குழந்தையாகவே வாழ்ந்து இறைவனிடம் சேர்ந்து விட்டார்… SPB மறைவுக்கு ராஜ்கிரண் இரங்கல்

குழந்தையாகவே வாழ்ந்து இறைவனிடம் சேர்ந்து விட்டார்… SPB மறைவுக்கு ராஜ்கிரண் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB Rajkiranஎஸ்.பி.பாலசுப்ரமணியன்
அண்ணன்,

கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத
குழந்தையாகவே வாழ்ந்து விட்டு,
இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார்…

ஆகஸ்டு மாசம் 5 ஆம் தேதி,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று, ஒரு காணொளி வெளியிட்டார்.

அதில், “மிக மிக சிறிய அளவிலான
தொற்று தான். வீட்டிலேயே தனிமையில்
இருந்தாலே சரியாகிவிடும்.

ஆனாலும்,
என் குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதால் தான், மருத்துவ மனைக்கு வந்து விட்டேன், வெகு சீக்கிரம் வீட்டுக்கு
வந்துவிடுவேன்” என்று, மிகுந்த
நம்பிக்கையோடும், தெளிவாகவும்
பேசியிருந்தார்…

ஆனால் இன்று…அவர் நம்முடன் இல்லை…

இந்த இழப்பை தாங்க முடியவில்லை.

அண்ணனின் ஆத்மா சாந்தியடைய,
எல்லாம் வல்ல இறைவனிடம்
மன்றாடுகிறேன்…

– நடிகர் ராஜ்கிரண்

Actor RajKiran condolence to SPB demise

உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்

உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu spbஎத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.

சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க… காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள…
உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார்.

குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள்.

என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

அதைப்போல… “காதல் அழிவதில்லை” படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் “இவன்தான் நாயகன்” என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார்.

முதன் முதலில் “இவன் தான் நாயகன்” என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்…

விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே… லவ் யூ

– சிலம்பரசன் T R

Actor STR condolence to SPB Demise

என் குரலாக ஒலித்தீர்கள்.. I will truly Miss you.. SPB மறைவுக்கு ரஜினி இரங்கல்

என் குரலாக ஒலித்தீர்கள்.. I will truly Miss you.. SPB மறைவுக்கு ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini SPBரஜினிகாந்த் படங்களில் அவரின் அறிமுக பாடல்களுக்கு எப்போதும் பெரும் வரவேற்பு இருக்கும்.

அவரின் மாஸான பாடல்களுக்கு முக்கியமான காரணம் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியன் தான்.

இந்த நிலையில் இன்று பாடகர் எஸ்பி.பி. மரணம் அடைந்ததையொட்டி ரஜினி தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்…

உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் என ரஜினிகாந்த் இரங்கல் வீடியோவில் பேசி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

#RIP Balu sir … you have been my voice for many years … your voice and your memories will live with me forever … I will truly miss you …

அவரின் வீடியோவில்….

இன்றைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்புக்குரிய எஸ்.பி.பி நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார்கள். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

எஸ்.பி.பி-யுடைய பாட்டுக்கும் அவருடைய குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவில் இருக்கமாட்டார்கள். அவருக்கு தெரிந்தவர்கள் அவருடைய பாட்டைவிட, அவருடைய குரலைவிட அவரை நிறைய நேசித்தார்கள்.

அதற்கு காரணம் அவருடைய மனிதநேயம். அவரை எல்லாரும் சிறிவர்கள், பெரியவர்கள் என்று பார்க்காமல் மதித்தார்கள். கௌரவம் கொடுத்தார்கள். அன்பு கொடுத்தார்கள். அவ்வளவு பெரிய நல்ல அருமையான அன்பான ஒரு மனிதர். இந்திய திரையுலகம் எத்தனையோ மிகப் பெரிய பாடகர்களை உருவாக்கியிருக்கிறது.

முகமது ரஃபி, கிஷோர் குமார், கண்டசாலா, டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு சிறப்பு எஸ்.பி.பி-க்கு இருக்கிறது. அது என்னவென்றால், அவர்கள் எல்லாமே குறிப்பட்ட ஒரு மொழியில் மட்டுமே பாடினார்கள்.

