ஆசிய திரைப்பட விருது; ஹாங்காங் செல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

ஆசிய திரைப்பட விருது; ஹாங்காங் செல்லும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ச் 12 ஆம் தேதி ( நாளை ) ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறது ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு,

தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – சிறந்த திரைப்படம்,

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),

சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்

சிறந்த ஆடை வடிவமைப்பு
(ஏகா லக்கானி) ,

ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

இதன்படி இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சார்பாக லைக்கா ஜி்.கே.எம்.தமிழ் குமரன்

மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

Ponniyin Selvan team is in Hong Kong for the award ceremony

Director #ManiRatnam’s Magnum opus #PonniyinSelvan1 gets nominated in 6 categories including Best Picture & Best Music at the prestigious 16th Asian Film Festival to be held on Mar 12. A team led by @gkmtamilkumaran on behalf of Lyca Chairman
#Subaskaran is in Hong Kong for the award ceremony!

@LycaProductions @MadrasTalkies_

‘அயோத்தி’ அபாரம்: சசிகுமார் & மந்திரமூர்த்தியை மனதார பாராட்டிய சீமான்

‘அயோத்தி’ அபாரம்: சசிகுமார் & மந்திரமூர்த்தியை மனதார பாராட்டிய சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

ட்ரைனட் ஆர்ட்ஸ் ரவி தயாரித்த இந்த படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அனைத்து பத்திரிகையாளர்களும் கண்ணீர் விட்டு படத்தை ரசித்தனர்.

மேலும் அயோத்தி திரைப்படம் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அயோத்தி

‘அயோத்தி’ என்ற பெயர் இடம் பெற்றதால் இந்த படம் அரசியல் படமா? என எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இது மனித நேயத்தை உணர்த்தும் ஓர் அழகான காவியம் என படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இந்த படத்தை பார்த்துள்ளார்.

நாயகன் சசிகுமார் & இயக்குனர் மந்திரமூர்த்தி உள்ளிட்ட படக்குழுவினரை மனதார பாராட்டியுள்ளார். அந்த வீடியோ & புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அயோத்தி

Seeman who appreciated watching Ayothi Movie

பிரச்சனை வந்தாலும் வரும் | Ayothi Movie பார்த்து விட்டு பாராட்டிய சீமான் | அயோத்தி | Sasikumar

சூரி நண்பன் வெற்றி வீரனுக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்.; ‘அயலி’ மதனுடன் அடுத்த படம்.!

சூரி நண்பன் வெற்றி வீரனுக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்.; ‘அயலி’ மதனுடன் அடுத்த படம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலாவீடு, விசிறி போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிவீரன் மகாலிங்கம். ஒரு சிறிய இடைவெளிக்கு அப்புறம் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஒன்று, சிவகார்த்திகேயன் நிறுவனம் தயாரிக்க ‘விடுதலை’ நாயகன் சூரி ஹீரோவாக நடிக்கும் படம்.

இந்தப் படத்திற்கு கதை-திரைக்கதை எழுதியிருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம். இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசும்போது…

“சூரியும் நானும் பால்யகால நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து ரகளையா ஒரு கதை பண்ணினோம். பட்ஜெட் பெரிசு. விரைவில் அந்தப் படம் குறித்த அறிவிப்பு வரும்.

‘விடுதலை’ படத்தில் ஒப்பந்தம் ஆனதிலிருந்து ஒரு விசயத்தைச் சொல்லிகிட்டே இருப்பார்.

காமெடியனா என்னை ஏத்துக்கிட்ட மக்கள், இப்போ கதையின் நாயகனா நடிக்கிறத எப்படி. ஏத்துக்கப் போராங்கன்றத நெனச்சாத் தான் கொஞ்சம் பயமா இருக்கு நண்பா’ ன்னு சொல்லிகிட்டே இருப்பார். இப்போ, விடுதலை ட்ரெய்லர் வந்த பிறகு கிடைக்கிற ரெஸ்பான்ஸைப் பார்கிறப்போ மகிழ்ச்சியா இருக்கு. வெற்றிமாறன் சாரோட உழைப்பு அபாரமானது.

இந்நிலையில் சூரியின் அடுத்த படத்தில் தான் கதை திரைக்கதை எழுதி இருப்பது தனக்கும் ஒரு நண்பனாக இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார்.

