BREAKING ரஞ்சித் கிட்ட படம் செஞ்சா அடுத்து அப்படி பண்ண மாட்டாங்க – மாரி செல்வராஜ்

BREAKING ரஞ்சித் கிட்ட படம் செஞ்சா அடுத்து அப்படி பண்ண மாட்டாங்க – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷான் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் ரஞ்சித் தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’.

இந்த படம் பிப்ரவரி 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர்களை பட குழுவினர் சந்தித்து வருகின்றனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசும்போது…

நான் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தேன். அவரிடம் பணிபுரிந்தால் அடுத்து தப்பான படங்களை நிச்சயம் யாரும் எடுக்க மாட்டார்கள். அது போல தான் நீலம் ப்ரொடக்ஷன் நீலம் ப்ரொடக்ஷனில் ஒரு படம் செய்துவிட்டால் அதன் பிறகு யாரும் தப்பான படம் எடுக்க மாட்டார்கள்.

தற்போது ‘வாழை’ என்றொரு படத்தை முடித்துள்ளேன். அதற்கான வாய்ப்பு வந்த போது ரஞ்சித் இடம் சொன்னேன். போய் முடித்துவிட்டு வா என்றார். அதை முடித்துவிட்டேன். தற்போது மீண்டும் நீலம் ப்ரொடக்ஷனுக்காக ஒரு படம் செய்ய ரெடியாகி வருகிறேன்.

நானும் சரி தப்பான படங்களை என்னைக்குமே எடுக்க மாட்டேன். மாரி செல்வராஜ் வந்தா இப்படித்தான் படம் எடுப்பாருன்னு தெரிஞ்சு என்னை கூப்பிட்டா அதுவே போதுமானது.

இப்படியான படங்கள் தான் எடுப்பேன்.. இப்படியான விஷயங்கள் தான் பேசுவேன் அப்படிங்குற ஆணித்தரமா நிரூபிச்சதுனால எனக்கு அது இன்னும் பெரிய சப்போர்ட் ஆகி எனக்காக வெயிட் பண்ணக்கூடிய ஆட்கள் இருக்காங்க.

எனக்காக வெயிட் பண்ணி எல்லாருமே இந்த மாதிரி கதைக்களுக்காக வெயிட் பண்றாங்க அப்படிங்கபோது எனக்கு பெரிய சந்தோஷம். அதை ஏற்படுத்தி கொடுத்த நீலம் புரொடக்சன்க்கு நன்றி.

சில மானுடம் சம்பந்தமாக கதைகளை உருவாக்கும் போது இது ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா அப்படின்னு யோசிக்கும்போது சில கம்பெனி நியாபகம் வரும்.

ஒரு நிஜத்தை எழுதும்போது அந்த நிஜத்தை எழுதுவதற்கு நாம் யோசிக்கிறோம். இன்னைக்கு வந்து நிறைய தமிழ் சமூகத்தில் தமிழ் இயக்குனர் இயக்குனர்களாகும் போது ஒரு கதை எழுதும்போது நீலம் புரொடக்ஷன் கிட்ட அத சொல்லிப் பார்ப்போம். அப்படின்னு நினைக்கிறாங்க..

முன்னெல்லாம் அதுபோல நிஜத்தை எழுதும்போதே நிராகரிச்சிடுவாங்கன்னு பயப்படுவோம்.. இன்னைக்கு அப்படி இல்ல.

கதை கேட்பதற்கு காது கொடுத்து கேட்டு அதை சரி செய்து அதை நேர்த்தியா மாத்தி அதுக்கு சரியான தீமை உருவாக்கி அந்த இயக்குனரை பலப்படுத்தி அவனுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து உன் முதல் படம் எடுக்கக்கூடிய இயக்குநரை ஒரு சிறந்த அரசியல் அறிவு உள்ளவனாக மாற்றி அவனை இந்த தமிழ் சமூகத்திற்கு படைப்பாளி ஆவதற்கு முக்கியமான பங்கை நீலம் புரொடக்சன்ஸ் செய்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது யோகி பாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படமும் இணையும் என கண்டிப்பாக நம்புகிறேன்”.

இவ்வாறு மாறி செல்வராஜ் பேசினார்

Mari Selvaraj praies Pa Ranjith at Bommai Nayagi press meet

திமுக – காங்-க்கு ஆதரவு.: கட்சியை கலைச்சிடுங்க கமல்.; மய்யத்திலே எழுந்த புகைச்சல்

திமுக – காங்-க்கு ஆதரவு.: கட்சியை கலைச்சிடுங்க கமல்.; மய்யத்திலே எழுந்த புகைச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

எனது தற்போது தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இளங்கோவனுக்கு, கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதனால் நடுநிலை மையம் என்று கூறி வந்த கமல் தடம் மாறிவிட்டார் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அவரது கட்சியிலேயே கமலின் முடிவுக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.

கட்சி செயற்குழுவின் ஒருமித்த கருத்துடன் எடுத்த முடிவு’ என கமல் கூறினாலும், மதுரையில் மநீம கட்சியினர், ‘போஸ்டர்’ ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் கட்சி சம்மந்தப்பட்ட இணையதளத்திலேயே, ‘கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸ் உடன் கமல் சேருகிறார்’ என்ற தகவலும் கிளம்பியது.

