தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் பார்த்திபன்.
இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தாலும் எதுவும் பெரிய வெற்றிப் பெறவில்லை.
எனவே கவர்ச்சியின் எல்லையைத் தொட்டு உள்ளே வெளியே என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார் பார்த்திபன்.
சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இப்படம் ஹிட்டானது.
தற்போது 24 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கு சில்க் ஸ்மிதா போன்ற ஒரு கவர்ச்சியான பெண் தேவையாம். அதை அவர் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதை அவர் எப்படி பதிவிட்டு இருக்கிறாரோ? அப்படியே இங்கே தருகிறோம்.
R.ParthibanVerified account @rparthiepan
2. 0. 1. 8-ன்
18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’
18-ற்கான commercial comedy thriller படத்திற்கு
18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும்,
28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும்,
38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965