சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை SPB பெயரில் வழங்க வேண்டும் – கேயார்

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை SPB பெயரில் வழங்க வேண்டும் – கேயார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB Keyarபாடகர் இசையமைப்பாளர் நடிகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து தயாரிப்பாளர் கேயார் வெளியிட்டுள்ள அறிக்கை:

எஸ்பிபி அவர்களின் மறைவுக் கேள்விப்பட்டதிலிருந்து என்னால் இப்போது வரை வழக்கமான நபராக இருக்க முடியவில்லை.

அந்தளவுக்கு அவருடைய மறைவு என்னை பாதித்துள்ளது. எஸ்பிபி சாருடைய மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளாக அவர் இசையுலகில் ஆற்றியிருக்கும் சாதனையை, வேறு யாரேனும் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.

6 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். பத்மபூஷன் விருதையும் வென்றுள்ளார். இந்த பூலோகத்தில் இசை இருக்கும் வரை எஸ்பிபி அவர்கள் சாகாவரம் பெற்ற சிரஞ்சீவியாக இருப்பார்.

எஸ்பிபி அவர்களின் சாதனையைப் போற்றும் விதமாக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என்பதே என் கோரிக்கை.

அப்படி வழங்கினால் எஸ்பிபி-யின் பெயர் காலத்துக்கும் நிலைத்து நிற்கும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகினரின் கருத்தும் கூட.

நன்றி
கேயார்
27-09-2020

Producer Keyar requests National award juries

தனுஷை அடுத்து பாலிவுட் செல்லும் பரத்.; சல்மான் கான் & பிரபுதேவா கூட்டணியில் இணைந்தார்

தனுஷை அடுத்து பாலிவுட் செல்லும் பரத்.; சல்மான் கான் & பிரபுதேவா கூட்டணியில் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

salman khan prabhu devaஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் அறிமுகமானவர் நடிகர் பரத்.

அதற்கு பிறகு செல்லமே, காதல், பட்டியல், எம்டன் மகன், வெயில், வானம் உள்ளிட்ட கோலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தாண்டு முதலில் பரத் நடிப்பில் ‘காளிதாஸ்’ என்ற படம் வெளியானது.

தற்போது பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாகும் ‘ராதே’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் பரத்.

இந்த படத்தில் திஷா படானி, ரந்தீப் ஹூடா, ஜாக்கி ஷெராஃப், மேகா ஆகாஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பில் தான் கலந்து கொண்டதாக பரத் தெரிவித்துள்ளார்.

Actor Bharath lands a key role in Salman Khan’s Raadhe

அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை.. எஸ்பிபி-யின் கடைசி பாடல் ரஜினி படத்தில்..; இசையால் உருகும் இமான்

அடிமைப் பெண் முதல் அண்ணாத்த வரை.. எஸ்பிபி-யின் கடைசி பாடல் ரஜினி படத்தில்..; இசையால் உருகும் இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

spb immanஇந்திய திரையுலகமே வியக்கும் அளவுக்கு பல சாதனைகளை புரிந்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்.

இவர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார்.

இவரின் 50 வருட திரைப்பயணத்தில் 16 மொழிகளில் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 6 முறை வென்றுள்ளார்

சாந்தி நிலையம் என்ற படத்தில் வரும்
இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலைப் பாடினார் எஸ்பிபி.

ஆனால் அது வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய
ஆயிரம் நிலவே வா… பாடல் வெளிவந்தது.

அதிலிருந்து எஸ்பிபியின் திரைப்பயணம் படு வேகத்தில் ஆரம்பமானது.

எனவே அடிமைப் பெண் படமே அவரின் ஆரம்பமானது. தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் தனது கடைசி பாடலை பாடியுள்ளார்.

எம்ஜிஆர், கமல் உள்ளிட்ட எத்தனையோ ஹீரோக்களுக்கு எஸ்.பி.பி. பாடியிருந்தாலும், ரஜினிகாந்த் அறிமுக பாடல்கள் எஸ்பிபி.க்கு தனி சிறப்பு தான்.

இந்நிலையில், எஸ்.பி.பி. மறைவு குறித்து இரங்கல் தெரிவித்திருந்த இசைமைப்பாளர் டி.இமான், அவருடனான அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

அதில், “எஸ்பிபி சாருடைய மறைவு எத்தனையோ இசை ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றம்.

நம்முடைய எத்தனையோ இரவுகளுக்கு துணையாக இருந்திருக்கிறார்.

