ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க… ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து ஜிவி. பிரகாஷ்

ப்ளீஸ் இப்படி செய்யாதீங்க… ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GV Prakashஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகமெங்கும் நடந்து வருகிறது.

சேலத்தில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 16 வயது மாணவன் லோகேஷ் காலமானார்.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் அவர்கள் லோகேஷின் படத்தை பதிவிட்டு கூறியுள்ளதாவது….

G.V.Prakash Kumar ‏@gvprakash
தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீங்க . வன்முறை சாலை மறியல் எதுவும் வேண்டாம் . அமைதி போராட்டம் உங்கள் குடும்பம் பற்றி நினைத்துப்பாருங்கள்

Please dont do violence in Jallikattu protest says GV Prakash

lokesh jallikattu

ரஜினி-கமலை இயக்கிய ஷங்கரின் நிஜ ஹீரோக்கள் ‘இவர்கள்தான்’

ரஜினி-கமலை இயக்கிய ஷங்கரின் நிஜ ஹீரோக்கள் ‘இவர்கள்தான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shankarஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இருந்தபோதிலும் வாடிவாசல் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்று வரும் மெரினா பீச்சுக்கு சென்றுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

நான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிக்க சென்றேன்.

இதுபோன்ற எழுச்சியை ஒழுங்கை நான் பார்த்தது இல்லை.

இந்த ஒற்றுமை நிறைய மாற்றத்திற்கு தேவை.

நிஜ ஹீரோக்களை தலை வணங்குகிறேன் என ட்விட்டரில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

Shankar Shanmugham ‏@shankarshanmugh 13m13 minutes ago
I am at marina supporting #jallikattu what a spirit! what a discipline! we need this unity for lot of changes salute to the real heros

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் ஜல்லிக்கட்டு பற்றி லாரன்ஸ்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும் ஜல்லிக்கட்டு பற்றி லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrenceகடந்த நான்கு நாட்களாக தமிழக எங்கும் ஜல்லிக்கட்டு தொடர்பான எழுச்சி போராட்டங்கள் விடிய விடிய நடந்து வருகிறது.

இப்போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு கொடுத்து வந்தார் லாரன்ஸ்.

இந்நிலையில் திடீரென சளி, காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்தபோதே அவர் கூறியதாவது…

“தமிழக முதல்வர் அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளதாக அறிந்தேன்.

இது போராடும் இளைஞர்களுக்கு கிடைத்த முழுமையான வெற்றியில்லை.

அது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும். மீண்டும் தடை வரக்கூடாது” என்றார்.

Raghava Lawrence says Jallikattu law should be permanent

அடுத்த போராட்டத்தை அறிவிக்கிறார் ஜிவி. பிரகாஷ்

அடுத்த போராட்டத்தை அறிவிக்கிறார் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakashஜல்லிக்கட்டு இந்தாண்டு நடக்காது என்ற தெரிந்த உடனே இளைஞர்களை எழுச்சியூட்டும் வகையில் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற பாடலை வெளியிட்டார் ஜி.வி. பிரகாஷ்.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான நடந்த போராட்டங்களுக்கு நேரில் சென்று ஆதரவு கொடுத்து வந்தார்.

தற்போது ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் நிறைவேறும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகளுக்கான போராட்டத்தை தொடங்க விருக்கிறார்.

இதுதொடர்பான அறிவிப்பை ஜனவரி 21ஆம் தேதி மாலை வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash
Next step is for farmers will announce the plan tomm evening … good days ahead

After Jallikattu protest GV Prakash going to announce next

இளைஞர்களுக்கு அடிப்பணிந்தது மத்திய அரசு… ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல்

இளைஞர்களுக்கு அடிப்பணிந்தது மத்திய அரசு… ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jallikattuஜல்லிக்கட்டை நடத்திட வேண்டும் என தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நான்கு நாட்களாக இப்போராட்டம் வரலாறு காணாத வகையில் உருவாகி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு இளைஞர்களின் போராட்டங்களுக்கு அடிப்பணிந்து அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டம், சுற்றுக்சுழல் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க கவர்னர் நாளை தமிழகம் வருகிறார்.

தமிழக அரசு அனுப்பியுள்ள அவசரச் சட்டத்துக்கான வரைவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

வரைவானது தற்போது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இது நிரந்தரமான சட்டமா? என்பதுதான் தெரியவில்லை.

Central Govt clears TN Govt ordinace for Jallikattu

பெப்சி-கோக் விற்க மாட்டோம்.. பிரபல திரையரங்கம் அறிவிப்பு

பெப்சி-கோக் விற்க மாட்டோம்.. பிரபல திரையரங்கம் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pepsi Coke cool drinksதியேட்டர்களில் சினிமா பார்க்க சென்றால், டிக்கெட் விலையை விட கூல் ட்ரிங்ஸ் மற்றும் பர்கர் போன்றவைகளின் விலையே அதிகமாக உள்ளது.

இவையனைத்தும் வெளிநாட்டு பானங்கள் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பான அறப்போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்து வருகிறது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இனி வெளிநாட்டு பானங்களை எங்கள் தியேட்டரில் விற்கமாட்டோம் என ராமநாதபுரத்தில் உள்ள D சினிமாஸ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Pepsi Coke Sales wont be there at tamil nadu theatres

More Articles
Follows