தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுந்தர்.சி இயக்கத்தில் காதல் மற்றும் காமெடி கலந்த குடும்ப படமாக உருவான படம் ‘காபி வித் காதல்’.
குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.
மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
இந்த காதல் பட்டாளத்துடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்ளிட்டோரும் இணைந்துள்ளார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் தமிழக திரையங்க வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் காபி வித் காதல் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்
Coffee with Kadhal songs and Trailer release updates