கேப்டன் விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு

கேப்டன் விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு.

இவர் தற்போது ‘வாரிசு’ படத்தில் நடித்துவருகிறார்.மேலும், இவர் ‘ஜவான்’ மற்றும் ‘ஜெயிலர்’ படத்திலும் நடிக்க உள்ளார்.

நாளை திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் ‘காபி வித் காதல்’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜயகாந்தை சந்தித்து அவருடன் புகைப்படமும், வீடியோவும் எடுத்துக்கொண்டார் யோகி பாபு.

மேலும், விஜயகாந்த் சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை, யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

yogi babu met captain vijayakanth

‘தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல ஹீரோ?

‘தளபதி 67’ படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல ஹீரோ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தளபதி 67’ படத்தில் ஒரு பவர்ஃபுல் கேரக்டருக்காக பிரபல மலையாள நடிகர்களான பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் நிவின் பாலி ஆகியோரிடம் லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் மற்றொரு பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் சமீபத்திய சமூக ஊடக பதிவு , அவர் மிகவும் விரும்பப்படும் பாத்திரத்தைப் பெற்றிருக்கலாம் என்ற சலசலப்பை உருவாக்கியது.

சமூக வலைத்தள பக்கக்தில் லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்ற கேப்ஷனுடன் செல்ஃபீ பதிவிட்டுருப்பதால் அவர் நடிப்பது உறுதியாகிவிட்டது.

CRUSH.. LOVE.. MARRIAGE.; ‘லவ் டுடே’ புரோமோசனில் நக்கலடித்த சத்யராஜ்

CRUSH.. LOVE.. MARRIAGE.; ‘லவ் டுடே’ புரோமோசனில் நக்கலடித்த சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் நாயகனாக நடித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.

இந்த படத்தில் சத்யராஜ், இவானா, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை ரெட் ஜயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் மற்றும் பிரதீப் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த பேட்டியில் சத்யராஜ் அவரது பாணியில் ஒரு பஞ்ச் டயலாக்கை தெரிவித்திருக்கிறார்.

அந்த டயலாக் இதோ…

“எந்த எழவுன்னே தெரியாமல் ஜொள்ளுவிட்டால் அது க்ரஷ்..

இந்த எழவு தெரிஞ்சு ஜொள்ளுவிட்டால் அது லவ்.. இந்த ரெண்டு எழவும் கனெக்ட் ஆச்சுன்னா அது கல்யாணம்.” என பேட்டியளித்துள்ளார்.

2K கிட்ஸ் காதலை சொல்ல வருகிறது இந்த ‘லவ் டுடே’. நாளை இந்த பட விமர்சனத்தை பார்ப்போம்..

Sathyaraj Interview for Love Today movie promotion

#LoveToday Special interview with #Sathyaraj and @pradeeponelife. In Theatres From tomorrow!

▶️https://youtu.be/nQ4BIvPrMro
A @thisisysr vibe 🥁
#LoveTodayfromNov4th
@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @RedGiantMovies_ @Udhaystalin
@archanakalpathi

@MShenbagamoort3
@aishkalpathi @venkat_manickam @iYogiBabu @realradikaa @DKP_DOP @PradeepERagav @mkt_tribe @i__ivana_ @raveena116 @Pallavi_offl @iamSandy_off @Synccinema @SonyMusicSouth @AajeedhK @vijayvaradaraj @adithya_kathir #FinallyBhaarath @malinavin @onlynikil @venkystudios

பாகிஸ்தான் பாட்ஷா-வை பார்த்து இருக்கீங்களா.? ரஜினி ஸ்டைலில் கலக்கும் பாகிஸ்தானி.!

பாகிஸ்தான் பாட்ஷா-வை பார்த்து இருக்கீங்களா.? ரஜினி ஸ்டைலில் கலக்கும் பாகிஸ்தானி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த்.

இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரஜினி போல் தோற்றத்தில் பாகிஸ்தான் ஒருவர் இருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் பலோசிஸ்தான் மாநிலத்தின் குவெட்டா நகரத்தை சேர்ந்தவர் ரஹ்மத் காஷ்கோரி. 62 வயதான இவர் பாகிஸ்தானில் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

ரஜினிகாந்தின் தோற்றத்தில் போன்றே, தான் இருப்பதால் ரஜினிகாந்த்போலவே தன்னுடைய நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொண்டார் ரஹ்மத்.

பாகிஸ்தான் மக்கள் ரஹ்மத்தை ‘பாகிஸ்தான் ரஜினிகாந்த்’ என்றே மக்கள் அழைப்பார்கள்.

ரஜினிகாந்த்

Rehmad looks like superstar Rajinikanth

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…; மீண்டும் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ நாகராஜ்

நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு…; மீண்டும் இயக்கத்தில் ‘தினந்தோறும்’ நாகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாற்றம் ஒன்றே மாறாதது’.. என்பது எத்தனை சத்தியமானது என்பதற்கு இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜின் வாழ்க்கையும் உதாரணம்.

1998 ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் ‘தினந்தோறும்’.

முரளி – சுவலட்சுமி நடித்த இந்த படம் வெளிவந்தபோது பத்திரிகை உலகம் கொண்டாடி தீர்த்தது.

இந்தபடம் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் அன்றை முன்னணி தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள் நாகராஜுடன் இணைந்து பணியாற்ற தூதனுப்பினர்.

இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘வானம் நீதானா அந்த நிலவும் நீதானா’ என்ற பாடல் பெரிய ஹிட்டானது.

தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ பெயரில் படம் ரீமேக்கானது. படத்தின் வெற்றியை தொடர்ந்து நாகராஜின் பெயருடன் படத்தின் பெயரும் ஒட்டிக்கொண்டு ‘தினந்தோறும்’ நாகராஜ் ஆனார்.

என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.

பிறகு கெளதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ் இயக்கத்தில் 2013 ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படம் வெளியானது.

அதனைத்தொடர்ந்து தமிழ் சினிமா பட விவாதங்கள் பலவற்றில் பங்கேற்ற நாகராஜ், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என்பதுபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்.

Q சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சசிகுமார். R இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்.

பெயரிடப்படாத இந்த படத்திற்கு நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

பிரபல இசையமைப்பாளர் C. சத்யா இசையமைக்கிறார்.

காடன், இடிமுழக்கம் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடனம் – சாண்டி
ஸ்டண்ட் – தினேஷ் சுப்பராயன்.

OTT வெளியீட்டிற்கு முன்னதாக, ‘பிரம்மாஸ்திரா’ வில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த மௌனி ராய்

OTT வெளியீட்டிற்கு முன்னதாக, ‘பிரம்மாஸ்திரா’ வில் தனது கதாபாத்திரம் பற்றி மனம் திறந்த மௌனி ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பிரம்மாஸ்திரா’ டிஜிட்டல் வெளியீட்டிற்கு முன்னதாக, நடிகை மௌனி ராய் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி பேசினார்.

மேலும் ‘பிரம்மாஸ்திரா’வில் தான் பெற்ற அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார் மௌனி.

“பிரம்மாஸ்திரம் எப்போதுமே மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

இது போன்ற புராணக்கதைகளுடன் பணிபுரியும் வாய்ப்பை எனக்கு வழங்கியமைக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

பிரம்மாஸ்திராவில் பணியாற்றிய நாட்களை நான் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக கருதுவேன் என்றார்.

More Articles
Follows