தெளிவான பார்வையுடன் சொல்லப்பட்ட கதை ஒரு மாபெரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் படமாக்கத் தெரிவு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தனது அடுத்த கட்ட பயணத்திற்கான பாதை சரியானது தான் என்று நம்பிக்கை வந்திருக்கிறது எனவும் சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து ‘சகுந்தலா டாக்கீஸ் ‘பெருமையுடன் வழங்கும் தனது,
“மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ்” சார்பில் புதிய படத்தைத் தயாரித்து இயக்குகிறார்.

அருவி, கர்ணன், கொரில்லா மற்றும் 30க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தற்சமயம் துணிவு, அயலி (வெப் தொடர்), அயோத்தி போன்ற வெற்றி படைப்புகள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று வரும் ‘அருவி’ மதன் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க, ஒரேகட்டமாக படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம் பேசும்போது…

“நான் ஏற்கெனவே இயக்கிய மூன்று படங்கள் மூலம் சில அனுபவங்களைப் பெற்றுள்ளேன். அந்த அனுபவத்தின் துணையோடு நல்ல சினிமாவை மக்கள் கொண்டடியே தீருவார்கள் என்ற முழு நம்பிக்கையுடனும், புது வெளிச்சத்தோடு இப்போது களத்திற்கு வந்திருப்பதாகவும் கூறுகிறார்.

இது முழுக்க முழுக்க நகரம் சார்ந்த பின்னணிக் கதை என்றும், தனது அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் சுவாரசியமான உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாகியிருக்கிறது எனவும், இருபதே நாட்களில் முழு படமும் முடிக்கும் திட்டத்துடன் பணியை தொடங்கி இருப்பதாகவும் கூறுகிறார்.

கதையின் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிப்பில் முத்திரை பதித்த நட்சத்திரங்களைத் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம் எனவும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்’ எனவும் கூறினார் இயக்குநர் வெற்றி வீரன் மகாலிங்கம்.

வெற்றி வீரன் மகாலிங்கம்

Director Vetriveeran Mahalingam 2 movies updates

சஞ்சய் தத்தை தொடர்ந்து ‘லியோ’ சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்

சஞ்சய் தத்தை தொடர்ந்து ‘லியோ’ சூட்டிங்கில் இணைந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இப்படத்தில் தங்களது பாகங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

தற்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் விஜய் உடன் இணைந்துள்ளார்.

இந்நிலையில், அவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் பாபு ஆண்டனியும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.

சமூக ஊடகங்களில், பாபு ஆண்டனி டெல்லி விமான நிலையத்திலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் விஜய் மற்றும் சஞ்சய் தத்துடன் ‘லியோ’ படப்பிடிப்பிற்குச் செல்வதாகக் கூறினார்.

பாபு ஆண்டனி

Malayalam actor Babu Anthony joins the cast of Leo

LEO UPDATE : விஜய் படப்பிடிப்பில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர்

LEO UPDATE : விஜய் படப்பிடிப்பில் பங்கேற்கும் பாலிவுட் நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.

‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது, தற்போது படக்குழு காஷ்மீரில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் ஏற்கனவே ‘லியோ’ படத்தின் தங்களது படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி விட்டார்கள்.

இந்நிலையில், ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க சஞ்சய் தத் தற்போது காஷ்மீர் சென்றுள்ளார்.

மேலும், அவர் காஷ்மீரில் ‘லியோ’ படத்திற்காக இரண்டு வாரங்கள் படப்பிடிப்பில் இருப்பார் தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்

Sanjay Dutt joining sets of the leo film

12 வருட கனவை நிறைவேற்றிய ‘டாடா’; மகிழ்ச்சி வெள்ளத்தில் கவின்

12 வருட கனவை நிறைவேற்றிய ‘டாடா’; மகிழ்ச்சி வெள்ளத்தில் கவின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் நடித்திருக்கும் படம் ‘டாடா’.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

‘டாடா’ திரைப்படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்தப் படம் நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

‘டாடா’ இன்று மார்ச் 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கவின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோவில், “டாடா திரைப்படம் OTT இல் இன்று வெளியாகிறது, மக்கள் எதிர்பார்த்ததை விட திரையரங்குகளில் மக்கள் அளித்த ஆதரவு அதிகம். நல்ல கதை இருப்பதால் திரையரங்குகளில் படத்தின் வெற்றியைப் பற்றி நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. மேலும் எனது 12 வருட கனவு இறுதியாக நனவாகியுள்ளது என்பதை உணர வைத்தது. மக்களை மகிழ்விக்கும் நல்ல படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி விடைபெற விரும்புகிறேன்.” என கூறியிருந்தார்.

டாடா

Kavin says his 12 years dream has come true of dada

More Articles
Follows