தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் படத்தின் இசை விழா என்பதால் பலத்த கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் அதையும் மீறிக் கட்டுக்கடங்காத ரசிகர்கள் அரங்கத்திற்கு திரண்டு வந்தனர்.
கிட்டத்தட்ட நுழைவு கட்டணச் சீட்டு மட்டும் ரூ.்2000 – 3000 வரை விற்கப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.
மேலும் அரங்கத்தின் கதவுகள் & கேட்டுகள் உடைக்கப்பட்டு தாறுமாறாக ரசிகர்கள் ஓடியதும் பின்னர் போலீஸ் தடியடி நடத்தியதும் நாம் அறிந்த ஒன்றுதான்.
மேலும் நேரு ஸ்டேடியம் அரங்கத்திற்குள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் ஒரு உற்சாகத்தால் பல இருக்கைகளை உடைத்து ஆரவாரம் செய்தனர்.
இந்த நிலையில் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா நடத்திய தில் ராஜூவின் தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்க படும் என சொல்லப்படுகின்றது.
இவ்வாறாக நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வந்துள்ளன.
Nehru Stadium officers fined Varisu producer