தேவர் மகன்2 படத்தலைப்பை மாற்றச் சொல்லும் கிருஷ்ணசாமி

தேவர் மகன்2 படத்தலைப்பை மாற்றச் சொல்லும் கிருஷ்ணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician Krishnasamy threatens Kamalhaasan for Devar Magan 2மக்கள் நீதி மையம் கட்சியின் தவைரும் நடிகருமான கமல்ஹாசன் தன் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

அப்போது விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

விரைவில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

அதனையடுத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிக்கப்போவதாக அறிவித்தார்.

அவர் அறிவிப்பு வந்த சில நாட்களிலேயே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

அவர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

என்னிடத்திலிருந்து இதுபோன்ற ஒரு கடிதத்தை நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உங்களது திரைப்படப் பெயர் விவகாரங்களால் நம்மிடையே மிகப்பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது.

கமல்ஹாசன் என்ற நடிகரை மிகமிக மதிக்க கூடியவன் நான். ஆனால், உங்களது திரைப்படப் பெயர்கள் தமிழ் சாதிகளிடையே பிளவுகளையும், பிரிவினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்ற அடிப்படையில் நான் கடுமையாக எதிர்த்திருக்கிறேன்.

நீங்கள் இப்பொழுது திரைத்துரையிலிருந்து அரசியலுக்கும் அடியெடுத்து வைத்துவிட்டீர்கள். இந்தியர் – தமிழர் என்ற சொற்றொடர்கள் வெளிப்படையாக இருந்தாலும் தமிழர்களிடையே சாதி அடையாளங்களுக்கான பெரும் போர் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நான் கருதினேன்.

தற்போது தேவர் மகன் 2 என்ற படம் எடுக்க இருப்பதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளீர்கள்.

ஏற்கெனவே 1993-களில் நீங்கள் எடுத்த அந்த திரைப்படம் தென்தமிழகத்தின் இரண்டு மிகப்பெரிய சமூக மக்களிடையே பெரிய அளவிலான மோதல்களை ஏற்படுத்தியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

1993-ல் வெளியான உங்களது திரைப்படத்தால் விதைக்கப்பட்ட சாதிய விதையால் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இன்று வரையிலும் சாதிப்போர் நடந்துக் கொண்டே இருக்கிறது.

1993-ல் எந்தப் பெயரில் எடுக்கப்பட்ட படத்தால் சாதிக்கலவரம் உருவாக்கப்பட்டதோ, அதே பெயரில் இப்பொழுது -2 என்று படம் எடுப்பதாகக் கூறுகிறீர்கள்.

பெயர் மட்டுமே முக்கியம், உள்ளே என்ன சொல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. இப்பொழுதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை,

“தேவேந்திரர் மகன்” என்று தங்களுடைய படத்திற்கு பெயரிடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய மதிப்பையும், கவுரவத்தையும் பெற்றுத்தரும்; அந்தப்படமும், நல்லமுறையில் ஓடும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Politician Krishnasamy threatens Kamal to change the title of Devar Magan 2

மீண்டும் மாதவனுடன் சைலன்ட்டாக இணையும் அனுஷ்கா

மீண்டும் மாதவனுடன் சைலன்ட்டாக இணையும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 12 years Madhavan and Anushka romance for Silenceமாதவன் நடித்த ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுஷ்கா.

அதன் பின்னர் ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு உள்ளிட்டோருடன் நடித்து பிரபலமானார்.

அருந்ததி, பாகமதி, பாகுபலி படங்களில் நடித்து ஹீரோயின் கேரக்டர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

இந்நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாதவன் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.

கோனா வெங்கட் தயாரிக்கும் இப்படத்தில் ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்குகிறார்.

சைலன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இதன் சூட்டிங் அடுத்தாண்டு தொடங்குகிறது.

அனுஷ்காவின் பிறந்த நாளான நேற்று அவரின் படம் குறித்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

After 12 years Madhavan and Anushka romance for Silence

Breaking : மதுரையில் அதிமுக எம்எல்ஏ போராட்டம்.; சர்கார் படம் நிறுத்தம்

Breaking : மதுரையில் அதிமுக எம்எல்ஏ போராட்டம்.; சர்கார் படம் நிறுத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ADMK protests in Madurai Demanding removal Sarkar scenesவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நேற்று முன்தினம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியானது.

