மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

மாஸ்டரை இயக்கும் ‘டாக்டர்’ பட டைரக்டர்..? வேற மாரி.. வேற மாரி..

nelson dilipkumarமாஸ்டர் படத்தை அடுத்து ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என கூறப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

கிட்டத்தட்ட இது உறுதியான பட்சத்தில் இந்த படத்திலிருந்து விலகினார் முருகதாஸ்.

எனவே தளபதி 65 படத்தின் இயக்குனர் யார்? என்ற கேள்வி விஜய் ரசிகர்களிடையே எழுந்தது.

விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் பேரரசு இயக்குவார் என்று தகவல்கள் பறந்தன.

ஆனால் இது தொடர்பான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இயக்குவார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையா? அல்லது இதுவும் வழக்கம்போல வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒருவேளை இது உண்மையானால் இது வேற மாரியான கூட்டணியாக இருக்கும் என நம்பலாம்.

Nelson Dilipkumar to direct Thalapathy 65

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

ஹீரோவாக சிம்புவின் 18 ஆண்டுகள்…; ஹிட் எத்தனை? ப்ளாப் எத்தனை?

simbuகுழந்தை நட்சத்திரமாக பலர் நடித்தாலும் ஒரு சில குழந்தைகளே மக்கள் மனதில் இடம் பிடிப்பர்.

அதில் கமல், ஸ்ரீதேவி, மீனா போல முக்கியமானவர் நடிகர் சிம்பு.

அவரின் தந்தை டிஆர் இயக்கத்தில் 12க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். எங்க வீட்டு வேலன் படத்தை யாராலும் மறக்க முடியாது.

2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியான ‘காதல் அழிவதில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படம் வருவதற்கு முன்பே 2001ல் ‘சொன்னால்தான் காதலா’ என்ற டிஆரின் படத்தில் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.

இந்த நிலையில் இன்றுடன் சிம்பு ஹீரோவாகி 18 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்துள்ளனர்.

இவர் தற்போது ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தன்னுடைய 46வது படமாக “ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ஹிட் படம் வரிசையில் ஓரிரு படங்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்ல முடிகிறது.

மன்மதன், வாலு, வல்லவன், தொட்டி ஜெயா, கோவில், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, சிலம்பாட்டம், இது நம்ம ஆளு, செக்கச் சிவந்த வானம் ஆகிய சொற்ப ஹிட் படங்களே உள்ளன.

இதில் மெகா ஹிட் படம் என ‘மன்மதன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை மட்டுமே சொல்ல முடியும்.

ஆனாலும் இவருக்கான ரசிகர்களுக்கு என்றுமே குறைவில்லை எனலாம்.

இவருக்கு உள்ள திறமைக்கு சரியான படங்கள் அமையவில்லை என்றே சினிமா வல்லவன்கள் சொல்கின்றனர்.

மேலும் இவருடைய கால்ஷீட் சொதப்பல்கள், சூட்டிங்க்கு சரியான நேரத்திற்கு வராத பஞசாயத்து, கிசுகிசுக்கள் உள்ளிட்டவையே இவருக்கு சினிமாவில் பின்னடவை தந்துள்ளது என்கின்றனர்.

தற்போது உடல் எடையை குறைத்து தனது 2வது இன்னிங்க்சை ஆரம்பித்துள்ளார். இனி என்னாகும் என்று பார்க்கலாம்.

STR completes 18 years in Kollywood

இஸ்லாமியர் நெற்றியில் திலகமிட முடியுமா? ராஜமௌலிக்கு பாஜக MP எச்சரிச்கை

இஸ்லாமியர் நெற்றியில் திலகமிட முடியுமா? ராஜமௌலிக்கு பாஜக MP எச்சரிச்கை

கோமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகிய உண்மையான போராளிகளின் கதைக்களத்தை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இதில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

முக்கிய கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அண்மையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் கோமரம் பீம் கேரக்டரின் புரொமோ வீடியோ ஒன்று வெளியானது.

அதில் இஸ்லாமியரைப் போல பீம் கேரக்டர் உடை அணியும் காட்சியுள்ளது.

இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தெலங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான பந்தி சஞ்சய் குமார்.

அவர் பேசியதாவது… “பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்று கோமரம் பீம் தலையில் ராஜமௌலி குல்லா அணிவித்தால் நாங்கள் அமைதியாக இருப்போமா?

கோமரம் பீம் அவர்களை குறைவாக மதிப்பிட்டோ, ஆதிவாசிகளின் உரிமைகளை, உணர்வுகளைத் தாழ்த்தியோ பட கதை இருந்தால் படம் ஓடும் தியேட்டர்களை எரிப்போம்.

