ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

ஒரே படத்திற்காக மீண்டும் சூர்யாவுடன் இணையும் பாலா & சுதாகொங்கரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலா இயக்கவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல்களை ஏற்கெனவே நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

மீனவர்களின் கடல் சார்ந்த பிரச்சனைகளை இந்த படம் பேசவுள்ளது.

எனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், புதுச்சேரி, கோவா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இப்பட படப்பிடிப்பை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இதில் ஜோதிகா மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்பட நிர்வாக தயாரிப்பாளராக சுதா கொங்கரா பணிபுரிய உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இப்பட பணிகளை முடித்துவிட்டு ’சூரரைப்போற்று’ பட ஹிந்தி ரீமேக் பணிகளை சுதா கொங்கரா மேற்கொள்வாராம்.

சூர்யா நடித்த ’சூரரைப் போற்று’ படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

அதுபோலு சூர்யா நடித்த ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களை பாலா இயக்கியிருந்தார்.

தற்போது இவர்கள் மூவரும் ஒரே படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகும் எனத் தெரிகிறது.

Director Bala and Sudha Kongara joins for a new film

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்-அனிருத் இணைந்து தரும் மாஸ் ட்ரீட்

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ்-அனிருத் இணைந்து தரும் மாஸ் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’மாறன்’ படம் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி மோசமான விமர்சனங்களை பெற்றது.

தற்போது தனுஷின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ பட அப்டேட் கிடைத்துள்ளது.

இந்த படத்தை ஜூலை மாதம் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதில் தனுஷ் உடன் நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷின் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார்.

Dhanush and Anirudh combo new film update is here

மஞ்சிமாவை மறுத்த பிரபலம்..; இன்னாது வேண்டாம்ன்னு சொல்லிட்டாரா?

மஞ்சிமாவை மறுத்த பிரபலம்..; இன்னாது வேண்டாம்ன்னு சொல்லிட்டாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு உடன் ‘அச்சம் என்பது மடமையடா’, உதயநிதியுடன் ‘இப்படை வெல்லும்’ மற்றும் கௌதம் கார்த்திக்குடன் ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மஞ்சிமா மோகன்.

இந்த சூழ்நிலையில் கௌதம் கார்த்திக்குடன் மஞ்சிமா காதல் கொண்டுள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால் இந்த செய்திக்கு சமீபத்தில் மறுப்பு தெரிவித்தார் மஞ்சிமா.

இவர் அண்மையில் வெளியான விஷ்ணு விஷாலின் ‘எப்ஃஐஆர்’ படத்திலும் 3 நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

இந்த நிலையில் ‘எப்.ஐ.ஆர்’ பட இயக்குனர் மனுஆனந்த் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

இதனையடுத்து மனு ஆனந்திடம் உதவி இயக்குநர்களாக பணி புரிய வேண்டுமா? என விளம்பரம் கொடுக்கப்பட்டது.

எனவே… “மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தெரிவித்து… நான் ஏற்கனவே விண்ணப்பித்தேன். ஆனால் என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார்” என மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.

மஞ்சிமா பதிவுக்கு மனு ஆனந்த் கொடுத்த பதில் பதிவில்… ’நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை என்றும் ஒருவேளை இமெயிலில் அது தவறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

This director rejects Manjima Mohan to this project

3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்

3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின்னர் கடந்த 2019ல் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 3 வருடங்களாகவே நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் காத்து கிடக்கின்றன.

கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பதிவான வாக்குகள் அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு நாளை மார்ச் 20 சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை மதியம் அல்லது மாலைக்குள் நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.

Nadigar Sangam election result will be announced tomorrow

‘கள்ளன்’ டைட்டிலுக்கு எதிர்ப்பு.. பெண் இயக்குனரிடம் ஆபாச பேச்சு…; சாதி அமைப்புகளை சாடிய சந்திரா

‘கள்ளன்’ டைட்டிலுக்கு எதிர்ப்பு.. பெண் இயக்குனரிடம் ஆபாச பேச்சு…; சாதி அமைப்புகளை சாடிய சந்திரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் நேற்று (18.03.2022) வெளியாகியிருக்கும் கள்ளன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட விடாமல் சில சாதி அமைப்புகள் திரையரங்கு உரிமையாளர்களை மிரட்டி வருகின்றன.

‘கள்ளன்’ என்ற சொல்லை டைட்டிலாக வைக்கக் கூடாது என நீதிமன்றத்தில் இந்த சாதி அமைப்புகள் வழக்கு தொடர்ந்து அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் சாதி அமைப்புகள் கள்ளன் திரைப்படத்தை திரையிடவிடாமல் தடுத்து வரும் செயலைக் கண்டித்து படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இது குறித்து பேசிய இயக்குனர் சந்திரா தங்கராஜ்…

“நல்லாட்சி நடந்து கொண்டிருக்கும் பெரியார் மண்ணில் சாதி அமைப்புகளின் ஆதிக்கம் தலை தூக்க விடாமல் முதலமைச்சர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். மேலும் கள்ளன் என்ற தமிழ் சொல் திருடர்களை தான் குறிக்கிறது. ஏற்கனவே திருடன், கள்வர் போன்ற பெயர்களில் படங்கள் உள்ளதால் கள்ளன் என்ற சொல்லை டைட்டிலாக வைத்ததாக அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜாதி அமைப்பைச் சேர்ந்த ஒரு தலைவர் என்னுடைய அலைபேசி எண்ணை பொதுவெளியில் அனுப்பியிருக்கிறார். அவர்கள் பின்னிரவு நேரங்களில் போன் போட்டு ஆபாசமாகப் பேசுகிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருத்தர் ஆபாச படங்களை அனுப்பி இது போல் எனக்கும் பண்ண முடியுமா என்று கேட்கிறான்

கடந்த ஒரு மாதமாகவே இது போல் ஆபாச தாக்குதல் நடத்துகிறார்கள். இதுதான் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கிற மரியாதை” என்று கண் கலங்கினார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில்…

” ஒட்டுமொத்த தமிழ் திரையுலக பிரச்சினை இது. என் தனிப்பட்டப் பிரச்சனை அல்ல. எனவே இதை புரிந்து கொண்டு தமிழ் திரைப்படத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இந்த வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து இந்த படம் திரையரங்கில் வெளியிடுவதற்கு ஆவண செய்ய வேண்டும்.

