ஐப்ரோ அழகி பிரியா வாரியரின் படத்தை வெளியிடும் கலைப்புலி தாணு

ஐப்ரோ அழகி பிரியா வாரியரின் படத்தை வெளியிடும் கலைப்புலி தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaippuli S Thanu bagged theatrical rights of Oru Adaar Love Tamilஇணையத்தளத்தில் ஹாட் சென்சேஷனாக பேசப்பட்டு வரும் பிரியா பிரகாஷ் வாரியரின் திரைப்படமான ’ஒரு அடார் லவ்’ – தமிழ் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடந்தது.

இயக்குனர் ஓமர் லுலு தற்போது பள்ளி பருவ காதலை முன்வைத்து ‘ஒரு அடார் லவ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இருந்து ’மாணிக்க மலராய்’ என்ற பாடலும், படத்தின் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. பாடலின் மெட்டை விட, அந்த பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர், இளைஞர்கள் இணைய வைரல் அழகியானர்.

குறிப்பாக அவரின் ரியாக்‌ஷன்கள் மட்டும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் பல வெர்ஷனில் ஸ்டேட்சாக மாறியது.

’ஒரு அடார் லவ்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை கண்ட படக்குழுவினர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் படத்தை உருவாக்கியுள்ளனர்.

கலைப்புலி எஸ் தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ’ஒரு அடார் லவ்’ திரைப்படம் உலகம் முழுவதும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகிறது.

Kalaippuli S Thanu bagged theatrical rights of Oru Adaar Love Tamil

V Creations
Kalaippuli S Thanu
Presents

Oru Adaar Love – Tamil

Starring
Priya Prakash Varrier
Noorin Sherif
Aneesh Menon
Roshan Abdul Rahoof
Yami Sona
Michelle Ann Daniel
Pradeep Kottayam
Siyadh Shajahan

Technicians
Story & Direction – Omar Lulu
Screen Play & Dialogue – Sarang Jayaprakash, Lijo Panadan
Music Director – Shaan Rahman
Cinematography – Sinu Siddarth
Editor – Achu Vijayan
Art Director – Jospeh Nellikkal

ஊழலுக்கு எதிராக ‘செருப்படி வைத்தியம்’ கொடுக்கும் மலை மன்னன்

ஊழலுக்கு எதிராக ‘செருப்படி வைத்தியம்’ கொடுக்கும் மலை மன்னன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Serupadi Vaithiyam short film slams Corruptionஊழலுக்கு எதிரான ஒரு குறும்படமாக “செருப்படி வைத்தியம்’ உருவாகியுள்ளது ஒரு குறும்படம்.

இக்குறும்படத்தை இயக்கியுள்ளவர் மலைமன்னன். ஒளிப்பதிவு சுபாஷ் அலெக்சாண்டர் . இவர் வேல்ராஜின் உதவியாளர்.

இசை ஜெய K தாஸ் இவர் ஏற்கெனவே 3 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளவர்.

இக்குறும்படத்தில் திரை அனுபவம் பெற்றுள்ள நடிகர்கள் கலை, தயாளன் , ருத்ரன், ஐபா ஜே ஆகியோருடன் இயக்குனரும் நடித்துள்ளார்

படம் பற்றி இயக்குனர் மலைமன்னன் பேசும் போது…

“நாட்டில் நிகழும் ஊழல்களையும் ஒவ்வொரு ஊழலைச் செய்தவர்கள் விடுதலையாகி வெளிவருவதையும் பார்த்த ஒரு சராசரிக் குடிமகனின் சீற்றமாக இப்படம் இருக்கும்.

தெரியாமல் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை தரலாம். இப்படித் தெரிந்தே ஊழல் தவறுகள் செய்பவர்களுக்குச் செருப்படி கொடுத்து அவர்களின் தன்மானத்தைக் குலைத்தால்தான் மீண்டும் ஊழல் செய்யப் பயம் வரும் என்று போகிறது கதை.

இந்த இயக்குநர் மலைமன்னன் என்பவர் ஏற்கெனவே 4 குறும்படங்கள் இயக்கி் நான்கையும் ஒரே சமயத்தில் ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டரில் பிரிவியூ செய்தவர்.

“ஆரம்பமே அட்டகாசம் “படத்தில் பாடல்களை எழுதியவர் .இக்குறும்பட முயற்சி ஊழலுக்கு எதிரானது. ஊழல் ஒரு பாவச் செயல் ;ஊழல் ஒரு பெருங்குற்றம்; ஊழல் ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று பொட்டில் அடித்தாற் போல சொல்கிறது இக் குறும்படம்.

15 நிமிடம் ஓடக்கூடிய இப்படம் பார்ப்பவருக்குள் பலமணிநேரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் இயக்குநர் மலைமன்னன். இப்படத்தை ப்ரண்ட்ஸ் ஆப் ப்ரண்ட்ஸ் மற்றும் மரா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

Serupadi Vaithiyam short film slams Corruption

‘வாட்ச்மேன்’ படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறித்து ஜிவி. பிரகாஷ்

‘வாட்ச்மேன்’ படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறித்து ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1M Views For Toto Promo Video Song From Gv Prakashs Watchman ஜிவி. பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படத்தின் ‘டோட்டோ’ பாடல் குறுகிய காலத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

பாடல் துவங்கிய சில நொடிகளிலேயே நகைச்சுவையும், தொடர்ந்து ஜிவி. பிரகாஷ் மற்றும் சாயீஷாவின் துள்ளலான நடனமும் ஈர்க்கிறது.

