‘அடுத்தவன் கால நக்குறவன பத்தி எனக்கென்ன.?’ – ஜிவி. பிரகாஷ்

‘அடுத்தவன் கால நக்குறவன பத்தி எனக்கென்ன.?’ – ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash kumarகடந்த சில நாட்களாகவே ஜி.வி. பிரகாஷுக்கும் மற்ற சில நடிகர்களின் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் மோதல் வலுத்து வருகிறது.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் மற்ற நடிகர்களை கலாய்க்கும் படியான காட்சிகள் இருந்ததால், தற்போது இது தீவிரமடைந்துள்ளது.

மேலும் அஜித் ரசிகர்களோடு கடுமையாக வாக்குவாதம் செய்து வந்தார்.

எனவே அஜித் ரசிகர்கள் ஒன்றினைந்து ஜிவி. பிரகாஷ்க்கு எதிராக சில (#FrustratedPsychoGvPrakash) ஹேஷ்டேக்குகளை கிரியேட் செய்து, இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இந்நிலையில் நான் இங்கே வேலை பார்ப்பதற்காக மட்டுமே வந்துள்ளேன்.

அடுத்தவன கால நக்குறவன பத்தி எனக்கு எனக்கென்ன?

ஒருவரை பின்பற்றுவது என்னுடைய சாய்ஸ்” என கடும் கோபத்துடன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

G.V.Prakash Kumar ‏@gvprakash
I am here for my profession & not to whine about who licks ones foot. I follow some one & that’s my choice you can’t whine on it either

‘சிங்கமாக மாறிய கமல்ஹாசன்…’ அக்ஷராஹாசன் ஹாப்பி

‘சிங்கமாக மாறிய கமல்ஹாசன்…’ அக்ஷராஹாசன் ஹாப்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Akshara Haasanதன் அப்பா, அக்கா வழியில் சினிமா துறையில் நடித்து வருகிறார் அக்ஷாராஹாசன்.

தற்போது அஜித்துடன் தல 57 படப்பிடிப்புக்காக பல்கேரியா நாட்டில் இருக்கிறார்.

இதனிடையில் ரசிகர்களுடன் இணையத்தளத்தில் கலந்துரையாடி இருக்கிறார் அக்ஷராஹாசன்.

அப்போது ஒரு ரசிகர் இவரின் அப்பா நடிகர் கமல் பற்றி நலம் விசாரித்திருக்கிறார்.

அப்பா எப்படி இருக்காரு என்று கேட்டுள்ளார்.

அதற்கு அக்ஷாராஹாசன்… சிங்கம் மாதிரி இருக்கிறார் என்று பதிலளித்துள்ளார்.

இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

இன்று இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம் ரெமோ.

எதிர்பார்ப்பை போலவே, படமும் வசூலில் சாதனை படைத்தது.

இது வெளியாகி இன்றுடன் 50வது நாளை கொண்டாடி வருகிறது.

இன்னும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு இன்று ரிலீஸ் ஆகிறது.

எனவே, இந்த இரண்டையும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘ஜெயம்’ ரவியை செலக்ட் செய்த எம்ஜிஆர் பிக்சர்ஸ்

‘ஜெயம்’ ரவியை செலக்ட் செய்த எம்ஜிஆர் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayam raviஎம்ஜிஆர் நடித்த, உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், அடிமைப் பெண் உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் எம்ஜிஆர் பிக்சர்ஸ்.

அவரின் மறைவுக்குப் பிறகு இந்நிறுவனம் படங்களைத் தயாரிப்பதை நிறுத்திக் கொண்டது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

எனவே அதற்கான நாயகனை தேடுதல் வேட்டையில் இந்நிறுவனம் இறங்கியது.

அதன்படி புதிய படத்தில் நடிக்க ’ஜெயம்’ ரவியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை கொடுக்கும் சிவகார்த்திகேயன்?

மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை கொடுக்கும் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan‘ரெமோ’ படத்தின் வெற்றி விழாவில் தனக்கு நிறைய இடைஞ்சல்களை சிலர் செய்து வருகின்றனர் என சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க பேசினார்.

இப்பிரச்சினை எழ முக்கிய காரணமானவர்களில் வேந்தர் மூவீஸ் மதனும் ஒருவர் என கூறப்பட்டது.

அதாவது வேந்தர் மூவிஸ்க்கு படம் செய்து தருவதாக ஒப்புக் கொண்ட சிவகார்த்திகேயன் ரூ. 3 கோடியை பெற்றதாக சொல்லப்பட்டு வருகிறது.

ஒருவேளை அவர் ஒப்புக் கொள்ளாவிட்டால், அப்பணத்துடன் வட்டியை சேர்த்து, ரூ. 9 கோடியை அவர் திருப்பித் தர வேண்டும் என திரையுலகைச் சேர்ந்த பலர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த மிரட்டலுக்கு பயந்து ரூ. 9 கோடியை திருப்பி கொடுக்க சிவகார்த்திகேயன் கொடுக்க முன்வந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஒருபுறம் இருக்க, வேந்தர் மூவிஸ் மதன் சிறையில் இருப்பதால், அப்பணத்திற்கு சிலர் சொந்தம் கொண்டாட உள்ளதாக திரையுலக புள்ளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அது எஸ்ஆர்எம் யுனிவர்சிட்டி மாணவர்களின் கல்வி பணம் என்பதால், அதை மற்றவர்கள் அபகரிக்க விட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து ஆன திலீப்-காவ்யா மாதவன் இன்று திருமணம்

விவாகரத்து ஆன திலீப்-காவ்யா மாதவன் இன்று திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dileep marry Kavya Madhavanபிரபல மலையாள நடிகரான திலீப் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியை 1998ல் காதலித்து திருமணம் செய்துக் கொண்டர்.

16 வருடங்கள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இவர்களின் பிரிவுக்கு நடிகை காவ்யா மாதவன் காரணம் என கூறப்பட்டது.

இதனிடையில் நிஷால் சந்திரா என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டில் மணந்தார் நடிகை காவ்யா மாதவன்.

ஆனால் இவர் தனது கணவரை இரண்டே ஆண்டுகளில் (2011) பிரிந்தார்.

இந்நிலையில் வெவ்வேறு மண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற இவர்கள் தற்போது இணைந்து வாழ முடிவு செய்து, இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.

இவர்களின் திருமணம் இன்று கொச்சியில் நடைபெறுகிறது.

விஜயகாந்துடன் ராஜ்ஜியம் தமிழ் படத்தில் நடித்தவர் திலீப்.

காசி படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்தவர் காவ்யா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

தற்போது திலீப்புக்கு வயது 48. காவ்யாவுக்கு வயது 32 என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows