கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகரானார் பார்த்திபன்

கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகரானார் பார்த்திபன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார்.

சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து பேசிய அவர்…

“எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது,

மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபன், தற்போது அப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஈடுபட்டுள்ளார்.

இரவின் நிழல் என்ற தமிழ் திரைப்படத்தையும் அவர் இயக்கியுள்ளார். ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படமான இரவின் நிழலுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Actor Parthiban gets the golden visa from the UAE government

கமலை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ‘நம்மவர்’ பட இயக்குனர் மரணம்.; கமல் – சிவகுமார் இரங்கல்

கமலை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ‘நம்மவர்’ பட இயக்குனர் மரணம்.; கமல் – சிவகுமார் இரங்கல்

மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களுல் ஒருவர், பல விருதுகளை வென்ற இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன், இன்று இயற்கை எய்தினார்.

மலையாளத்தின் மூத்த இயக்குனர் K.S சேதுமாதவன் (90) காலமானார். மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன். தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் சேதுமாதவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது…

காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். https://t.co/CXPcyVuMDA

தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் இவர் இயக்கிய மறுபக்கம் திரைப்படம், புதுமையான மாறுபட்ட படைப்பாக, அனைவராலும் கொண்டாடப்பட்டு, அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படமாக சாதனை படைத்தது.

அன்னாரின் உடலுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின் சிவகுமார் கூறிய இரங்கல் செய்தியில்…

அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் “மறுபக்கம்” என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் “உச்சிவெயில்” அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்.

Noted film director KS Sedhumadhavan no more

ஷிவாத்மிகா என் மகள்.. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட சூட்டிங் எனக்கு சொர்க்கம் – சேரன்

ஷிவாத்மிகா என் மகள்.. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட சூட்டிங் எனக்கு சொர்க்கம் – சேரன்

தமிழ் திரையுலகில் வெகு சில திரைப்படங்கள், உறவுகளுக்கு புத்துயிர் கொடுப்பதிலும், நட்பைப் பிணைப்பதிலும், பல சமயங்களில், பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாகவும் இருந்துள்ளன.

பாண்டவர் பூமி, ஆனந்தம், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில், படத்தின் காட்சி முடிந்த உடனே, பார்வையாளர்கள் திரையரங்குகளிலேயே அமர்ந்து, குறைந்த பட்சம் தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளுக்கு, நெருங்கியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியையாவது அனுப்பிய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அம்மாதிரி படங்கள் தருவதில் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் சேரன், ஒரு நடிகராகவும் திரைப்பட இயக்குநராகவும் அவரது படங்களில் பார்வையாளர்கள் உணர்ச்சிகளின் குவியலுக்கு உள்ளாவார்கள். அவர் எப்போதும் தூய்மையான பொழுதுபோக்கு அமசங்கள் மற்றும் இதயத்தை வருடும் பாத்திரங்களில் மட்டுமே தோன்றியிருக்கிறார்,

அது இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு “ படத்திலும் தொடர்கிறது. டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் அவர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட நடிகர் சேரன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, சிறப்பு வாய்ந்ததொரு படைப்பு, இதை நான் வெறும் கருத்துக்காக சொல்லவில்லை, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அதை மனதிற்குள் உண்மையாக உணர்ந்தார்கள். படப்பிடிப்பின் போது நான் என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்த்திருந்தாலும், இப்படத்தை முடித்து திரையிட்ட போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

திரையில் நான் தான் நடித்துள்ளேன் என்பதையே மறந்துவிட்டேன், சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இதே அனுபவம் தான் இருந்தது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் இயக்குநர் நந்தா பெரியசாமி நிகழ்த்திய மாயாஜாலம் இது. அவர் ஒரு வெற்றிகரமான திரைப்படத் இயக்குநராக வர வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறேன், அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தின் தூணாக இருந்த தயாரிப்பாளர் ரங்கநாதன் சாருக்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பின் போது அவர் சந்தித்த தொற்றுநோய் போன்ற கடுமையான சவால்களை வேறு எந்த தயாரிப்பாளரும் தாங்கியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

இவரைப் போன்ற தயாரிப்பாளர் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். கௌதம் கார்த்திக் மிகவும் அன்பான மனிதர். அவர் குணத்தில் மிகவும் அரிய பண்பை கொண்டிருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் நவீன நகர்ப்புற பையன் மற்றும் கிராமத்து பையன் என இரண்டு கேரக்டரிலும் ஜொலிக்கும் திறமை இருப்பதில்லை, ஆனால் இது அவருக்கு மிக எளிதாக பொருந்தி போகிறது.

நடிகை ஷிவாத்மிகா எனக்கு மகள் போன்றவர். அவளுடைய தொழிலின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

சரவணன், விக்னேஷ், அல்லது படக்குழுவில் யாராக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம், முழு படப்பிடிப்பும் எனக்கு சொர்க்கமாக இருந்தது. திரையரங்குகளிலும் இந்த மனமுழுக்க பரவும் இன்ப அதிர்வை பார்வையாளர்கள் உணருவார்கள். ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்களுக்கிடையேயான பிணைப்பையும், சகோதரத்துவத்தையும் புதுப்பிக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தை, Sri Vaari Film P. ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா, சூப்பர்குட் சுப்ரமணி, VJ கதிரவன், மௌனிகா, “மைனா” சுசானே, பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார், பொர்ரா பாலபாரணி ஒளிப்பதிவு செய்கிறார், படத்தொகுப்பை என் பி ஸ்ரீகாந்த் கவனிக்கிறார்.

