பார்த்திபனின் அடுத்த அடல்ட் அதிரடி… உள்ளே வெளியே 2

பார்த்திபனின் அடுத்த அடல்ட் அதிரடி… உள்ளே வெளியே 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor parthiban நேற்று நடிகர் பார்த்திபன் தன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது தன் அடுத்த படமாக உள்ளே வெளியே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தன் கவிதை ஸ்டைலில் வெளியிட்டுள்ளார்.

உள்ளே வெளியே படம் வெளியான சமயத்தில் ஆபாச படம், டபுள் மீனிங் கலவை என பல நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் வழக்கம்போல படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தன் இயக்கத்தில் பிரபலங்கள் நடிக்கவில்லை எனவும், பிரபல இயக்குனர்களின் படங்களில் நான் நடிக்கவில்லை எனவும் அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கவிதை இதோ…

ஆயிரம் அடிக்கும் அடியில்

ஆழ்துளை கலைக்கிணற்றில்

அகழ்வாய்வு கொண்ட

365 திங்களில்

அதிர்ஷடமெனும்

அபூர்வம் கண்டதில்லை நான்!

விதை புதைத்து

சுரை கொண்டதில்லை,

மரம் விதைத்தே

கனி உண்டிருக்கிறேன்.

பல்வேராய்ச்சியில்

பல்பு எரிந்தது போல…

பல்யுக்தி மல்யுத்த முயற்சியில்

நல் முத்துக்களாய்

கைதட்டல்கள் பெறுகிறேன்!

என் படங்களில் சூப்பர்

நட்சத்திரங்கள் நடித்ததில்லை

பிரம்மாண்ட இயக்குநர்களின்

படங்களில் நான் நடித்ததில்லை

இருப்பினும் இயங்குகிறேன்.

இருப்பை சிறப்பாய்

செதுக்கிய சமீபம் KTVI

பிறந்த நாளெனக்கு

14/4/1989(புதிய பாதை)! அடுத்த

பிறந்த நாளென்பது

‘உள்ளே வெளியே 2′

வெளியீடும் வெற்றியும்!

தயார்: புதுமை+கமர்ஷியல் கதை.

தயாரிப்பாளர் தான்

முயற்’சிக்கவே’ இல்லை!

என் இனிய பாரதி

ராசாவும் இசைய

ராசாவும் இன்றை

இளைஞ ராசாக்களும்

வருந்தி வாழ்த்துவது

“தகுதிக்கான உச்சம்

தொடவில்லை” என்பது.

எட்டாத ஸ்தூபம்

கிட்டாத ஸ்தானம்

அதற்கான ஸ்தூலம்

அறியவில்லை நானும்.

ஆனாலும் ஓடுகிறேன்

ஆறாமல் தேடுகிறேன்

அண்ணாந்து பார்க்கிறேநென்

விஸ்வரூப உழைப்பின் வியர்வை

சொட்டு சொட்டாய் நுனி

நாவை நனைக்க- உயிர்

கொள்ளும் சினிமா தாகம்

முன்பினும் மூர்க்கமாய்

மூச்சடக்கி பாய்கிறது.

வெற்றிக்கு உற்றோரே

உங்களின் வாழ்த்து

இன்றும் நாளையுமல்ல

இன்றியமையாதது என்றுமே

என்றறிவேன் நானும்

நன்றி’மறவேன்!!!

அறம் 2 படத்திலும் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா

அறம் 2 படத்திலும் நடிக்க ஓகே சொன்ன நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aramm posterநயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க கோபி நயினார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’.

ஜிப்ரான் இசையமைத்திருந்த இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுவுள்ளது.

ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவை இப்படம் பெற்றுள்தால் அறம் படக்குழுவினர் அகம் மகிழ்ந்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுவுள்ளதாக தயாரிப்பாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த பாகத்திலும் நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

2018ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணையும் சுந்தர் சி

2018ஆம் ஆண்டில் சூர்யாவுடன் இணையும் சுந்தர் சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya sundar cகடந்த அக்டோபரில் ‘கலகலப்பு 2’ பட சூட்டிங்கை தொடங்கினார் சுந்தர்.சி.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட இதன் சூட்டிங் தற்போது காசியில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரித்து வருகிறார்.

ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா, மிர்ச்சி சிவா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வருகிறார்.

இதன் டிவி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.

டிசம்பருக்குள் மொத்த சூட்டிங்கையும் முடித்துவிட்டு 2018 பொங்கல் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம் சுந்தர். சி.

இதே பொங்கல் தினத்தில்தான் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya and Sundar C movies may join in Pongal 2018

ஐடி ரெய்டு வரும்; உஷார்… விஜய் ஆண்டனியை எச்சரித்த உதயநிதி

ஐடி ரெய்டு வரும்; உஷார்… விஜய் ஆண்டனியை எச்சரித்த உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Annadurai movie release IT raid may be there says Udhayanithi Stalinஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன்.

இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன்.

பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார்.

படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன். ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது என்றார் பாடலாசிரியர் அருண் பாரதி.

ஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல. இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர்.

விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றார் இயக்குனர் வசந்தபாலன்.

அண்ணாதுரை தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சர்த்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும்.

உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர் சிவா.

மோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது.

அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார் அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும் என்றார் காட்ரகட்டா பிரசாத்.

எந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும் என்றார் தனஞ்செயன்.

கதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர் அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும் வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

அண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின். இதனால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.

After Annadurai movie release IT raid may be there says Udhayanithi Stalin

Anna Durai audio launch photos (128)

நவ-24ல் இந்திரஜித் வருகிறார்; கௌதம் கார்த்திக்கின் வெற்றி தொடருமா?

நவ-24ல் இந்திரஜித் வருகிறார்; கௌதம் கார்த்திக்கின் வெற்றி தொடருமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautam Karthik in Indrajith movie release updatesதன் ஆரம்ப கால படங்கள் கௌதம் கார்த்திக்கு சொல்லும்படியாக அமையவில்லை.

ஆனால் அண்மைக்காலமாக வெளியான அவரது படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து வருகிறது.

ரங்கூன், இவன் தந்திரன், ஹர ஹர மஹாதேவகி ஆகிய படங்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது வருகிற நவம்பர் 24ஆம் தேதி அவரது அடுத்த படமாக இந்திரஜித் திரைக்கு வருகிறது.

ஆக்‌ஷன் அட்வென்சர் கதைக் களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

கலாபிரபு இயக்கியுள்ள இப்படத்தில் அஷ்ரிதா ஷெட்டி நாயகியாக நடிக்க, சோனாரிகா பதோரியா, சுதன்சு பாண்டே, பிரஹாப் போத்தன், ராஜ்வீர் சிங் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கபாலி, தெறி படத்தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்துள்ளார்.

தன் வெற்றியை தக்க வைப்பாரா கௌதம் கார்த்திக் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.?

Gautam Karthik in Indrajith movie release updates

நாளைமுதல் நெஞ்சில் துணிவிருந்தால் படம் ஓடாது; சுசீந்திரன் முடிவு

நாளைமுதல் நெஞ்சில் துணிவிருந்தால் படம் ஓடாது; சுசீந்திரன் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suseenthiran decided to stop screening of Nenjil Thunivirundhalசுசீந்திரன் இயக்கத்தில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.

இமான் இசையமைத்திருந்த இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாடா, சூரி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் நாயகி உள்ளிட்ட சில காட்சிகளை எடிட் செய்து ரீவெர்சனை ரிலீஸ் செய்கிறோம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திடீரென தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டு அதில் பேசியுள்ளார் சுசீந்திரன்.

அதில்… நெஞ்சில் துணிவிருந்தால்’ கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகியது. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அடுத்தமாதம் டிசம்பர் 15-ஆம் தேதி இந்த படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

இந்த படத்திற்கு உண்மையான விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும், உள்நோக்கத்தோடு விமர்சனம் செய்தவர்கள் என அனைவருக்கும் நன்றி. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நாளை முதல் எந்த திரையரங்குகளிலும் இந்த படம் ஓடாது” என பேசியிருக்கிறார்.

Suseenthiran decided to stop screening of Nenjil Thunivirundhal

More Articles
Follows