கூடுதலாக, யோகிபாபுவின் வசீகரிக்கும் இருப்பும் பாடலின் வெற்றிக்கு ஒரு காரணியாகியுள்ளது. பெரும்பாலும் எந்த ஒரு பாடலும் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது, ஆனால் இந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் காரணிகளை கொண்டிருக்கிறது.

இது வெறுமனே யூடியூப் பார்வைகளை மற்றும் பெற்றிருக்காமல், பட ரிலீஸின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் கூறும்போது…

“இந்த வெற்றி எங்கள் கணிப்புக்கு அப்பாற்பட்டது. படத்தின் சில காட்சிகளையும் சேர்த்து, விளம்பர வீடியோவை உருவாகியுள்ள இயக்குனர் விஜய்யின் படைப்பு சாராம்சத்தை தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.

இது ஒரு குறிப்பிட்ட பாடலின் வெற்றி மட்டுமல்ல, பார்வையாளர்கள் இந்த ட்ரெண்டை ஏற்றுக் கொண்டு வரவேற்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

மேலும் அவர் கூறும்போது, “அருண்ராஜா காமராஜின் பாடல் வரிகளும், சஞ்சனா கல்மன்ஜேவுடன் இணைந்து அவர் பாடிய விதமும் பாடலை இன்னும் சிறப்பாக்கி இருப்பதாக நான் கூறுவேன்.

அருண்ராஜாவின் குரல் ஏற்கனவே ஒரு பிராண்ட் ஆகியிருக்கிறது, இது பாடலுக்கு ஒரு பெரிய மைலேஜ் சேர்த்தது என்று நான் நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ருவல் டவுசான் வரிண்டனியின் அற்புதமான நடனம் பாடலுக்கு மகுடம் வைத்தாற்போல அமைந்திருக்கிறது.

உண்மையில், சாயீஷா சைகல் போன்ற நாட்டின் மிகவும் திறமையான ஒரு நடனக் கலைஞருடன் இணைந்து நடனமாடியது மிகவும் சவாலான தருணமாக இருந்தது” என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

1M Views For Toto Promo Video Song From Gv Prakashs Watchman

வாட்ஸ்அப் வாழ்த்துக்களை நீங்களே எழுதுங்கள்; தமிழ் வளர்க்க தங்கர் பச்சான் யோசனை

வாட்ஸ்அப் வாழ்த்துக்களை நீங்களே எழுதுங்கள்; தமிழ் வளர்க்க தங்கர் பச்சான் யோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar Bachan request Tamil peoples to wish in our languageஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே படுக்கையில் கிடக்கும் கைப்பேசியைத் தான் முதலில் தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning போன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம்.

அப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது? யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள், வெளிநாட்டு மனிதர்களின் படங்கள் என்று வரிசைகட்டி நிற்கின்றன.

3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை உடைய நம் மொழியில்
படித்தவர்கள் ஆகிய நாம் நம் வாழ்நாள் முழுவதுமே அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்கின்றோம். படிக்காத மக்களிடம் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

பத்தாயிரம் ஆண்டுகளாக போற்றி, காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த தமிழ்மொழி கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பயன்பாட்டில் அழிந்து தேய்ந்து குறைந்துவிட்டது.

நம்முடைய தலைமுறையே 1000 சொற்களுக்குள் அடங்கி விட்ட நிலையில் நமது அடுத்த தலைமுறை 500 சொற்கள் அதற்கு அடுத்த தலைமுறை 200, 100 சொற்கள் என்று பயன்பாட்டில் குறைந்துகொண்டே வந்து விடும்.

அண்மையில் வெளியான கூகுல் பிபிசி ஆய்வின்படி உலகளவில் அதிக வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்வது இந்தியர்கள்தான் என்றும், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான் என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.

இந்த வாழ்த்துச் செய்திகளில் உள்ள எதை எதையோ பகிர்வதை விட்டு விட்டு நாமே சிந்தித்து நம் கைகளால் ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்பத் தொடங்கும் பொழுது நம்முடைய தமிழ் மொழியானது என்றும் நிலைத்து நிற்கும்.

நம்முடைய எழுதும் பழக்கத்தினால் மூளையில் சிந்திக்கும் சொற்களை கைகளால் அந்த வெள்ளை காகிதத்தில் எழுதும் பொழுது சிந்தனை ஆற்றலானது தூண்டப்படுகிறது.

இதன் மூலம் நம்மிலிருந்து மறைந்த, புதைந்து கிடக்கும் அழிந்து போன நம்முடைய சொற்கள் மீண்டும் நம்முடைய பயன்பாட்டுக்கு வரும்.

இதனை ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

செய்வீர்களா தமிழர்களே!