சாஹு (கலை), ஹரி தினேஷ் (ஸ்டன்ட்), தினேஷ்-ராதிகா (நடன அமைப்பு), சினேகன் (பாடல் வரிகள்), மற்றும் முருகன் (காஸ்ட்யூமர்) ஆகியோர் இந்தப் படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

Cheran shares his working experience in Aanandham Vilayaadum Veedu

பைக் ரேஸிங்கில் கின்னஸ் ரெக்கார்டு.; மீண்டும் வரும் திலீபன் புகழேந்தி

பைக் ரேஸிங்கில் கின்னஸ் ரெக்கார்டு.; மீண்டும் வரும் திலீபன் புகழேந்தி

தமிழ் சினிமாவில் “பள்ளிக்கூடம் போகாமாலே, ‘எவன்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் சாதிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நாயகனாக கவனம் குவித்து வருபவர் நாயகன் திலீபன் புகழேந்தி, இலக்க்கிய நாயகன் கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தி அவர்களின் மகனுமாகிய இவர் தற்போது, சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பைக் மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த இவர் வருங்காலத்தில் பைக் ரேஸராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தார்.

சிறு வயது முதல் தொடர்ந்து பைக் ரேஸ் பயிற்சிகளை செய்து, ஸ்கீம் பைக் ரேஸிங்கில் தமிழ்நாடு பைக் ரேஸிங் சாம்பியனாக ஜெயித்தார்.

உலகளாவிய கின்னஸ் சாதனைக்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன் முன்னெடுத்தார்.

அப்போது நடந்த எதிர்பாராத விபத்து, அவரது கனவை முடக்கி போட்டது மீண்டும் பைக் ஓட்டக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கை செய்ததால் பைக் ரேஸிலிருந்து ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தினார்.

தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு கின்னஸ் சாதனை முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

வரும் 2022 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, 13 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு, வீலிங் செய்யும் கின்னஸ் சாதனை முயற்சியை செய்யவுள்ளார்.

இது குறித்து திலீபன் புகழேந்தி கூறும் போது…

சிறு வயது முதலே பைக் தான் என் உயிராக இருந்துள்ளது. எப்போதும் பைக் ரேஸில் சாதிக்க வேண்டும், பைக் ரேஸராக வர வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்துள்ளது. பைக் மீதான காதலில் தமிழ்நாடு பைக் ரேஸ் சாம்பியனாகவும் ஆகிவிட்டேன், ஆனாலும் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன்னால் செய்தேன், அப்போது எதிர்பாராமல் என் மேல் பைக் விழுந்து விபத்தாகிவிட்டது.

டாக்டர்கள் திரும்பவும் பைக் ஓட்டக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்கள். என் தாத்தா மீண்டும் என்னை பைக் ஓட்டக்கூடாது என சொல்லி விட்டார்.

குடும்பத்தினரின் அன்பு என்னை மாற்றியது அவர்களுக்காக சினிமாவுக்குள் நுழைந்தேன். சமீபத்தில் என் தாத்தாவின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது, என் கனவு என்னை துரத்திக்கொண்டே இருந்தது. மீண்டும் பைக் தான் என்னை மீட்டெடுத்தது.

பைக்கை மீண்டும் தொட்டபோது நான் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகவே உணர்ந்தேன். என் வாழ்க்கையின் கனவை நிறைவேற்ற மீண்டும் ஆசைப்பட்டேன் அதற்காகவே கடுமையாக பயிற்சி செய்தேன். இப்போது 13 கீமி பைக் சக்கரத்தில் நெருப்பு வைத்துக்கொண்டு வீலிங் செய்து கின்னஸ் சாதனை செய்யவுள்ளேன்.

வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கின்னஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் சென்னை , பெங்களுர் நெடுஞ்சாலையில் இந்த சாதனை நிகழ்வு நடக்கவுள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.

Dileepan Pugazhendhi’s new guinnes record attempt in january

போலீஸ் கதையில் புதுமை.. எனக்கு ரொம்ப பெருமை..; ரைட்டருக்கு பாரதிராஜா பாராட்டு

போலீஸ் கதையில் புதுமை.. எனக்கு ரொம்ப பெருமை..; ரைட்டருக்கு பாரதிராஜா பாராட்டு

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரைட்டர்’.

சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த படம் நாளை டிசம்பர் 24ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இருவரும் ‘ரைட்டர்’ படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.

அவர் பேசியதாவது…

“தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.

இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.

எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.

இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ் சினிமாவுக்கு தந்துக் கொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்.

Director Bharathi Raja praises Writer film and director Frankin

தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘வாத்தி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தை வெங்கட் அல்லுரி எழுதி இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஃபார்சுன் ஃபோர் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Dhanush in bilingual film is titled Vaathi

More Articles
Follows