என்னுடைய இசைப் பயணத்தில் சின்னதிரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் சரி அவருடன் பணியாற்றியுள்ளேன்.

‘ஜில்லா’ படத்தில் ‘பாட்டு ஒண்ணு’ பாடலை எஸ்பிபி சாரும், ஷங்கர் மகாதேவன் சாரும் இணைந்து பாடியிருப்பார்கள்.

திரையில் விஜய் சாரும், மோகன்லால் சாரும் ஆடியிருப்பார்கள்.

அதன் பிறகு ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார்.

அவருடைய கடைசிப் பாடல் ரஜினி சாருக்காக அதுவும் என்னுடைய இசையில் நடந்திருப்பது என நினைக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.

அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.

எஸ்பிபி சார், பண்பானவர். அற்புதமான மனிதர். இனிமையானவர். அவருக்கு மாற்றே கிடையாது.

மிஸ் பண்ணுவேன் எஸ்பிபி சார். லவ் யூ” என தெரிவித்துள்ளார் இமான்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் அடுத்தாண்டு 2021 கோடை விடுமுறையில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

SPB’s last song is for Rajini’s ‘Annaatthe’ in Imman’s music

காய்ச்சலில் அவதிப்பட்ட SPB.. காத்திருந்த MGR… ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் உருவான அற்புதம்

காய்ச்சலில் அவதிப்பட்ட SPB.. காத்திருந்த MGR… ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் உருவான அற்புதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPB MGR1969 – ஆந்திர மாநிலம் நெல்லூரில் பெற்றோர் இருக்க , சென்னையில் தனது மாமாவின் உதவியுடன், கல்லூரியில் படித்துக்கொண்டே சினிமாவில் பாடல் பாடும் வாய்ப்பை தேடிக்கொண்டிருந்த ஒரு கல்லூரி மாணவர் SPB.

அந்த காலத்தில் பாடலை ரெக்கார்டிங் செய்யும் ஸ்டுடியோவில் A/C வசதிகள் கிடையாது.

AVM ஸ்டுடியோவில் உள்ள ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் SPB ஒரு தெலுங்கு பாடலை பாடிக்கொண்டிருக்க, அதே AVM ஸ்டுடியோவில் வேறொரு சினிமா படப்பிடிப்பிற்காக வந்த எம்.ஜி.ஆர் சிறிது நேர ஓய்விற்காக அங்குள்ள மரத்தடியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு தெலுங்கு டப்பிங் படத்திற்காக தமிழில் டி.எம்.சவுந்திரராஜன் பாடிய பாடலை தெலுங்கில் பாடிக்கொண்டிருக்கிறார் SPB.

அந்த பாடல் எம்.ஜி.ஆரின் காதில் விழுகிறது. தனது உதவியாளரை அழைத்து, ஸ்டுடியோவில் அந்த பாடலை பாடிக்கொண்டிருப்பது யார் என விசாரித்துவர சொல்கிறார் எம்.ஜி.ஆர்.

பாலசுப்பிரமணியம் என்ற ஒரு கல்லூரி மாணவர் பாடிக்கொண்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரிடம் வந்து சொல்கிறார் அவரது உதவியாளர்.

இரண்டு, மூன்று நாட்கள் கடக்கிறது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் SPB தன் நண்பரோடு தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் ஒரு பெரிய கார் வந்து நிற்கிறது. அந்த காரிலிருந்து இறங்கி SPBயின் அறைக்கு வருகிறார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் பத்மநாபன்.

‘எம்.ஜி.ஆரின் அடுத்த படத்தில் நீங்கள் ஒரு பாடலை பாட வேண்டும் என்று விரும்புகிறார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவரை சந்திக்க நாளை காலை ராமாவரம் தோட்ட வீட்டிற்கு உங்களால் வர முடியுமா என கேட்டு வர சொன்னார்’ என்றார்.

நடப்பது கனவா நனவா என யோசிக்க முடியாத நிலையில் இருந்தார் SPB. தமிழில் அதுவரை வெறும் 3 பாடல்களை மட்டுமே பாடியுள்ள தனக்கு சினிமாவின் உச்ச நட்சத்திரம் தேடி வந்து வாய்ப்பு தந்ததை நம்ப முடியாத நிலையில் இருந்தார். நிச்சயம் வருகிறேன் என சொன்னார்.

அப்போது SPBயிடம் டூவீலர்கூட இல்லை, சைக்கிள் மட்டுமே இருந்தது.

மறுநாள் காலை எம்.ஜி.ஆரின் வீடான ராமவரம் தோட்டத்திலிருந்து SPBயை அழைத்து செல்ல கார் வந்திருந்தது.

