நெல் ஜெயராமன் மரணம்; அனைத்து செலவுகளையும் சிவகார்த்திகேயன் ஏற்றார்

agriculture students with nel jayaramanதமிழகத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்.

இவருக்கு சித்ரா என்ற மனைவியும் 11 வயதில் மகனும் உள்ளனர்.

இவர் 170 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து வைத்திருந்தார்.

மேலும் பாரம்பரிய நெல்வகைகள காப்பாற்றுவதற்காக தேசிய, மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தினார்.

கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். இதேபோல தி.மு.க தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.

இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5.00 மணியளவில் காலமானார்.

அவரது உடல் சென்னையிலுள்ள தேனாம்பேட்டையில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அரசியல் பிரபலங்கள் முதல் நடிகர் கார்த்தி உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 12 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இதனையறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்வதற்கான மொத்த செலவு மற்றும் அவருக்கான மருத்துவ செலவையும் ஏற்றுள்ளார்.

இவையில்லாமல் அவரின் மகன் படிப்புச் செலவையும் ஏற்றுள்ளார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Nel Jayaraman passed away Sivakarthikeyan takes his funeral and his sons education expenses

Overall Rating : Not available

Latest Post