தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற மாணிக்க மலராய பூவி என்ற பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ப்ரியா வாரியர்.
இந்த படமே இன்னும் வெளியாகாத நிலையில் இவர் செய்த புருவ அசைவுகள் படத்திற்கு பெரும் பப்ளிசிட்டியாக அமைந்து விட்டது.
எனவே படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட உள்ளனர்.
இதனால் ப்ரியா வாரியரை தங்களது படத்தில் நடிக்க வைக்க பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் பிரியா நடிக்க போவதாக செய்திகள் வந்தன.
ஆனால் இதை டைரக்டர் நலன் குமாரசாமி மறுத்துள்ளார்.