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம்.

பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இயக்குனர் ஞான ராஜசேகர் அவர்களின் அற்புதப் படைப்பான ‘ராமானுஜன்’ திரைப்படத்தின் அவரது இசைக்காக தமிழக அரசு அவருக்கு‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வழங்கி கௌரவித்தது.

‘காந்தி’ புகழ் கிங் பென்ஸ்லீ நடித்த ஓர் ஆங்கிலப் படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சியுடைய திரு. ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்னாடக ராகங்களில் அமைந்த கிருதிகளை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து, இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைத்து அவர் இந்நிகழ்ச்சியை வழங்கப் போகிறார்.

சிறப்பம்சமாக, அக்கிருதிகளை புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர்களான அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன், அபிஷேக் ரகுராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண், காயத்ரி வெங்கட்ராகவன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடப் போகிறார்கள்.

இதற்காக திரு. ரமேஷ் வினாயகத்துடன் 50 இசைக் கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில் இம்மாதம் ஜீலை 28ந்தேதி, மாலை 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கான டிக்கெட்டுகள் ‘Book My Show’ தளத்தில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

Music director Ramesh Vinayakam going to conduct live stage show

music director ramesh vinayakam

 

*கோலமாவு கோகிலா*வுக்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள்

*கோலமாவு கோகிலா*வுக்காக காத்திருக்கும் விநியோகஸ்தர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Distributors eagerly waiting for Kolamaavu Kokilaநயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கோலமாவு கோகிலா படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, தனது முடிவில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

இயக்குனர் நெல்சன் கூறும்போது…

“தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை.

மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை.

லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது” என்றார்.

அனிருத்தின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது.

குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.

நயன்தாராவுக்கு இருப்பது வெறும் சாதாரண ரசிகர்கள் மட்டுமல்ல, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அதனால் தான் தமிழ் சினிமாவில் ‘கோலமாவு கோகிலா’வின் வெளியீட்டை வர்த்தகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.” என்றார்.

Tamilnadu Distributors eagerly waiting for Kolamaavu Kokila

சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள உண்மைக்கதை *காயம்குளம் கொச்சுன்னி*

சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள உண்மைக்கதை *காயம்குளம் கொச்சுன்னி*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

When Kayamkulam Kochunni team Embarked On A 150 years Time Travelமோகன்லால், நிவின் பாலி, பிரியா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஸ்ரீகோகுலம் கோபாலன் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் காயம்குளம் கொச்சுன்னி.

தயாரிப்பு செலவின் அடிப்படையில் மிகப்பெரிய படமான, இந்த படத்தின் வெளியீட்டு தேதியை சினிமா வர்த்தகத்தில் அனைவரும் எதிர்நோக்கி வருகிறார்கள்.

“மிகுதியான ஆராய்ச்சி பொருட்கள் கிடைக்கும் பட்சத்தில் பீரியட் படங்களை உருவாக்குவது என்பது எளிது.

ஆனால் மிகவும் சொற்பமான குறிப்புகளை வைத்துக் கொண்டு, 30 நிமிடங்கள் அளவில் கூட சினிமாவை எடுக்க முடியாது.

எனவே இதை வேறு ஒரு விதத்தில் அணுகுவது என்று முடிவு செய்தோம். முடிந்தவரை பல கேள்விகளை திரைக்கதை எழுதும்போது உருவாக்கி, திரைக்கதையை தொடர்ந்தோம்” என்றார் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

“நாங்கள் படத்தின் மைய கதாபாத்திரத்தின் மீது மட்டுமே ஆய்வு செய்யாமல், சில புகழ்பெற்ற மனிதர்களை பற்றிய விஷயங்களையும் அறிந்து கொண்டோம்.

காயம்குளம் கொச்சூன்னி காலத்தில் வாழ்ந்த ஸ்வாதி திருநாள்மற்றும் இதிக்கார பக்கி ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

சர்வதேச தரத்திலான படத்தை கொடுப்பதற்கு இந்த மாதிரியான உழைப்பு அவசியமாக வேண்டும்.