இப்படிக்கு
தங்கர் பச்சான்.

Thangar Bachan request Tamil peoples to wish in our language

வழுக்கை தலை மனிதனின் வலியை சொல்லும் ‘ஒரு மயிரும் இல்ல..’

வழுக்கை தலை மனிதனின் வலியை சொல்லும் ‘ஒரு மயிரும் இல்ல..’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Mohan Raja praises Oru Mayirum Illai Short film‘தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டைப் பெற்றுள்ள குறும்படமான ‘ஒரு மயிரும் இல்ல’ அனைவரின் கவனத்தைக் கவர யூடியூப் சேனலில் வெளிவருகிறது.

இப்படத்தை விக்னேஷ் ஷா எழுதி இயக்கித் தயாரித்துள்ளார். மணிகண்டன் வைத்தியநாதன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு பிரகாஷ், இசை தரன், எடிட்டிங் ஸ்ரீநிக் விஸ்வநாதன் என்று நண்பர்கள் நலம் விரும்பிகளே தொழில்நுட்பத் துணைகளாகி உழைத்துள்ளனர்.

நாம் சாதாரணமாக உதிர்ந்து விழுவதுதானே என்று நினைக்கிற தலைமுடி கொட்டி தலை வழுக்கை நிலையை அடையும் ஒருவனின் வலியை, உளவியல் சிக்கலை, அவன் எதிர்கொள்ளும் போராட்டத்தினை அழகாக, கலகலப்பாக, சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார் விக்னேஷ் ஷா.

அந்தக் கதை நாயகன் தன் முடி வளர பலவகை மருந்துகள், மூலிகைகள், ஷாம் பூக்கள் எல்லாம் போட்டு பலனின்றி “மயிரோடு வந்தால்தான் உயிரோடு வருவேன் “என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுகிறான்.

யாரோ சொன்னதை நம்பி முடி வளரக் கருங்குரங்கு ரத்தம் உதவும் என்று அதைத்தேடி காட்டுக்குள் செல்கிறான். அங்கே தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்கிறான். முடிவு என்ன என்பதே க்ளைமாக்ஸ்.

ஒரு முழு நீளத் திரைப்படத்துக்கான கதையை எடுத்துக் கொண்டு 10 நிமிடத்துக்குள் குறும்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் ஷா .இப்படத்தைப் பார்த்த’ தனி ஒருவன்’ படத்தின் இயக்குநர் மோகன்ராஜா பாராட்டியதுடன் “எப்போ சினிமாவுக்கு வரப் போறே? சீக்கிரம் வா” என்று வாழ்த்தியிருக்கிறார்.

மற்றும் இக்குறும்படத்தை பார்த்த இயக்குனர் ரத்தின சிவா பாராட்டியுள்ளார்.

விரைவில் இயக்கவுள்ள தன் திரைப்படத்துக்கான கதையமைப்பு ,முன் தயாரிப்பு என மும்முரமாக இருக்கும் தன்னை யாரும் சம்பிரதாயமாக வாழ்த்த வேண்டாம்.

இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு மதிப்பெண் போட்டு விட்டு வாழ்த்தட்டும் என்கிறார் நம்பிக்கையுடன் .

விக்னேஷ் ஷா சினிமாவுக்கான படை திரட்டி வருகிறார். விரைவில் போர் தொடுப்பார் என நம்பலாம்.

Director Mohan Raja praises Oru Mayirum Illai Short film

https://youtu.be/WsSlJdf3xzM

அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

அனைவரையும் கவரும் ‘நட்பே துணை’ பட ‘சிங்கிள் பசங்க’ பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga nowதன்னுடைய ஆல்பம் மூலம் வெற்றி மேல் வெற்றி பெற்று இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ‘நட்பே துணை’ படத்தில் ‘கேரளா சாங்’ பாடல் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது, அப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.

‘சிங்கிள் பசங்க’ என்று தொடங்கும் அப்பாடல் யூடியூப், சமூக வலைத்தளம் மற்றும் அனைத்து இசை தளங்களிலும் வெளியாகி அனைவராலும் ஈர்க்கப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான பாடல் வரிகள் உள்ளது. இப்பாடல் மூலம் தனக்கென தனி முத்திரை பதிந்ததால் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி.

ஆதி கதாநாயகனாக நடிக்க, அனகா கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படத்தை, அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் : ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கதை, திரைக்கதை மற்றும் வசனம் – ஸ்ரீகாந்த் & தேவேஷ் ஜெயச்சந்திரன், பாடல்கள் – ‘ஹிப்ஹாப்’ ஆதி & அறிவு, கலை – குருராஜ், சண்டை பயிற்சி – பிரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பு – என்.மணிவண்ணன், நடனம் – சந்தோஷ் & சிவரோக் சங்கர், காட்சி அமைப்பு – சனத், உடைகள் – ப்ரீத்தி நாராயணன், டிசைன்ஸ் – அமுதன் ப்ரியன் மற்றும் மற்ற தொழில்நுட்ப குழு.

Hiphop Aadhi is back to enthrall all Single Pasanga now

More Articles
Follows