இயக்குனர் சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

இயக்குனர் சுந்தர் சியின் ‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் – ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் ‘காபி வித் காதல்’ என்ற ரொம்-காம் படத்திற்காக இணைந்தனர் .

சுந்தர் சி எழுதி இயக்கிய இந்த மல்டிஸ்டாரர் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ​​காபி வித் காதல் படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

9 டிசம்பர் 2022 அன்று ZEE5 இல் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக உள்ளது.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றும் கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில், உடன்பிறந்த உறவை சித்தரிப்பதாக படம் அமைந்துள்ளது.

சங்கராந்தி சந்தோஷம்.: ஒரே நாளில் ரெண்டு.; அப்பா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

சங்கராந்தி சந்தோஷம்.: ஒரே நாளில் ரெண்டு.; அப்பா வயது நடிகருடன் ஜோடி போட்ட ஸ்ருதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு 2023 ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது.

ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லா சில்லா சிங்கிள் ட்ராக்.: வெறித்தனமான வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்

சில்லா சில்லா சிங்கிள் ட்ராக்.: வெறித்தனமான வெயிட்டிங்கில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். நாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இதற்கு முன்பு வெளியான ‘வலிமை’ திரைப்படம் வெற்றி பெறாத காரணத்தினால் ‘துணிவு’ படத்தை பட குழுவினரும் அஜித் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

ஓரிரு தினங்களுக்கு முன் அஜித்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை அதிகரித்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா ஜில்லா…’ என்ற பாடலை அனிருத் பாடி இருக்கிறார்.

அந்த பாடலை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிட உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராஜமௌலி பட நடிகருடன் கைகோர்க்கும் பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்?

ராஜமௌலி பட நடிகருடன் கைகோர்க்கும் பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் லைகா புரொடக்ஷன்ஸ் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பல பிளாக்பஸ்டர்களையும் அதிக பட்ஜெட் படங்களையும் தயாரித்துள்ளனர், இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனும் அடங்கும்.

இப்போது , லைகா புரொடக்ஷன்ஸ், கன்னட நடிகர் சுதீப் உடன் இணைய முன் வந்துள்ளது .

ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் நடிகர் சுதீப் மிரட்டல் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 வருடங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் சுதீப்பை அணுகியபோது கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க இயலவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பார்வதியை KJR ராஜேஷ் வச்சிருக்காரூ.!? ரகசியம் உடைத்த வேலைக்காரர் சுபாஷ்

பார்வதியை KJR ராஜேஷ் வச்சிருக்காரூ.!? ரகசியம் உடைத்த வேலைக்காரர் சுபாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர்.

இவர் காவல் நிலையத்தில் தன் வீட்டு பணியாளர் மீது புகார் அளித்துள்ளார்.

தன் வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திர போஸ் தன்னிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்று விட்டதாக நடிகை பார்வதி நாயர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட சுபாஷ் அவரும் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். தன் மீது வீண்பழி சுமத்துவதாக அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது…

” கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ராஜேஷ் என்பவரிடம் நான் வேலை செய்தேன்.

அவரின் சிபாரிசின் பெயரில் தான் நான் நடிகை பார்வதி நாயர் வீட்டில் வேலைக்கு வந்தேன். அதுவும் வாரத்தில் இரு நாட்கள் மட்டும் தான் பார்வதியிடம் வேலை செய்து வந்தேன்.

பார்வதி நாயர் வீட்டில் இரவு நேரங்களில் பார்ட்டி நடப்பதுண்டு. மேலும் அவரது பாய் பிரண்டுகளுடன் அவர் பார்ட்டியில் நெருக்கமாக காணப்படுவார்.

அவரது சில ரகசியங்கள் எனக்கு தெரிந்து விட்டதாலும் நான் அந்த ரகசியத்தை KJR ராஜேஷிடம் சொல்லிவிடுவேன் என்பதாலும் அவர் சுதாரித்துக் கொண்டு என் மீது திருட்டுப் பழி போடுகிறார்.

அவர் உங்கள் மீது பழி சுமத்த என்ன காரணம் என செய்தியாளர்கள் கேட்டபோது.? என அவர்தான் பார்வதிய வச்சிருக்காரு என்று சொல்லிவிட்டார்.

இந்த சம்பவம் திரை உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நயன்தாரா நடித்த அறம், ஐரா உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கே ஜே ஆர் ஸ்டுடியோ நிறுவனர் கோட்டப்பாடி ராஜேஷ்.

இவர் அஜித் நடித்த விஸ்வாசம் பட தமிழக வெளியீடு உரிமையை பெற்று இருந்தார்.

ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் மோதிய போது ரஜினி படத்தை அஜித் முந்திவிட்டார் என ட்விட்டர் புரமோஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Parvathy Nair and Producer KJR Rajesh connection

‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதியை அறிவித்தார் சுந்தர் சி ..!

‘காபி வித் காதல்’ OTT ரிலீஸ் தேதியை அறிவித்தார் சுந்தர் சி ..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த படம் ‘காபி வித் காதல்’.

இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடித்து இருந்தனர்.

இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, ​​காபி வித் காதல் படத்தின் OTT வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

ZEE5யில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தார் சுந்தர்.சி.

காபி வித் காதல்

Sundar C announces ‘Coffee with Kadhal’ OTT release date

More Articles
Follows