இப்படத்தில் ஆளும் அதிமுக அரசை விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் உள்ளன.

அதாவது மக்களுக்கு அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் உள்ளது.

இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என அமைச்சர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மதுரையில் அதிமுக ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தலைமையில் சர்கார் படம் திரையிட்டுள்ள திரையரங்கம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

மதுரையிலுள்ள அண்ணாநகரில் சினிபிரியா தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADMK protests in Madurai Demanding removal Sarkar scenes

துப்பாக்கி-கத்தி-சர்கார்: மூன்று படத்திலும் ஒரே டயலாக் சென்டிமெண்ட்

துப்பாக்கி-கத்தி-சர்கார்: மூன்று படத்திலும் ஒரே டயலாக் சென்டிமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thuppakki Kaththi and Sarkar movies has same interval scenesவிஜய் நடிப்பில் உருவான துப்பாக்கி (2012) படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இப்படம் மாபெரும் வெற்றிப் பெறவே கத்தி (2014) படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது.

தற்போது சர்கார் (2018) படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் நேற்று முன் தினம் வெளியானது.

இந்த 3 படத்திலும் ஒரே காட்சியை சென்டிமெண்ட்டாக வைத்துள்ளார்.

இதில் இடைவேளை காட்சிகளில் ஹீரோவுடன் வில்லன் போனில் பேசுவார். அப்போது ஐ யம் வெய்ட்டிங் என விஜய் சொல்வார்.

மூன்று படத்திலும் இதே சென்டிமெண்டில் இப்படியொரு காட்சியை வைக்க வேண்டுமென முருகதாஸ் விரும்பினாரா? அல்லது விஜய் விரும்பினாரா? என்பதுதான் தெரியவில்லை.

Thuppakki Kaththi and Sarkar movies has same interval scenes

6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா?

6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar crossed 100c in box office Will Vijay beat Rajinis recordதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால் அது ரஜினிகாந்த் தான். அவரின் படங்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு உள்ளது.

அண்மைகாலமாக ரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய் வசூல் சாதனை புரிந்து வருகிறார்.

நேற்று முந்தைய நாள் தீபாவளி தினத்தன்று விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் வெளியானது.

இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் 60 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டே நாட்களில் ரூ 105 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

“துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல்” ஆகிய படங்கள் ஏற்கெனவே 100 கோடி வசூலித்த படங்கள் ஆகும்.

இப்போது அந்த வரிசையில் 6வது படமாக ‘சர்கார்’ படமும் இணைந்துள்ளது.

விஜய்க்கு முன்பு ‘சிவாஜி, எந்திரன், கபாலி, காலா’ ஆகிய நான்கு படங்களில் வசூல் மூலம் 100 கோடியை தாண்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

2007 முதல் 2018 வரை கடந்த 11 ஆண்டுகளில் ரஜினி 7 (குசேலன் உட்பட) படங்களை மட்டுமே கொடுத்துள்ளார். அதில் 4 படங்கள் 100 கோடியை தாண்டியுள்ளது.

இந்த 11 ஆண்டுகளில் விஜய் 19 படங்களை கொடுத்துள்ளார். அதில் 6 படங்களில் மட்டுமே 100 கோடியை தாண்டியுள்ளது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Sarkar crossed 100c in box office Will Vijay beat Rajinis record

Breaking : விஜய் முதல் சர்கார் திரையிட்ட தியேட்டர்கள் மீதும் வழக்கு; அமைச்சர்கள் ஆலோசனை

Breaking : விஜய் முதல் சர்கார் திரையிட்ட தியேட்டர்கள் மீதும் வழக்கு; அமைச்சர்கள் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் நேற்று தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் வெளியானது.

பிரபல திமுக கட்சியை சேர்ந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தாலும் இதில் அரசியல் நையாண்டி அதிகமாகவே இருந்தது.

இப்படத்தில் தமிழக அரசையும் தற்போதுள்ள நடைமுறைகளையும் வறுத்தெடுத்திருந்தனர்.

எனவே படத்திற்கு பல விதத்திலும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜீ எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது மற்றொரு அமைச்சராச சி.வி. சண்முகம் அவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது…

சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் வழக்கு பதியப்படும்.

மேலும் சர்கார் படத்தை திரையிட்ட திரையரங்குகள் மீதும் வழக்கு பதியப்படும். என கூறியுள்ளார்.

More Articles
Follows