ராஜமௌலிக்கு தைரியம் இருந்தால் ஒரு இஸ்லாமியத் தலைவரை நெற்றியில் திலகத்தோடு, காவி உடை அணியும் போல காட்சி வைக்க முடியுமா?”” என கேள்வி கேட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

RRR movie

Telungana BJP MP warns Director Rajamouli

விஜய்-நயன்தாரா தங்கையிடம் பரதம் கற்கும் நடிகர் சிம்பு

விஜய்-நயன்தாரா தங்கையிடம் பரதம் கற்கும் நடிகர் சிம்பு

கொரோனா காலத்தில் எவருமே எதிர்பாராத வகையில் தனது உடல் எடையை 30 கிலோ குறைத்துள்ளார் சிம்பு.

சில தினங்களாக வெளியாகும் சிம்புவின் ஸ்லிம் படங்களை பார்த்து கோலிவுட்டே ஆச்சரியத்தில் உறைந்துள்ளது.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இந்த படத்திற்காக களரி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல வித்தைகளை கற்று வருகிறாராம் சிம்பு.

நடிகை சரண்யாவிடம் பரதநாட்டியம் கற்கும் சிம்பு படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலாயுதம் படத்தில் விஜய்யின் தங்கையாகவும் யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும் நடித்தவர் சரண்யா என்பது குறிப்பிடத்தக்கது.

eeswaran simbu saranya mohan

STR learns Bharatanatyam from Saranya Mohan

மலையாள படம் ரீமேக்…? வெற்றிமாறன் சசிகுமார் கதிரேசன் கூட்டணி

மலையாள படம் ரீமேக்…? வெற்றிமாறன் சசிகுமார் கதிரேசன் கூட்டணி

sasikumar vetri maaranபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோர் இணைகின்றனர்.

ஒரு புதிய படத்தை தயாரிப்பதற்காக இவர்கள் இணைந்துள்ளனர்.

மேலும் கதை மற்றும் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதுகிறார்.

இதில் நாயகனாக சசிகுமார் நடிக்கிறார் என அறிவித்துள்ளனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு இப்பட சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் யார்? என்பதை அறிவிக்கவில்லை.

மலையாளத்தில் பிரித்விராஜ்-பிஜுமேனன் நடிப்பில் வெளியாகி, சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்க்காக இந்த படம் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் அப்பட தமிழ் ரீமேக் உரிமையை கதிரேசன் வாங்கியுள்ளார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

மேலும் அதன் தமிழ் ரீமேக்கில், சசிகுமார் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த படம் அந்த படமா? என்பதை படக்குழு அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

Vetri Maaran and Sasi Kumar joins for a new tamil film

பாபா கா தாபா மோசடி..; நல்லது செய்யவே மறுக்கும் மக்கள்… – மாதவன் கண்டனம்

பாபா கா தாபா மோசடி..; நல்லது செய்யவே மறுக்கும் மக்கள்… – மாதவன் கண்டனம்

Baba Ka Dhaba delhiடெல்லியில் பாபா கா தாபா என்று பெயரிடப்பட்ட ஒரு உணவகத்தை வயதான தம்பதியினர் நடத்தி வந்தனர்.

காந்தா பிரசாத் தம்பதியினர் அந்த பகுதியில் பிரபலம்.

அவர்களை குறித்து ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார் யூடியுப் சேனல் நடத்தும் கவுரவ் வாசன்.

அந்த வீடியோவில்… கொரோனா பிரச்சினை காரணமாக காந்தா பிரசாத் நடத்தி வரும் ஓட்டலுக்கு யாரும் யாரும் சாப்பிட வருவதில்லை. அவர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர் என வீடியோ பதிவிட்டார்.

இதனால் சில நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றாக திரண்டு அந்த ஓட்டலில் சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வருமானம் கூடியது.

மேலும் நல்ல உள்ளங்கள் பலரும் அந்த உணவகத்துக்கு நிதியுதவி அளிக்க தொடங்கினர்.

ஆனால் இந்த நிதியுதவியை கவுரவ் வாசன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தன் வங்கி கணக்கில் ஏற்றிக் கொண்டார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை தெரிந்துக் கொண்ட காந்தா பிரசாத் டெல்லி தெற்கு மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து நிதியுதவி அளித்தவர்கள் கவுரவ் வாசனை கடுமையான திட்டத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்த தகவல்கள் அறிந்துக் கொண்ட நடிகர் மாதவன் தன் ட்விட்டரில்…

பாபா கா தாபா உணவக உரிமையாளர் ஏமாற்றப்பட்டுள்ளார்.

இது போன்ற சம்பவங்களால் தான் மக்கள் நல்லது செய்ய முன்வர மறுக்கின்றனர். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

அவர்களை ஏமாற்றிய அந்த மோசடிக்கார ஜோடி (கவுரவ் மற்றும் அவரது மனைவி) கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே நீதி நிலைநாட்டப்படும். டெல்லி காவல்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது”.

இவ்வாறு மாதவன் பதிவிட்டுள்ளார்.

Actor Madhavan reacts to Baba Ka Dhaba cheating allegation

More Articles
Follows