அதனால், அவர்களை அந்த மொழிக்காரர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், எஸ்.பி.பி பல மொழிகளில் பாடினார்கள். அதனால், அவரை இந்தியாவில் இருக்கிற அனைவருக்குமே தெரியும்.

முக்கியமாக தென்னிந்தியாவில் அவருடைய ரசிகர்களாக இல்லாதவர்களே இருக்கமாட்டார்கள். அவ்வளவு அவரை ரசித்தார்கள். அவருடைய அந்த இனிமையான, கம்பீரமான குரல் இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்கூட நம் மத்தியில் நம் காதுகளில் ஒளித்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், அந்த குரலுக்கான உரிமையாளர் இனிமேல் நம்மகூட இல்லை என்று நினைக்கும்போது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

மிகப் பெரிய ஆத்மா, மிகப் பெரிய பாடகர், மிகப் பெரிய மகான் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நன்றி வணக்கம்.” என பேசியுள்ளார்.

Super Star Rajinikanth mourns legendary singer SPB death

நாலு தலைமுறை குரலாக ஒலித்தவர்.. ஏழு தலைமுறை புகழ் பாடும்…; SPB மறைவுக்கு கமல் இரங்கல்

நாலு தலைமுறை குரலாக ஒலித்தவர்.. ஏழு தலைமுறை புகழ் பாடும்…; SPB மறைவுக்கு கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal spbபிரபல பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார்.

இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

SPB மறைவுக்கு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘வெகுசில பெரும் கலைஞர்களுக்கே தான் வாழும் காலத்திலேயே அவர் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும்.

அப்புகழ் கிடைக்கப்பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி.. நாடு தழுவிய புகழ் மழையில் நனைத்தபடியே அவரை வழி அனுப்பி வைத்த அவரின் அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களின் ஒருவனான என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

அவர், நனைந்த மழையில் என்னையும் நனைய அனுமதித்ததற்கு நன்றி. அவரின் குரலின் நிழல்பதிப்பாக பலகாலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேரு.

பலமொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர், ஏழு தலைமுறைக்கு அவர் புகழ் வாழும்’ என தன் குரலில் பேசி பதிவிட்டுள்ளார்.

I’m honoured to have lived as the shadow of SPB’s voice says Kamal

SPB மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி & முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

SPB மறைவு.. பிரதமர் நரேந்திர மோடி & முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi edappadi palanisamyபிரபல பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார்.

இதனால் இந்திய இசை துறையே கலங்கி நிற்கிறது.

SPB மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. அதில்..

With the unfortunate demise of Shri SP Balasubrahmanyam, our cultural world is a lot poorer. A household name across India, his melodious voice and music enthralled audiences for decades. In this hour of grief, my thoughts are with his family and admirers. Om Shanti.

முதல்வர் இரங்கல்…

ஐந்து தலைமுறைகள் தாண்டி, அரைநூற்றாண்டிற்கும் மேலாக கோடிக்கணக்கான நெஞ்சங்களை தனது காந்தக் குரலால் கட்டிபோட்ட பன்முக ஆளுமை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு திரைத்துறைக்கும், இசையுலகிற்கும் ஈடில்லா பேரிழப்பு! #RIPSPB

என தமிழக முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

PM Modi and TN Cm EPS condoles legendary singer SP Balasubrahmanyam’s death

BIG BREAKING பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் மறைந்தார்

BIG BREAKING பிரபல பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் மறைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sp balasubramaniamகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகரும் பாடகருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் இந்த மாதம் செப்டம்பர் மாத முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்தார்.

நேற்று செப். 24ல் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து சென்றார்.

நாலு தலைமுறை குரலாக ஒலித்தவர்.. ஏழு தலைமுறை புகழ் பாடும்…; SPB மறைவுக்கு கமல் இரங்கல்

அப்போது அவர் கூறும்போது… எஸ்பிபி நலமாக இல்லை. கவலைக்கிடமாக உள்ளார்.

அவர்களது உறவினர்கள் அவர்கள் நம்பும் இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் என சொன்னார்.

இந்த நிலையில் எஸ். பி. பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் சரியாக 1.04PM மணிக்கு இறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்

ஆனால் இன்னும் மருத்துவனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகவில்லை.

இதனையடுத்து எஸ்..பி.பி. சரண் அவர்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Singer Actor SP Balasubramanyam passed away

More Articles
Follows