அஜித் படத்தலைப்பில் விமல்-வரலட்சுமி-நிவின்பாலி

அஜித் படத்தலைப்பில் விமல்-வரலட்சுமி-நிவின்பாலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vimal Varalakshmi starring in Ajith movie title Kadhal Mannanஅண்மைகாலமாக அஜித்தின் படங்கள் ஆக்ஷன் ரூட்டில் சென்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால் இவரது ஆரம்ப காலத்தில் காதல் படங்களால் ரசிகர்களை கவர்ந்தார்.

அதில் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன் படமும் ஒன்று.

இந்நிலையில் புதுமுக இயக்குநர் முத்துக்குமார் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்திற்கு ‘காதல் மன்னன்’ என்று பெயரிட்டுள்ளன்ர.

குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

விமலின் ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். விமலின் தந்தையாக பாண்டியராஜன் நடித்துள்ளார்.

இவர்களுடன் சாம்ஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட நகைக்சுவை பட்டாளமே நடிக்கிறதாம்.

கெஸ்ட் ரோலில் நடிக்க நிவின் பாலியுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார்களாம்.

அவர் ஒப்புக் கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது.

Vimal Varalakshmi starring in Ajith movie title Kadhal Mannan

கமல் சொன்னது 100/100 உண்மை… முக.ஸ்டாலின்

கமல் சொன்னது 100/100 உண்மை… முக.ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal statement regarding TN Govt corruption is 100 true Says MK Stalinமுதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் பெரும் பரபரப்பாகிவிட்டது.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக அதிமுக கட்சி பிரிந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீது ஓபிஎஸ் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மேலும் தமிழக அரசின் ஊழலை கண்டித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் முகஸ்டாலின் கூறியதாவது…. தமிழக அரசின் ஊழலை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டது என சில தினங்களுக்கு கமல் கூறியிருந்தார்.

தற்போது கமல் சொன்னது 100/100 உண்மை என நிரூபணமாகிவிட்டது. என்றார் ஸ்டாலின்.

Kamal statement regarding TN Govt corruption is 100 true Says MK Stalin

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி-அரவிந்த்சாமியுடன் 2 ஹீரோக்கள்

மணிரத்னம் படத்தில் விஜய்சேதுபதி-அரவிந்த்சாமியுடன் 2 ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and Arvind Swamyகாற்று வெளியிடை படத்தை அடுத்து, மணிரத்னம் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படம் நான்கு நாயகர்களை கொண்ட கதை என்று தெரியவந்துள்ளது.

எனவே விஜய்சேதுபதியுடன் அரவிந்த்சாமி, துல்கர்சல்மான், பகத் பாசில் ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாக்கவிருக்கிறார்களாம்.

இப்படத்திற்கு இசை… என்று சொன்னாலே அது ஏ.ஆர்.ரஹ்மான்தான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணியாற்றவிருக்கிறார்.

ஓர் உயிரை பழிவாங்கிய பிக்பாஸ் வீடு.?

ஓர் உயிரை பழிவாங்கிய பிக்பாஸ் வீடு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வருகிறார்.

இதற்கான செட் சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் கேட்டபோது, அப்படியொரு சம்பவமே இங்கு நடைபெறவில்லை என்றும் பின்னர் விசாரித்து சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நசரேத் பேட்டை போலீஸார் கூறுகையில்…

“பிக்பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

அவரது மரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளது” என்றனர்

ஓயாத அலை; ஓவியாவுக்கு ஓட்டு போட சொல்லும் ஓட்டல் பில்

ஓயாத அலை; ஓவியாவுக்கு ஓட்டு போட சொல்லும் ஓட்டல் பில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bigg boss oviya hotel billவிஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள பலரும் அடிமையாகிவிட்டனர் என்றே சொல்லலாம்.

இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருடைய பாசத்தையும் அள்ளியுள்ளார் ஓவியா.

இவரை அங்குள்ள போட்டியாளர்கள் ஒடுக்க நினைப்பதால், ஓவியாவை காப்பாத்துங்க… சேவ் ஓவியா என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அடக்கப்படுப‌வர்கள் மேல் வரும் பரிதாபமும், ஒடுக்க நினைப்பவர்கள் மேல் வரும் பாசமுமே மக்களை ஈர்த்துள்ளது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இந்நிலையில் சென்னையை சேர்ந்து ஓட்டல் பில் ஒன்றிலும் ஓவியாவுக்கு ஓட்டு போடுங்க என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இவையில்லாமல் சர்ச் மாதா திருவிழா என அனைத்திலும் ஓவியாவே தென்படுகிறார்.

பிக்பாஸ் முடியும் வரை இந்த ஓவியா அலை ஓயாது என்றே தெரிகிறது.

Even Hotel bills support Oviya in Bigg Boss show

church function oviya

ஜீவா-நிக்கி ஜோடிக்கு கீ கொடுத்து உதவும் சிம்பு

ஜீவா-நிக்கி ஜோடிக்கு கீ கொடுத்து உதவும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kee movie stillsசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கி வரும் படம் கீ.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஜீவா, நிக்கி கல்ராணி. அணைகா சோடி, R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்ட்டரை இன்று இரவு 8 மணிக்கு சிம்பு வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

More Articles
Follows