தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு ஒட்டு மொத்த இசை ப்ரியர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று முதல் இந்தியாவில் எந்த மூலையில் திரும்பினாலும் எஸ்பிபி பாடல்களையே கேட்கிறோம்.
ரசிகர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்தனர்.
கொரானோ தொற்று காரணமாக பலரால் நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை.
ஆனாலும் சில பிரபலங்கள் எஸ்பிபி மீது வைத்திருந்த மரியாதையினால் நேரில் சென்றனர்.
இன்று SPB பண்ணை வீட்டிற்குள் அனுமதி இல்லை என தெரிந்தும் தாமரைப்பாக்கத்தில் நடந்த இறுதிச் சடங்கில் நடிகர்கள் விஜய், அர்ஜுன், ரகுமான், வைபவ், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் இரங்கல் தெரிவிக்கவோ அஞ்சலி செலுத்தவோ செல்லவில்லை.
சினிமாவுக்கு வருவதற்கு முன் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்தரம் அஜித்.
எஸ்பிபி உடல் நல்லடகத்தின் போது விஜய் நேரில் இறுதி அஞ்சலி
அப்போது ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குப் படத்தில் அஜித்தை நாயகனாக்க தயாரிப்பாளருக்கு அவரை அறிமுகப்படுத்தியவரே எஸ்பிபி தானாம்.
மேலும் எஸ்பிபி மகன் சரணும், அஜித்தும் பள்ளி காலத்திலிருந்தே நண்பர்கள் என்பதும் தெரிந்த ஒன்றுதான்.
இறுதி அஞ்சலிக்கு நேரில் வர முடியாத சூழ்நிலை அஜித்துக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் ஓர் இரங்கல் அறிக்கையாவது கொடுத்திருக்கலாமே ? அதற்கு கூட மனமில்லையா அஜித் சார்.?
அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல்களான… உன்னைப் பார்த்த பின்பு நான்…(காதல் மன்னன்) சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்.. (அமர்க்களம்) ஆகிய பல பாடல்களை பாடியது எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
No condolence message from Ajith to late singer SPB