சரக்கு அடிக்கலாமா? விமலுடன் விவாதிக்கும் வரலட்சுமி

சரக்கு அடிக்கலாமா? விமலுடன் விவாதிக்கும் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varalaxmi in kadhal mannanவிமல், வரலட்சுமி இணைந்து நடித்து வரும் படம் ‘காதல் மன்னன்’.

இதில் வரலட்சுமி, போலீஸ் துணை சூப்பிரண்டு மகளாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக சந்திர மவுலி நடிக்கிறார்.

சென்னை கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதன் சூட்டிங் காட்சி ஒன்றில் சரக்கு பாட்டிலை வைத்துக் கொண்டு, இதை குடிக்கலாமா? வேண்டாமா? டாஸ்மாக், முடிவெடுக்கும் நேரமிது. என்று விமல் மற்றும் இயக்குனருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வரலட்சுமி.

வரலட்சுமியின் இந்த கேள்விக்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

கடை வாடகை கொடு இல்லேன்னா காலி செய்; லதாரஜினிக்கு கோர்ட் உத்தரவு

கடை வாடகை கொடு இல்லேன்னா காலி செய்; லதாரஜினிக்கு கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shopரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஒன்றில், கடந்த 25 ஆண்டுளாக, ‘டிராவல் எக்சேஞ்ச் இந்தியா’ தனியார் டிராவல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு வாடகையாக மாதம் 3702 ரூபாயை செலுத்தி வந்தார்.

இந்நிலையில், திடீரென வாடகை தொகையை 21160 ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, லதா ரஜினிகாந்த் சார்பில் மோகன் மேனன் தொடர்ந்த வழக்கில், மாநகராட்சி அளித்த பதிலில், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கடைவாடகை மாற்றியமைக்கப்படுவதாகவும், இதுவரை முறையாக செலுத்திவந்த லதா ரஜினி திடீரென எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், உயர்த்தபட்ட வாடகையை செலுத்த விருப்பமில்லாவிட்டால் கடையை காலி செய்துவிட்டு பொது ஏலத்தில் பங்கேற்று கடையை பெறும் முயற்சியில் லதா ரஜினிகாந்த் ஈடுபடலாம் எனவும் மாநகராட்சி தெரிவித்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடை வாடகை உயர்த்தப்பட்டதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

பல ஆண்டுகளாக அந்த இடத்தில் தொழில்புரிந்து வருவதால், மாநகராட்சி வாடகையை ஏற்பதா வேண்டாமா என லதா ரஜினிகாந்த் முடிவு செய்துகொள்ளலாம்.

லதா ரஜினிகாந்துக்கு கடை தேவைப்படும்பட்சத்தில் ஒரு மாதத்தில் அதற்கான தொகையை செலுத்த வேண்டும்.

தவறும்பட்சத்தில் அந்த கடையை மாநகராட்சி ஏலத்தில் விடலாம்.

ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டால் அதனை எதிர்த்தும் லதா ரஜினிகாந்த் நீதிமன்றத்தை நாடலாம் என்பதால், ஏலம் அறிவிக்கப்பட்ட பின்னரும் கடையை காலி செய்யாவிட்டால், காவல் துறை உதவியுடன் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கடைக்குள் சென்று சென்னை மாநகராட்சி காலி செய்யலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

HC gives one month for Latha Rajinikanth to accept new rent for shop

ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் பட இசை வெளியீட்டு தேதி

ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் பட இசை வெளியீட்டு தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jayam Ravis Tik Tik Tik movie audio release updates

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகியுள்ள படம் டிக் டிக் டிக்.

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம்ரவி, நிவேதா பெத்துராஜ், ஆரோன் ஆசிஸ். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அடுத்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் பாடல்களை ஜனவரி மாதம் 4ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Jayam Ravis Tik Tik Tik movie audio release updates

காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

காதலருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruthihassan celebrated Christmas with her lover Michael Corsaleநடிகை ஸ்ருதிஹாசனும், லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் கூட இருவரும் ஒன்றாகவே பங்கேற்று வருகின்றனர்.

அண்மையில் கூட நடிகர் ஆதவ் கண்ணாதாசனின் திருமணத்தில் மைக்கேல் கோர்சலுடன் ஸ்ருதி கலந்து கொண்டார்.

இந்நிலையில், ஓரிரு தினங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் படம் ஒன்றை ஸ்ருதியே தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shruthihassan celebrated Christmas with her lover Michael Corsale

அடுத்த டைரக்சன் மெர்சல் புரொடியூசருக்குதான்..; தனுஷ் கன்பார்ம்

அடுத்த டைரக்சன் மெர்சல் புரொடியூசருக்குதான்..; தனுஷ் கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush as directorநடிப்பு, தயாரிப்பு என பல துறைகளை கடந்து தற்போது டைரக்சன் துறையிலும் காலடி எடுத்து வைத்துவிட்டார் தனுஷ்.

இவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படம் பட்டி முதல் சிட்டி வரை பட்டைய கிளப்பியது.

எனவே அடுத்த படத்தை விரைவில் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் மௌனமே அதற்கு பதிலாக கிடைத்தது.

இந்நிலையில் தன் அடுத்த படத்தை மெர்சல் பட தயாரிப்பாளர் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்க்கு இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அதில் தான் நடிக்கவுள்ளதையும், மற்ற விவரங்களை 2018ல் வெளியிடுவேன் என தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ்-சாய்பல்லவி கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தனுஷ்-சாய்பல்லவி கூட்டணியில் இணைந்தார் வரலட்சுமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maari 2 stillsபாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 விரைவில் உருவாகவுள்ளது.

இப்படத்தை தனுஷ் தயாரித்து நடிக்கிறார்.

நாயகியாக சாய்பல்லவி நடிக்க, முக்கிய வேடத்தில் கிருஷ்ணா நடிக்கிறார்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

More Articles
Follows