SPB முதன்முறையாக பாடிய MGR-ன் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சத்யா

SPB முதன்முறையாக பாடிய MGR-ன் ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaஇசையமைப்பாளர் சி.சத்யா இந்த வருடம் ரொம்ப பிசி.
அவர் கைவசம் பத்துப் படங்களுக்கு மேல் வைத்திருக்கிறார்.

அவருடன் ஓர் உரையாடல்….

நான் இசையமைத்த ‘நாங்க ரொம்ப பிசி’ படம் தீபாவளியன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இயக்குநர் பத்ரியின் ‘ஆடுகிறான் கண்ணன்’ தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை.

‘நாங்க ரொம்ப பிசி’ படத்தின் மூலம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம். படத்தில் இரண்டு பாடல்கள், ஒன்று கானா பாடல் இன்னொன்று மூட் சாங். இரண்டும் நன்றாக அமைந்திருந்தன.

இந்தப் படம் தொடங்கி நாற்பத்தைந்து நாட்களில் படம் வெளியாகிவிட்டது. முதலிலேயே பின்னணி இசைக்கு ஒரு வாரம்தான் நேரம் என்று சொல்லிவிட்டார்கள்.

நகைச்சுவைப் படம் என்பதால் படம் நெடுக பின்னணி இசைக்கு அதிக வாய்ப்பு இருந்தது. அதனால் லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் வைத்து பின்னணி சேர்க்கத் திட்டமிட்டு அதற்கு தயாராக இருந்தேன்.

பத்துநாட்களுக்குள் எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுத்தேன். அவ்வளவு நாட்களும் தூங்காமல் இரவு பகலாக வேலை செய்தோம்.

இந்தப்படம், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகம் பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஆனால் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறைவாகவே இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியானால்தான் என் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது கவனம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இப்போது, த்ரிஷா நடிப்பில் லைகா தயாரிப்பில் சரவணன் இயக்கியுள்ள ‘ராங்கி’ தயாராகிவிட்டது. எழில் சார் ஜீ.வி.பிரகாஷ் கூட்டணியில் ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘தீதும் நன்றும்’, ஆரி நடித்துள்ள ‘அலேகா’, ‘அரண்மனை- 3’ ஆகியன இருக்கின்றன.

‘ராங்கி’ படத்தின் பாடல் விரைவில் வெளியாகவிருக்கிறது.

‘அரண்மனை- 3’ படத்தில், சுந்தர் சி சார் படங்களில் இடம்பெறும் கொண்டாட்டமான பாடல்கள் மற்றும் மாஸ் பாடல்கள் இருக்கும். மெலடி பாடலும் இருக்கிறது. மொத்தம் ஐந்து பாடல்கள். மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன.

‘ஆயிரம் ஜென்மங்கள்’, எழில் சார் படம் என்பதால் வேலை செய்கிறோம் என்கிற எண்ணமில்லாமல் குடும்பத்தில் ஒருவரோடு பேசிக்கொண்டிருப்பது போல் பேசிப் பாடல்கள் உருவாக்கினோம்.

ஒவ்வொரு பாடலுக்கும் ‘சூப்பர் ப்ரோ, கலக்கிட்டீங்க ப்ரோ’ என்று ஜீ.வி. மெசேஜ் அனுப்பினார்.

கொரோனா காலத்தில் கொரோனா என்ற சொல்லைச் சொல்லாமலே ‘விழித்திரு தனித்திரு’ என்கிற பாடலை உருவாக்கினேன்.

அஜீத் பிறந்த நாளுக்காக ஒரு பாடல், பெண் காவலர்களுக்காக ஒரு பாடல் ஆகியன உருவாக்கினேன்.
இன்னும் சில பாடல்கள் தயாராக இருக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

அமேசான் இணையத்தில் பிரபல பாடல்களின் ரீமிக்ஸ் தொடர் போல் வெளியிடவிருக்கிறார்கள். அதற்காக எம்ஜிஆர் நடிப்பில் கேவிமகாதேவன் இசையில் எஸ்பிபி பாடிய முதல்பாடலான ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். அது வெளியாகும்போது பெரிய வரவேற்பு இருக்கும்.

2021 ஆம் ஆண்டின் திரைப்பாடல்கள் மற்றும் தனிப்பாடல் தொகுப்புகளில் சத்யாவின் பங்கு பெரிதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Aayiram Nilave Vaa remix by music director Sathya

ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ஹீரோயின்கள் பாஜக.-வில் இணைந்தனர்

ரஜினிகாந்தின் ‘மன்னன்’ பட ஹீரோயின்கள் பாஜக.-வில் இணைந்தனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. வாசு இயக்கிய ‘மன்னன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக விஜயசாந்தி & குஷ்பூ நடித்திருந்தனர்.

தற்போது விஜயசாந்தி & குஷ்பூ அரசியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

விரைவில் ரஜினியும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார்.

அண்மையில் காங். இருந்து விலகி பாஜக.வில் இணைந்தார் குஷ்பூ.

இவரை தொடர்ந்து விஜய்சாந்தியும் இணையவுள்ளார்.

தமிழ் & தெலுங்கில் ஆக்ஷ்ன் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.