எங்கள் முயற்சியானது, எங்களுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகளை பெற்று தரும் என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் ரசிகர்களின் கற்பனைக்கு விடையாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

When Kayamkulam Kochunni team Embarked On A 150 years Time Travel

Kayamkulam Kochunni team discussion

*சீமராஜா* சிவகார்த்திகேயனுக்கு எதிராக *யு-டர்ன்* அடிக்கும் சமந்தா

*சீமராஜா* சிவகார்த்திகேயனுக்கு எதிராக *யு-டர்ன்* அடிக்கும் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Samantha starring Seemaraja and U Turn movies will clash on same dayஇயக்குனர் பவன் குமாரின் முதல் படமான ‘லூசியா’ மூலை முடுக்கெல்லாம் கன்னட சினிமாவை கொண்டு சேர்க்க, அவரது அடுத்த படமும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமுகப்படமுமான ‘யு-டர்ன்’, கன்னட சினிமாவின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ‘யு-டர்ன்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் பவன் குமார்.

“ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீது தீவிர ஈடுபாட்டை காட்டிய சமந்தா எல்லா புகழும் சேரும். படத்தின் ஒரிஜினல் பதிப்பு ரிலீஸ் ஆகும் முன்பே அவர் இந்த படத்தின் மீது பிணைப்போடு இருந்தார்.

மேலும் படத்தை தானாகவே முன்வந்து விளம்பரப்படுத்தினார்.

குறிப்பாக, அதை ரீமேக் செய்யும்போது, பொருத்தமானவற்றை கண்டறியும் பொறுப்பு மிகப்பெரிய சுமை. ஆனால், சமந்தா அதை எளிதாக்கினார். அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டிய விஷயங்களை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன்.

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவிலான ரசிகர்களைக் கொண்டிருப்பதால், என்னுடைய வேலைக்கு மிகப்பெரிய மைலேஜ் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார் இயக்குனர் பவன் குமார்.

இயக்குனர் பவன் குமார் பற்றி சமந்தா கூறும்போது…

“இந்த படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அது தான் என்னைத் தேர்ந்தெடுத்தது. இது போன்ற வாய்ப்புகளை பெறுவது ஒரு ஆசீர்வாதம், அதை தவறவிட்டால், அது வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வாக இருக்கும்.

நான் அவரது ஒரிஜினல் ‘யு-டர்ன்’ படத்தை பார்த்தபோது, என்னால் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

‘யு-டர்ன்’ படம் வேகம், மர்மம் மற்றும் வலுவான ஒரு பிரச்சினை கலந்த ஒரு கலவை. இது நாம் காணும் ஒரு அன்றாட பிரச்சனையாகும், அது தான் இந்த படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது.

இதில் ஒரு பொதுவான விஷயம், ஒரிஜனல் பதிப்பின் வெற்றியும், அதன் ரீமேக் பதிப்புகளின் வெற்றியும் ஒரே மாதிரியாக இருக்காது.

ஆனால் பவன், முன் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் நடிகர்கள் தேர்வும் மிக முக்கியமானது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்” என்றார்.

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் மற்றும் வி.ஒய். கம்பைன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு ஆகியோர் படத்தை தயாரிக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். பூர்ண சந்திர தேஜஸ்வி இசையமைக்க, சுரேஷ் ஆறுமுகம் எடிட்டிங்கை கவனிக்கிறார். ஏ.எஸ். பிரகாஷ் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேநாளில் தான் சமந்தா நாயகியாக நடித்துள்ள சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படமும் வெளியாகவுள்ளது.

எனவே சமந்தாவின் படமே அவரின் படத்துக்கு எதிராக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Samantha starring Seemaraja and U Turn movies will clash on same day

இவர்தான் விஜயகாந்தின் மருமகளா..? வைரலாகும் போட்டோ

இவர்தான் விஜயகாந்தின் மருமகளா..? வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijayakanth son Shanmuga Pandians girl friend photo goes viralசகாப்தம், மதுரைவீரன் படங்களில் நடித்தவர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன்.

இப்படங்களை தொடர்ந்து தமிழன் என்று சொல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனிடையில் நெதர்லாந்த் நாட்டுக்கு சென்று நடிப்பு பயிற்சி எடுத்து விட்டு சமீபத்தில்தான் சென்னை திரும்பியிருக்கிறார்.

இந்நிலையில், ஒரு பெண்ணுடன் தான் இணைந்திருக்கும் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார் சண்முகப்பாண்டியன்.

அந்த பெண் அவருடன் நெதர்லாந்தில் படித்தவராம்.

சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் படங்களை பதிவிடும் சண்முக பாண்டியன் அந்தத் தருணங்களை மிஸ் செய்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

அவர் இவ்வாறு கூறியதால் இவர்தான் உங்கள் கேர்ள் ப்ரெண்டா? கேப்டனின் மருமகளா? என பலரும் கேட்கின்றனர்.

Vijayakanth son Shanmuga Pandians girl friend photo goes viral

More Articles
Follows