காதலர் தினத்தில் ‘ஒரு குட்டி கதை’ பாடும் மாஸ்டர் விஜய்

காதலர் தினத்தில் ‘ஒரு குட்டி கதை’ பாடும் மாஸ்டர் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Kutti Katha single track release on Valentines dayபொதுமேடைகளில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது ஒரு குட்டி கதையை சொல்வார். அதுபோல் அண்மைக்காலமாக அதே பாணியை விஜய்யும் கடை பிடித்து வருகிறார்.

மெர்சல், சர்கார் பட விழாக்களில் குட்டி கதைகளை சொன்னார்.

பிகில் இசை விழாவில் விஜய் பேசிய பட்டாசு & பூக்கடை குட்டி கதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இணையத்தை தெறிக்க விட்ட விஜய்; தளபதியின் MASS-TER செல்ஃபி

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக்காக ஒரு குட்டி கதை என்ற பாடலை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளனர்.

அதாவது பிப்ரவரி 14ல் மாலை 5 மணிக்கு இப்பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

விஜய்க்கு பயப்படுகிறதா பாஜக..? டைரக்டர் அமீர் ஓபன் டாக்.

லோகேஷ் இயக்கும் இந்த படத்தை விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது.

Oru Kutti Katha single track release on Valentines day

காதலர்களுக்கு விருந்தளிக்கும் டைரக்டர் ரம்யா நம்பீசன்

காதலர்களுக்கு விருந்தளிக்கும் டைரக்டர் ரம்யா நம்பீசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Remya nambeesan directed short film titled unhideகொஞ்சி பேசிட வேணாம்.. உன் கண்ணே போதுமடி.. இந்த பாடல் வெளியாகி சில வருடங்களாலும் இந்த பாடலை கேட்டாலே போதும்… நிச்சயம் நம் உள்ளத்தில் அழகான ரம்யா நம்பீசன் வந்து செல்வார்.

அதுபோல் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் தற்போது தமிழில் விஜய்

ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்திற்காக ஃபோக் பாடல் பாடிய ரம்யா நம்பீசன் !

இந்த நிலையில் ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

அன்ஹைட் எனும் குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று அந்த படத்தை வெளியிட உள்ளார் ரம்யா.

Remya nambeesan directed short film titled unhide

“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன் !

“ஓ மை கடவுளே” காதலர் நெஞ்சங்களை வெல்லும் – வாணி போஜன் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vani bhojanசின்னத்திரை மூலம் கோடிக்கணக்கான ரசிகர் நெஞ்சங்களை வென்ற நடிகை வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் வழியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். அவரின் பங்களிப்பு “ஓ மை கடவுளே” படத்தின் பெரும் பலமாக மாறியிருக்கிறது. ரசிகர்கள் அவரை பெரிய திரையில் காண பெரும் ஆவலுடன் உள்ளனர்.

படம் குறித்து நடிகை வாணி போஜன் கூறியதாவது….

“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பரும் ஆசிர்வாதமாக “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும் ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார். மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் எனை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வுன் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின் மிகச்சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும் குடியிருக்க செய்யும். இப்படத்தில் சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும் என்றார்.

குறும்படங்கள் மூலம் கவனம் வென்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியுள்ளார்.
2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

அசோக்செல்வன் நாயகனாக நடிக்க ரித்திகா சிங் நாயகியாக நடித்துள்ளார்.
வாணி போஜன், M S பாஸ்கர், சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் கௌதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

தண்ணீர் பாரபட்சமின்றி கிடைக்க ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்

தண்ணீர் பாரபட்சமின்றி கிடைக்க ரஹ்மானின் விழிப்புணர்வு பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Worldwide Song on Water Awareness by AR Rahmanசென்னை மாநகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் சார்பில், தண்ணீரின் அவசியம், சேமிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெற்றது.

இதில் அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்கீஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அப்போது ஏ,ஆர் ரகுமான் பேசியதாவது…

தண்ணீர் என்பது அடிப்படையான ஒன்று. குழாய் திறந்தால் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கனும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கூடாது.

இதற்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் என்றார்.

மேலும், தண்ணீர் குறித்த விழிப்புணர்வுக்கான பாடல் ஒன்றை விரைவில் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.

A Worldwide Song on Water Awareness by AR Rahman

நடிகர் சங்க தேர்தல் ரத்து உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு

நடிகர் சங்க தேர்தல் ரத்து உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nadigar Sangam Election Result and Polls Vishal moves to Courtகடந்த ஆண்டு 2019 ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தபால் ஓட்டுக்களை இட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் நடிகர் ரஜினிகாந்தும் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தேர்தல் முடிந்து 6 மாதம் ஆன நிலையிலும் வாக்குகள் எண்ணிக்கை நடைபெறவில்லை.

இதன் பின்னர் இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் விஷால்

ஏற்கெனவே உள்ள சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்துவிட்டதால் அவர்களின் முடிவுகளும் செல்லாது எனவும் அவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமித்து, 3 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

மேலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் எனவும் நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் எனவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தமிழகத்தில் பல்வேறு சங்கங்களில் நிர்வாகிகள் பதவிக்காலம் முடிந்த பின்பும், பழைய நிர்வாகிகள் அதை நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பலமுறை தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் அப்போது, பதவிக்காலம் முடிந்த நிர்வாகிகளே சங்கத்தை நிர்வகித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சங்க பிரச்சனையில், தமிழக அரசு நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

தனி நீதிபதி எந்த ஒரு சட்ட ரீதியான அம்சத்தையும் ஆராயாமல் இந்த தேர்தலை ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு பிப்ரவரி 12ஆம் தேதி நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

Nadigar Sangam Election Result and Polls Vishal moves to Court

மக்கள் பிரச்னை இருக்க ரஜினி-விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி

மக்கள் பிரச்னை இருக்க ரஜினி-விஜய்யை பற்றி மக்களவையில் பேசிய தயாநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dayanidhi Maran Supports Vijay at Parliament speechகடந்த சில நாட்களாக ரஜினியின் பெரியார் பேச்சு, வருமான வரித்துறை விலக்கு, விஜய் வீட்டில் ஐடி ரெய்டு குறித்தே மீடியாக்கள் விவாதித்து வருகின்றன.

இதனால் கொரனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கூட மக்களிடையே இல்லை.

இந்த நிலையில் இன்று மக்களவையிலும் தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் ரஜினி மற்றும் விஜய் குறிதுது கேள்வி எழுப்பியுள்ளார்.

இணையத்தை தெறிக்க விட்ட விஜய்; தளபதியின் MASS-TER செல்ஃபி

மக்களவையில் பேசிய தயாநிதிமாறன், “ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை.

தமிழ், தமிழ் என பேசும் மத்திய அரசு அதன் வளர்ச்சிக்காக எதையும் செய்துவிடவில்லை.

ஆனால் செத்தமொழியான சமஸ்கிருதத்துக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது” என பேசினார் தயாநிதி மாறன்.

Dayanidhi Maran Supports Vijay at Parliament speech

More Articles
Follows