அதன்பின்னர் ‘தல்லி தெலங்கானா’ என்னும் தனிக்கட்சியை தொடங்கினார்.

பின்னர் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார்.

இதற்கு அடுத்து பாஜகவிலிருந்து விலகி தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இணைந்தார்.

அங்கிருந்தும்விலகினார்.

அதன்பின் காங். கட்சியின் பிரச்சார குழு தலைவராக செயல்பட்டார் விஜயசாந்தி.

இந்தநிலையில், நேற்று காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார் விஜயசாந்தி.

இந்தநிலையில் பாஜக.வில் இணைய டெல்லி சென்றுள்ளார். அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்கவுள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் விஜயசாந்தி சந்திக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

Khushboo and Vijayasanthi joined in BJP

rajinikanth mannan

rajinikanth mannan

எந்த தொகுதியில் ரஜினி போட்டி..? தேர்தல் பிரசாரத்துக்கு செல்வேன்… – ரஜினி அண்ணன் சத்யநாராயணா பேட்டி

எந்த தொகுதியில் ரஜினி போட்டி..? தேர்தல் பிரசாரத்துக்கு செல்வேன்… – ரஜினி அண்ணன் சத்யநாராயணா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathya narayanan rajinikanthவிரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டுக்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கினார்.

இதனையறிந்த ரஜினி ரசிகர்கள் சத்யநாராயணா வீட்டு வாசல் முன்பு திரண்டனர்.

இதனால் வெளியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி Flying Kiss கொடுத்தார்.

ரஜினி சென்னை சென்ற பின்னர் அவரது சகோதரர் சத்ய நாராயணா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது…

“ரஜினிக்கு எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

இரவு 8 மணிக்கு வந்தார். காலை 5 மணிக்கு கிளம்பி விட்டார். 12 மணிக்கு சென்னை சேர்ந்துவிட்டதாக போனில் பேசி தெரிவித்தார்.

இங்கு கர்நாடக அரசியலில் ரஜினிகாந்தின் பங்களிப்பு இருக்காது. அவரது கவனம் தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கும்.

அவர் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து நாங்கள் பேசவில்லை.

டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பார். நான் தேர்தல் பிரசாரத்துக்கு கண்டிப்பாக செல்வேன்” என்றார்.

Rajinikanth brother Sathya Narayanan about Rajini’s political entry

தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம் என ரஜினி வருத்தம்..; தி.முக ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்

தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம் என ரஜினி வருத்தம்..; தி.முக ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட, 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது… ரஜினி கட்சி பற்றியும்.. திமுக, அதிமுகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க மாட்டார் என தமிழருவிமணியன் கூறியது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பதிலளிக்கும் போது…

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்.

ரஜினி கட்சி அறிக்கை வெளியாகட்டும். பிறகு அது பற்றி பேசலாம்.

‘தமிழருவி மணியனை ஏன் சேர்த்து கொண்டோம்? என ரஜினி வருத்தப்பட்டதாக தனக்கு தகவல் வந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth upset for Tamilaruvi Manian posting says MK Stalin

MK Stalin

அம்மா நிச்சயதார்த்த புடவையை 32 வருடத்திற்கு பிறகு நலங்குக்கு கட்டிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட நடிகை

அம்மா நிச்சயதார்த்த புடவையை 32 வருடத்திற்கு பிறகு நலங்குக்கு கட்டிய ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்சேதுபதி, கவுதம் கார்த்திக் உடன் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் நிஹாரிகா கொனிடேலா.

இவர் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபுவின் மகள் .

நிஹாரிகா & காதலர் சைதன்யா ஜொன்னலகட்டா ஆகியோரது நதிருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்டில் நடைபெற்றது.

இவர்களது திருமணம் நாளை மறுநாள் டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடைபெற உள்ளது.

திருமணத்துக்கு முன் நலங்கு நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

அதில் 32 வருடங்களுக்கு முன்னர் தனது அம்மா நிச்சயதார்த்தத்துக்கு அணிந்த பட்டுப்புடவையை நிஹாரிகா அணிந்துள்ளார்.

அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து மணப்பெண்ணின் தந்தை நடிகர் நாகபாபு கூறுகையில்.

எனது மனைவி அழகாக இருக்கிறார்.. மகள் நிஹாரிகா தேவதையாக இருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Niharika Konidela wears her mom’s engagement saree for a pre-wedding function

Niharika konidela

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ‘மக்கள் செல்வன்’ படத்தில் இணைந்த சம்யுக்தா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ‘மக்கள் செல்வன்’ படத்தில் இணைந்த சம்யுக்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi Samyukthaடெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘துக்ளக் தர்பார்’.

இவர்களுடன் பார்த்திபன், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திலிருந்து அதிதிராவ் விலகியதால் அவருக்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம் ஆனார்.

இப்படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுத 96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரித்து வருகிறது.

அரசியலை மையப்படுத்தி இப்படத்தை உருவாகி வருகின்றனர்.

இந்நிலையில் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தா இணைந்துள்ளார்.

Bigg Boss Samyuktha is on board for Vijay Sethupathi’s tughlaq durbar

More Articles
Follows