இந்த திரைப்படத்திற்கு தணிக்கை துறை முறையாக ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இதற்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அது மட்டுமின்றி இந்த அமைப்புகள் கேட்டபடி வருத்தம் தெரிவித்து கடிதமும் கொடுத்துள்ளோம். இத்தனைக்கும் பிறகும் சில சாதி அமைப்புகள் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் மிரட்டுவது அநீதியின் உச்சம்.

இனிமேல் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சாதி அமைப்புகளின் விதிகளுக்கு உட்பட்டு தான் படம் எடுக்க வேண்டுமென்றால் சென்சார் போர்டு எதற்கு? நாங்கள் எங்களுக்காக மட்டும் பேசவில்லை தமிழ் சினிமா தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று இருவரும் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தனர்.

Director chandra thangaraj says about kallan movie title issue

ஜூன் 17 முதல் ‘வீட்ல விசேஷம்’ நடத்த வரும் போனிகபூர்-ஆர்ஜே. பாலாஜி

ஜூன் 17 முதல் ‘வீட்ல விசேஷம்’ நடத்த வரும் போனிகபூர்-ஆர்ஜே. பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ படத்தை அடுத்து உதயநிதி நடிப்பில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர்.

இந்த படம் தயாரிப்பதற்கு முன்பே ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்கும் “வீட்ல விசேஷம்” என்ற படத்தையும் தயாரித்து வந்தார்.

Romeo Pictures ராகுலுடன் இணைந்து Zee Studios & Bayview Projects சார்பில் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படம் ஹிந்தி பிளாக்பஸ்டர் படமான ‘பதாய் ஹோ’ படத்தின் தழுவலாகும்.

RJ பாலாஜி மற்றும் N.J.சரவணன் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர்.

எல்.கே.ஜி மற்றும் மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை போல N.J.சரவணனுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

RJ பாலாஜி நாயகனாக நடிக்க இவருடன் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை KPAC லலிதா, சீமா, ரமா, பிரதீப் கோட்டயம், புகழ், ஷிவானி நாராயணன், யோகி பாபு, ரவிக்குமார் மேனன், ஷங்கர் சுந்தரம் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

பொதுவாக, பெரும்பான்மையான திரைப்படங்கள் கதாநாயகர்களை போலீஸ்காரர்களாகவோ, ரௌடிகளாகவோ அல்லது தீவிரமான பாத்திரங்களாகவோ தான் சித்தரிக்கின்றன. மாறாக, வீட்ல விஷேஷம் ஒரு எளிமையான இளைஞனைப் பற்றியது, அவன் குடும்பத்திற்குள் எழும் சில எதிர்பாரா சிக்கல்களை அசாதாரண சூழலை, அவன் எதிர்கொள்வதை 100% வேடிக்கை மற்றும் பொழுதுபோக்குடன் இத்திரைப்படம் சொல்கிறது.

இப்படக்குழுவினர் மூல படைப்பான ‘பதாய் ஹோ’வின் சாராம்சத்தை, பிராந்திய மொழிக்கேற்றவாறு மாற்றியமைத்துள்ளனர்.

இது மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்பதால், தயாரிப்பாளர்கள் இத்திரைப்படத்தை குடும்ப பார்வையாளர்கள் ரசிக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டனர், அந்த வகையில் ஜூன் 17, 2022 ல் மாணவர்கள் தங்கள் கல்வி ஆண்டை முடித்திருப்பார்கள் என்பதால் அப்போது குடும்பங்களோடு அனைவரும் இப்படத்தை கொண்டாட முடியுமென்று, அன்றைய தினத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

வீட்ல விசேஷம் படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

கார்த்திக் முத்துக்குமார் (ஒளிப்பதிவு), விஜயகுமார் (கலை), பா.விஜய் (பாடல் வரிகள்), செல்வ RK (எடிட்டிங்), கிரீஷ் கோபாலகிருஷ்ணன் (இசை), தினேஷ் (நடன அமைப்பு), சாந்தனு ஸ்ரீவஸ்தவ்-அக்சத் கில்டியல் (கதை), திவ்யா நாகராஜன் (ஆடைகள்), S. விஜய் ரத்தினம் MPSE (ஒலி வடிவமைப்பு), AM ரஹ்மத்துல்லா (ஒலி கலவை), R. ஹரிஹர சுதன் (விஎஃப்எக்ஸ்), ராஜராஜன் கோபால் (DI கலரிஸ்ட்), ராமமூர்த்தி (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), N விக்கி (தயாரிப்பு நிர்வாகி), P. செல்வ குமார்-சிவ குமார் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), MK சுரேந்தர், J ஜெகன் கிருஷ்ணன், கார்த்திக் V, TS கோபி, N சிவகுரு, R குமரன், விஷ்ணு கார்த்திகேயன், சிற்றரசன் (திரைக்கதை குழு) , RJ பாலாஜி மற்றும் நண்பர்கள் (திரைக்கதை & வசனம்) இந்த திரைப்படத்தில் முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.

The title and first look poster of RJ Balaji’s #VeetlaVishesham is out now

More Articles
Follows