தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் சமயத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ‘வலிமை அப்டேட் ’ வேண்டும் என கேட்டிருந்தார்.
இதற்கு வானதி பதிலளிக்கையில்.. “நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும்” என்று பதில் அளித்து இருந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் கமலை தோற்கடித்து வானதி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கு பிறகு ஜூலை 11ல் அஜித்தின் ‘வலிமை’ பட மோசன் போஸ்டர் வெளியானது.
இதை விட்டு வைக்காத வானதி…
“#ValimaiUpdate -> #ValimaiUpdated
நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது https://t.co/Yc1DANGJlg என பதிவிட்டு இருந்தார்.
இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் பலவிதமான கமெண்ட்டுக்களை போட்டு வருகின்றனர்.
அதில் சில கமெண்ட்ஸ்கள்….
ஒருவரின் உழைப்பிற்கு நீங்கள் சொந்தம் கொண்டாடுவதா?
அடுத்தவர் உழைப்பை திருடுவது அசிங்கம்
த்து வெக்கமா இல்ல உங்களுக்கு. கோயம்புத்தூர்ல vaccine இல்ல, உங்க தொகுதில பல இடத்தில மழை வந்த தண்ணி தேங்கி நிக்குது இதெல்லாம் சரி பண்ண துப்பில்ல. வந்துதிங்க #valimai update னு சொல்லிக்கிட்டு. valimai update க்கும் உங்களுக்கு என்ன சம்மந்தம் என்று மிகவும் காட்டமாக பதிவிட்டு உள்ளார்.
கொஞ்சம்கூட வெட்க்கம் மானம் சூடு சொரனை எதுவும் இல்லைபோல…..
ஓட்டு போட்ட மக்கள் தடுப்பூசி இன்று உள்ளனர். மத்தியில் ஆட்சியில் உள்ள உங்கள் ஒன்றிய அரசிடம் கேட்டு அதை பெற்று தர வக்கில்லை…
இங்கு வலிமை அப்டேட் கேக்குதோ…
வானதி மேம்
கோவைல உங்கள மக்கள்
காரி துப்புராகலாமே
வெற்றி பெற்ற உடன் என்று உறுதிமொழி அளித்தீர்கள்
ஆனால் இரண்டரை மாதம் கழித்துதான் வலிமை அப்டேட் வந்துள்ளது
சாதாரண வலிமை அப்டேட்டுக்கே இரண்டரை மாதம் ஆகும் என்றால் மக்கள் பிரச்சனையை எப்படி சீக்கிரம் முடிப்பீர்கள் ???
அப்ப இந்த வருடம் மனு கொடுத்தால் அடுத்த வருடம் தான் சரி செய்வீர்களா??
Netizens slams BJP MLA Vanathi Srinivasan