சூர்யாவுக்கு ஜோடியாகும் ஐ-ப்ரோ அழகி ப்ரியா வாரியர்.?

Priya Prakash Warrior teams up with Suriyaசெல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா.

சினிமா ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை எஸ்ஆர் பிரபு தயாரித்து வருகிறார்.

இதில் சாய்பல்லவி மற்றும் ரகுல் பிரித்தி சிங் இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசை யுவன் சங்கர் ராஜா.

இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஒரு அதார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் மூலம் தென்னிந்தியாவையே அதிர வைத்த ஐப்ரோ அழகி ப்ரியா வாரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Priya Prakash Warrior teams up with Suriya

Overall Rating : Not available

Latest Post