தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2012 ஆண்டு டிசம்பர் 16ல் டெல்லியில் மருத்துவ மாணவி, ‘நிர்பயா’ நண்பருடன் இரவில், தனியார் பஸ்சில் பயணம் செய்த போது, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவளுடைய நண்பரும் தாக்கப்பட்டார்.
இதனையடுத்து பஸ் டிரைவர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், ராஜஸ்தானில் கைது. வினய் சர்மா, பவன் குப்தா, 17 வயது சிறுவன் டெல்லியில் கைது. அக்ஷய்குமார் சிங் ஆகியோர் அவுரங்கபாத்தில் கைது செய்யப்பட்டார்.
அப்போது சப்தர்ஜங் மருத்துவமனையில், மாஜிஸ்திரேட்டிடம் நிர்பயா வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
இந்த சம்பவம் நாடெங்கும் பற்றி எரியவே குற்றவாளிகளை தூக்கிலிட வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது.
நிர்பயா மேல் சிகிச்சைக்காக, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை டிசம்பர்-29 நிர்பயா உயிரிழந்தார்
இது தொடர்பான வழக்கு கிட்டதட்ட 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
பல கட்ட விசாரணை, மனு தள்ளுபடி உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறியது.
இன்று காலை இறுதியாக குற்றவாளி பவன் குப்தா சார்பாக அளிக்கப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
நிர்பயா வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து திருநெல்வேலி கமிஷ்னர் அர்ஜீன் சரவணன் என்பவர் தெறி பட விஜய் ஸ்டையில் தன் ட்விட்டரில் ஒரு போஸ்டரை வெளியிட்டு… டீ சொல்லுங்க ராஜேந்திரன் என கெத்தாக பதிவிட்டுள்ளார்.
இது தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வழக்கை போல் பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என பலரும் கமிஷ்னருக்கு வேண்டுகோள் விடுத்து கமெண்ட் அளித்து வருகின்றனர்.
கடைசியாக ..
டீ சொல்லுங்க ராஜேந்திரன்…#நிர்பயா#NirbhayaJustice #nirbhayagetsjustice pic.twitter.com/6c5wNhyhyi
— Arjun Saravanan (@ArjunSaravanan5) March 20, 2020