கூடுதல் தகவல்…

2021ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக வானதியிடம் தோல்வி அடைந்தார் கட்சித் தலைவர் கமல்.

கட்சியின் படு தோல்வியை தொடர்ந்து, துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க.,வுக்கு தாவினார். அப்போது கமல் கடுப்பானார்.

தற்போது மகேந்திரன் எடுத்த முடிவையே கமல் எடுத்துள்ளார் என கட்சியினரே விமர்சித்து வருகின்றனர்.

MNM supporters disappoints over Kamal Haasan’s decision over by polls election

அசர வைத்த ‘அயலி’ வெப் தொடருக்கு இயக்குனர் மிஷ்கின் பாராட்டு

அசர வைத்த ‘அயலி’ வெப் தொடருக்கு இயக்குனர் மிஷ்கின் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முத்துகுமார் இயக்கத்தில் அபி நக்‌ஷத்ரா, அனுமோல், மதன், லிங்கா, சிங்கம்புலி, டிஎஸ்ஆர் தர்மராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வெப் தொடர் ‘அயலி’.

ரேவா இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தத் தொடருக்கு வீணை மைந்தன், சச்சின், முத்துகுமார் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர்.

கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியான இந்த தொடர்.

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் தொடராக இது அமைந்துள்ளது. மேலும் ஆணாதிக்கம் மூடநம்பிக்கை சமுதாயம் மற்றும் அதை எதிர்த்து போராடும் பெண்கள் எனவும் திரைக்கதை அமைத்து மக்களை ஈர்த்துள்ளார் இயக்குனர்.

இந்நிலையில் ‘அயலி’ தொடரை மிஷ்கின் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரின் ட்விட்டர் பக்கத்தில்… “பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் ‘அயலி’ பற்றிய பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது.

இயக்குநருக்கும் ஜீ5 குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Director Mysskin praises Ayali web series

சென்டிமெண்ட் + காமெடி..; ராம் & மிர்ச்சி சிவா-வின் புதிய கூட்டணி அறிவிப்பு

சென்டிமெண்ட் + காமெடி..; ராம் & மிர்ச்சி சிவா-வின் புதிய கூட்டணி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’,‘தரமணி’ ‘பேரன்பு’ உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான படங்களை தமிழக ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் ராம்.

தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நிவின்பாலியுடன் இணைந்து ‘ஏழு கடல், ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ராம்.

இப்படத்தில் அஞ்சலி, சூரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ள புதிய படத்தை ராம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சீரியசான காட்சிகளை கூட சிரிக்க சிரிக்க சொல்பவர் நடிகர் சிவா.

ஒரு சென்டிமென்ட் காட்சியை தத்துரூபமாக எடுப்பவர் ராம்.

தற்போது சீரியஸ் மற்றும் சிரிப்பு இரண்டும் இணைந்து ஒரு புதிய விருந்தை ரசிகர்களுக்கு தர தயாராகி வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Ram and shiva joins for a new film

அப்பா ரூட்டுக்கு நோ.; தாத்தா ரூட்டுக்கு ஓகே.; விஜய் மகன் சஞ்சய்யின் நியூ ரூட்

அப்பா ரூட்டுக்கு நோ.; தாத்தா ரூட்டுக்கு ஓகே.; விஜய் மகன் சஞ்சய்யின் நியூ ரூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

இவர் வேட்டைக்காரன் என்ற படத்தில் தன் தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடி இருந்தார் என்பது தங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

அதன் பின்னர் தன் மகன் சஞ்சய்க்கு நடிப்பதை விட படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் எனவும் அது தொடர்பான படிப்பை படித்து வருகிறார் எனவும் தெரிவித்திருந்தார் விஜய்.

இவர் தற்போது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சினிமா படங்களை இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சஞ்சய் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தன் தந்தை நடிகர் விஜய் போல அவர் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது தாத்தா எஸ் ஏ சந்திரசேகரை போல சஞ்சய் படங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay son jason sanjay new decision in film career

BREAKING ரஜினி பெயர் போட்டோ குரலை பயன்படுத்த தடை?!.; வக்கீல் வார்னிங்

BREAKING ரஜினி பெயர் போட்டோ குரலை பயன்படுத்த தடை?!.; வக்கீல் வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

எனவே ரஜினியின் புகைப்படங்களை பயன்படுத்தியும் ரஜினியின் குரலை பயன்படுத்தியும் ரஜினியின் பெயரை பயன்படுத்தியும் பல விளம்பரங்களையும் பல வீடியோக்களையும் இவர்கள் உருவாக்குவது வழக்கம்..

இவை இல்லாமல் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களும் ரஜினியின் பெயரையும் குரலையும் பயன்படுத்தி தங்கள் நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடி வருகின்றனர்.

ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் வர்த்தக ரீதியில் பயன்படுத்துவோருக்கு எதிராக குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் இளம்பாரதி பொது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில், ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பல்வேறு நிறுவனங்கள் பயன்படுத்துவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சில நிறுவனங்கள் பிரபலமடைவதற்காக ரஜினி பெயர், புகைப்படங்கள், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் ரஜினி வழக்கறிஞர் சுப்பையா இளம்பரிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Super Star Rajinikanth advocate warning notice to public

இதோ அறிக்கை…

ரஜினி

ரஜினி

More Articles
Follows