பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக அங்கீகாரம்

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக அங்கீகாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

Parthiban’s Iravin Nizhal gets new recognition

5 மொழிகளில் உருவான ‘டூ ஓவர்’ டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்

5 மொழிகளில் உருவான ‘டூ ஓவர்’ டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது.

நடிகர் பிரசாந்த் ‘டூ ஓவர்’ படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டரை வெளியிட்டார்.

ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் சரவணன் “டூ ஓவர்” திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

ஷார்வி எழுதி இயக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான திரைப்படம் டூ ஓவர். படித்தவர் ஆனால் வேலையில்லாதவர் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை.

ஒரு மனிதனின் வேலையுடனான உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர்.

குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்தொகுப்பு கே.வி.செந்தில் இணை இயக்கம் ஏ.பி.சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது ‘டூ ஓவர்’!

Prashanth released Do Over movie first look poster

தமிழே இணைப்பு மொழி – ஏஆர் ரஹ்மான்.; தமிழால் இணைவோம் – சிம்பு & அனிருத்

தமிழே இணைப்பு மொழி – ஏஆர் ரஹ்மான்.; தமிழால் இணைவோம் – சிம்பு & அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன்பு ‛‛இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசனின் பாடலை குறிப்பிட்டு, ‛ழ’ கரத்துடன் போட்டோவை பதிவிட்டு, தமிழணங்கு என பதிவிட்டார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா, ‛‛ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தி இருக்கனும்” எனத் தெரிவித்தார்.

ஒரு மொழியை கற்பது தவறல்ல. ஆனால் மொழி திணிப்பதை ஏற்க மாட்டோம் என பலர் கருத்து தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் நடந்த CII – சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ரஹ்மான், ‛‛தமிழ் படங்களை எங்கு பார்த்தாலும் நாம் பெருமைப்பட வேண்டும்.

ஒரே இந்தியா தான். வட இந்தியா, தென் இந்தியா என்றில்லை” என்றார்.

மேலும் ‛‛இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியது பற்றிய கேள்விக்கு… ‛தமிழ்தான் இணைப்பு மொழி’ என்று சொன்னவர் ரஹ்மான்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 12ல் நடிகர் சிம்பு & இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தமிழால் இணைவோம் #TamilConnects எனப் பதிவிட்டுள்ளனர்.

STR and Anirudh take strong political stand following AR Rahman

சிரஞ்சீவி & ராம்சரண் நடிப்பில் உருவான ‘ஆச்சார்யா’ படம் ட்ரைலர் வெளியானது

சிரஞ்சீவி & ராம்சரண் நடிப்பில் உருவான ‘ஆச்சார்யா’ படம் ட்ரைலர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி & அவரது மகன் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆச்சார்யா’.

இவர்களுடன் காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

திரு ஒளிப்பதிவு செய்ய மணிசர்மா , இசையமைத்துள்ளார்.

கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றியுள்ளார்.

மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான இந்தப்படம் கடந்த ஆண்டே வெளியாக இருந்தது.

ஆனால் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தள்ளிப் போனது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை இன்று ஏப்ரல் 12ம் தேதி அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ‘ஆச்சார்ய்யா’ படம் வருகின்ற 29-ம் தேதி ரிலீசாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chiranjeevi – Ram Charan starrer Acharya Trailer is out

ரசிகர் மன்றங்களை தனியாக பிரிக்கும் சூர்யா கார்த்தி.; இதான் காரணமா?

ரசிகர் மன்றங்களை தனியாக பிரிக்கும் சூர்யா கார்த்தி.; இதான் காரணமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலும் சினிமா துறையில் ஒரு நடிகரின் வாரிசு அல்லது ஓர் இயக்குனரின் வாரிசு அவ்வளவாக ஜொலிப்பதில்லை.

ஆனால் எஸ்ஏசி – விஜய் இருவரும் தங்கள் துறைகளில் பல உயரங்களை அடைந்துள்ளனர்.

அதுபோல் சிவகுமாரின் மகன்கள் இருவரும் சில உயரங்களை தொட்டு வருகின்றனர்.

சூர்யா & கார்த்தி இருவருக்கும் தமிழ் & ஆந்திரா சினிமாவில் நல்ல மார்கெட் உள்ளது.

ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

ஆனால் பெரும்பாலான இவர்களது ரசிகர் மன்றங்கள் ஒன்றாகவே இயங்கி வந்தன.

ஆனாலும் தங்கள் சமூக சேவை பணிகளை தனித்தனி அறக்கட்டளை மூலமே நடத்தி வந்தனர்.

சூர்யா அகரம் பவுண்டேஷனையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் தனித்தனியாக நடத்துகின்றனர். சூர்யா கல்விக்காகவும் கார்த்தி விவசாயத்திற்காகவும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தங்கள் அறக்கட்டளைகளை போல ரசிகர் மன்றங்களையும் தனியாக பிரித்து செயல்பட அறிவுறுத்தி உள்ளனர்.

இது தங்கள் படங்களின் தனி தனி வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும் என திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and Karhi separates his fan clubs

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

ஏப்ரல் 13 ‘பீஸ்ட்’ ரிலீசில் சிக்கல்.; அரசு தடையால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி விஜய்
நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை ஏப்ரல் 13ல் ரிலீசாகிறது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, டான்சர் சதீஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் மிக உற்சாகமாக ரெடியாகி வருகின்றனர்.

ட்ரைலர் ஒரு மாரி. படம் வேற மாரி.; ‘மணி ஹெய்ஸ்ட்’ & ‘கூர்கா’ மாதிரியா..? – நெல்சன் விளக்கம்

இந்நிலையில் இப்படத்தில் பயங்கரவாத வன்முறை காட்சிகள் இருப்பதாலும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டியதாலும் குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து கத்தார் நாட்டிலும் இப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இது குவைத் கத்தார் நாடுகளில் வசிக்கும் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Thalapathy Vijay’s Beast banned in Qatar

More Articles
Follows