ரஞ்சித் & யோகிபாபு இணையும் ‘பொம்மை நாயகி’

Bommai Nayagiஅட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரஞ்சித்.

இதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்.

கூடவே பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களை தன் ‘நீலம் புரொடக்சன்ஸ்’ பேனரில் தயாரித்தும் வந்தார் ரஞ்சித்.

‘காலா’ படத்திற்கு அடுத்ததாக பாலிவுட் திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இத்திரைப்படம், ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக வீரச் சமர் புரிந்த பழங்குடியின போராட்டக்காரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனிடையில் தமிழில் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கி வருகிறார்

இப்படத்திற்கு ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

தலைப்பு அருகே “ரோசமான ஆங்கில குத்துச்சண்டை” என்ற வாசகமும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்கும் “பொம்மை நாயகி” என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் ரஞ்சித்.

இதில் காமெடி நாயகன் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார்.

இன்று முதல் இதன் சூட்டிங்கை தொடங்கி இந்த பட பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.

Pa Ranjith and Yogi Babu joins for Bommai Nayagi

Overall Rating : Not available

Related News

Latest Post