ராமாவரம் தோட்டத்திற்கு போகிறார் SPB. அங்கு ஏற்கனவே ஒரு குழு அவருக்காக காத்திருந்தது.

படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் MSV, பாடகி சுசிலா, பாடலாசிரியர் புலவர் குழந்தை, அவர்களுக்கு மத்தியில் எம்.ஜி.ஆர் என ஒரு குழுவே இருந்தது.

“என்னுடைய அடுத்த படமான அடிமைப்பெண் படத்தில் நீங்கள் ஒரு பாடலை பாட வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதமா?” என எம்.ஜி.ஆர் கேட்க, சம்மதம் என்கிறார் SPB.

அப்போது SPBக்கு தமிழில் படிக்க தெரியாது என்பதால் பாடல் வரிகளை தெலுங்கில் எழுதிக்கொண்டு பாடுகிறார்.

“ஆயிரம் நில வா, ஓராயிரம் நிலவே வா” என்ற பாடலில் உச்சரிப்பில் மட்டும் ஓரிரு தவறுகளை திருத்துகிறார் MSV.

அன்று நாள் முழுவதும் அங்கேயே பாடலுக்கான ரிகர்ஸல் நடக்கிறது. மூன்று நாள் கழித்து ‘ரெக்கார்டிங்’ வைத்துக்கொள்ளலாம் என சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து SPBக்கு மிக கடுமையான காய்ச்சல். டைபாய்ட்டு காய்ச்சல் வந்திருக்கிறது, அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என சொல்லிவிடுகிறார் மருத்துவர்.

மூன்றாம் நாள் முடிவில் பாடல் ரெக்கார்டிங்கிற்கு அழைத்து செல்ல SPB தங்கியிருந்த இடத்திற்கு கார் வருகிறது. எம்.ஜி.ஆரின் உதவியாளர் வந்து பார்க்கிறார்.

காய்ச்சலில் SPB சுருண்டு படுத்திருக்கிறார். அதை பார்த்துவிட்டு திரும்பப்போய் விடுகிறார்.

SPBக்கு மிகப்பெரிய வருத்தம். தானாக தேடி வந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு இப்படி கைநழுவி போய் விட்டதே என்ற மனவுலைச்சலில் இருக்கிறார்.

நிச்சயம் அதே தேதியில் பாடல் ரெக்கார்டிங் நடந்திருக்கும். எனக்கு பதில் வேறு யாரைவது வைத்து ரெக்கார்டிங்கை முடித்திருப்பார்கள் என நினைத்துக்கொண்டார்.

ஒரு மாதம் கழித்து மீண்டும் SPBயை தேடி எம்.ஜி.ஆரின் உதவியாளர் வருகிறார். ” உங்களுக்கு உடம்பு சரியாகிடுச்சா? மீண்டும் ஒரு முறை டாக்டரை போய் பார்த்துவிட்டு நாளைக்கு AVM ஸ்டுடியோவிற்கு வந்து MGR உங்களை பார்க்க சொன்னார்” என்கிறார்.

எம்.ஜி.ஆர் தனக்கு இரண்டாவதாக ஒரு வாய்ப்பளித்திருக்கிறார். இதை நிச்சயம் நழுவ விடக்கூடாது என நினைத்து மறுநாள் நேரமாகவே AVM ஸ்டுடியோவிற்கு போய் காத்திருக்கிறார் SPB.

எம்.ஜி.ஆர் ஸ்டுடியோவிற்கு வருகிறார். ‘போய்ப் பாடுங்க’ என்கிறார்.

அங்கு போனால் அதே ‘ஆயிரம் நிலவே வா’ பாடல்.
SPBயால் அதை நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? போன மாசமே ரெக்கார்டிங் முடிஞ்சிருக்குமே? எனக்காகவா இத்தனை நாட்களாக காத்திருந்தாங்க? என நினைக்கும்போதே வார்த்தை முட்டுகிறது.

ஸ்டுடியோவிற்கு வெளியே எம்.ஜி.ஆரை நோக்கி ஓடி வருகிறார்.

” சார் நீங்க எனக்கு ரெண்டாவது வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு நினைச்சேன். அதே பாடலை பாட திரும்பவும் வாய்ப்பு கொடுப்பீங்கன்னு நான் கனவிலும் நினைச்சதில்லை” என்கிறார்.

