பிரியா வாரியரின் ஆசையை நிறைவேற்றுவாரா துல்கர்..?

பிரியா வாரியரின் ஆசையை நிறைவேற்றுவாரா துல்கர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Adaar Love fame actress Priya warrior new dreamசினிமாவில் பத்து படங்களில் நடித்திருந்தாலும் கூட சில நடிகர்களை நமக்கு தெரியாது.

ஆனால் ஒரே படம் ஒரே பாடல் எல்லாருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் இந்த பிரியா வாரியர்.

Oru Adaar Love படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற ஒரு பாடலில் தன் புருவங்களை உயர்த்தி இளைஞர்களை வசியம் செய்துவிட்டார் இந்த பிரியா.

எனவே முந்திக் கொண்டு அவரிடம் மீடியாக்கள் பேட்டி எடுத்து வருகின்றன.

ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை? என கேட்டுள்ளனர்.

துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு” என தெரிவித்துள்ளார்.

துல்கர் இந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா?

Oru Adaar Love fame actress Priya warrior new dream

படம் பார்ப்பேன் ஆனால் நடிக்கமாட்டேன்; சத்யராஜ் மகள் விளக்கம்

படம் பார்ப்பேன் ஆனால் நடிக்கமாட்டேன்; சத்யராஜ் மகள் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

divya sathyarajநடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து நிபுணரான இவர் கடந்த 7 ஆண்டுகளாக சென்னையிலுள்ள இரண்டு மருத்துவமனைகளில் ஊட்டசத்து நிபுணராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திவ்யா சினிமாவில் நடிக்க இருப்பதாக சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவ, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் திவ்யா.

அதில், ‘‘நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாய் இருப்பதாக வெளியாகிய தகவல்களில் சிறிதும் உண்மையில்லை. நான் கடந்த 7 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறேன்.

மேலும் ஊட்டச்சத்து பிரிவில் ‘PHD’ உயர் படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறேன். சினிமா மீது எனக்கு அதீத மரியாதை இருக்கிறது.

படங்களை பார்த்து ரசிப்பேனே தவிர படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியதில்லை.

ஊட்டச்சத்து சம்பந்தமான ஒரு ஆவண படத்தில் மட்டும் நடித்திருக்கிறேன். ஆனால் அது படம் அல்ல!’’ என்று தன் விளக்கத்தை அளித்துள்ளார்.

பூஜைக்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய சன்டிவி

பூஜைக்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய சன்டிவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanவேலைக்காரன் படத்தை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இப்படத்திற்கு ‘சீமராஜா’ என்று பெயரிடப்படலாம் எனத் தெரிகிறது.

இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தையும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நிறுவனம் 24ஏஎம். ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் சன் டி.வி இதன் சாட்லைட் உரிமையை கைபற்றியுள்ளது.

சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் படத்தை சன் டிவி கைப்பற்றியிருப்பதால் இந்த செய்தி கோலிவுட்டை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஒரு கோடியை நெருங்கும் பிரியா வாரியரின் க்யூட் வீடியோ

ஒரு கோடியை நெருங்கும் பிரியா வாரியரின் க்யூட் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

priya prakash varrierகடந்த வருடம் சினிமாவை தாண்டி மிகவும் வைரலான வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்…’ என்ற ஆடல் பாடல் வீடியோதான்.

தற்போது மீண்டும் கேரளாவில் இருந்து மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்க மலராய பூவே…’ என்ற பாடலில் பிரியா வாரியர் காட்டிய க்யூட் முக பாவனைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

அவர் தன் இரு புருவங்களையும் உயர்த்தியபடி பார்க்கும் பார்வைதான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ யு-டியூபில் வெளியாகிய நான்கு நாட்களில் 90 லட்சத்தை கடந்துள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் அதிகமாக தேடப்பட்டவர் என்ற பெருமையும் பிரியா வாரியருக்கு கிடைத்துள்ளது.

ஓமர் லுலு இயக்கியுள்ள ‘தி அடார் லவ்’ படத்திற்காக இந்த பாடலை பாடியிருப்பது நடிகரும் இயக்குனருமான வினீத் சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து

விரைவில் சிம்பு-விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு மணிரத்னம் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and vijay sethupathiகாற்று வெளியிடை படத்தை தொடர்ந்து 4 ஹீரோக்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

செக்கச் சிவந்த வானம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிட்டனர்.

இப்படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ், மன்சூரலிகான், ஜெயசுதா, தியாகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை வைரமுத்து எழுத, படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனிக்கிறார்.

‘லைகா’ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங்கை தொடங்கியுள்ள மணிரத்னம் மொத்த சூட்டிங்கையும் சுமார் 60 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

எனவே படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளாராம்.

காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

காலாவை தொடர்ந்து மீண்டும் லைகாவுடன் இணைந்த ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith production Pariyerum Perumal first look launchஅட்டக்கத்தி மற்றும் மெட்ராஸ் என் இரு வெற்றிப் படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு எவருமே எதிர்பாராத வகையில் ரஜினியின் கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து தற்போது ரஜினியின் காலா படத்தை இயக்கியுள்ளார்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தை ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் ரஞ்சித்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வேலன் மற்றும் ராகேஷ் ஆகியோரும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

தற்போது சற்றுமுன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்டத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

காலா படத்தின் வெளியிட்டு உரிமையையும் லைகா நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ranjith production Pariyerum Perumal first look launch

ranjith perumal

More Articles
Follows