“நான் இந்த பாடலை உங்களுக்கு பதிலா வேற யாரையாவது பாட வச்சிருக்கலாம். அது ஒரு பெரிய விஷயமே இல்லை.

ஆனா நீங்க இந்த பாடலோட ரிகர்சல் முடிந்ததும் உங்க கல்லூரி நண்பர்களிடம் போய், எம்.ஜி.ஆர் படத்துல நான் பாட்டு பாடுறேன்னு சொல்லி இருப்பீங்க. நாளைக்கு படம் ரிலீசாகும்போது அதை பார்க்கும் உங்க நண்பர்களுக்கு நீங்க பொய் சொன்னதுபோல ஆகிடும்.

அதைவிட முக்கியம் உங்களோட சினிமாத் துறை எதிர்காலமே இதோட முடிந்துவிடும். அதனாலதான் நீங்க சரியாகி வரும்வரை உங்களுக்காக பாடல் ரிக்கார்டிங்கை நிறுத்தி வைக்க சொன்னேன்” என்கிறார் எம்.ஜி.ஆர்.

அவர் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னார் SPB. தனது எதிர்காலத்திற்கு அடித்தளமிட்டவர், தனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம் MGR என்கிறார் SPB.

‘ஆயிரம் நிலவே வா’ SPB அவர்கள் தமிழில் பாடிய நான்காவது பாடல், அவரை தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பரப்பிவிட்ட பாடல்.

SPB journey starts with MGR

எஸ்பிபி இறுதி சடங்கில் ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய்

எஸ்பிபி இறுதி சடங்கில் ரசிகரின் செருப்பை கையால் எடுத்து கொடுத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதி சடங்கிற்கு எவரும் எதிர்பாராத தருணத்தில் விஜய் வந்திருந்தார்.

அவர் எஸ்பிபி மகன் சரணிடம் ஆறுதல் கூறி தனது இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொரானாவுக்கு பயந்து கொண்டு பல ஹீரோக்கள் வீட்டிலேயே இருந்த நிலையில் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இன்று காலை முதலே விஜய்யின் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியை நாமும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் விஜய் வருகையை தெரிந்தவுடன் அவரை காண ரசிகர்கள் திரண்டனர்.

இதனால் அஞ்சலி செலுத்திவிட்டு விஜய் திரும்பி செல்லும்போது நெரிசல் ஏற்பட்டது.

உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!

விஜய்யின் ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு நடைபெற்றது.

எனவே காவல் துறையினர் கூட்டத்தை விலக்கி விஜய்க்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

அந்த நெரிசலில் விஜய் ரசிகர் ஒருவர் தனது செருப்பை தவறவிட்டுள்ளார்.

அதை தன் கையால் எடுத்துக் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Vijay takes off the fan’s sandals from ground

Courtesy : Thanthi TV

வசியம் செய்யும் வரம் பெற்றவர் எஸ்பிபி..-மலேசிய முன்னாள் அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

வசியம் செய்யும் வரம் பெற்றவர் எஸ்பிபி..-மலேசிய முன்னாள் அமைச்சர் ஒய்பி. எம் குலசேகரன் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SPBமொழிகளை கடந்து மனித மனங்களை தனது அற்புதமான பாடல்களால் மகிழ்வித்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர், அதிலிருந்து சமீபத்தில் மீண்டாலும் எதிர்பாரதவிதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று இந்த உலகை விட்டு பிரிந்தார்.

அவரது மரணத்திற்கு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

மலேசியாவின் முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் திரு ஒய்பி. எம் குலசேகரன் அவர்கள், எஸ்.பி.பியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது ;

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் பொழுதுபோக்கு துறையில் ஒரு மிகச்சிறந்த கலைஞன். ஈடு இணையில்லாத திறமையான பாடகர். தனது அற்புதமான பாடல்களால் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களை வசியம் செய்யும் நிஜமான வரம் பெற்றவர்.

அவரது இசைப்பயணத்தில் நாற்பதாயிரம் பாடல்களை பாடியுள்ளார். அவர் நம்மைவிட்டு திடீரென பிரிந்துபோனது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய, வருத்தம் தரக்கூடிய மிகப்பெரிய இழப்பு..

அவரது பாடல்களை நாம் நேசிப்பதன் மூலம் அவரது குரல் பல்லாண்டு வாழும்..

அவரது ஆன்மா சாந்தியடையட்டும்..”

என்று குறிப்பிட்டுள்ளார்
ஒய்பி. எம் குலசேகரன்
மலேசியாவின் முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர்

Former Malaysian minister condolence message to SPB

More Articles
Follows