டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாரா; ஆச்சரியத்தில் கோலிவுட்

டாப் ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாரா; ஆச்சரியத்தில் கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nayantharas Kolamavu Kokila special show at early morningதென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வருகிறார் நயன்தாரா.

என்னதான் இவர் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வரவில்லை என்றாலும், இவரின் படங்களுக்கு மட்டும் மவுசு கூடிக் கொண்டே செல்கிறது.

படத்தில் நாயகனே இல்லாவிட்டாலும் நயன்தாரா இருக்கிறாரே அது போதும் என ரசிகர்களும் சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.

அறம், டோரா ஆகிய படங்களில் இவரே முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படத்திலும் இது தொடர்ந்துள்ளது.

பொதுவாக டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டும்தான் அதிகாலை, காலை சிறப்பு காட்சிகள் இருக்கும்.
தற்போது அந்த பெருமை நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.

கோலமாவு கோகிலா தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு சில தியேட்டர்களில் காலை சிறப்புக் காட்சி நடைபெற்றுள்ளது.

இதனால் கோலிவுட்டே நயன்தாராவை ஆச்சரியத்தில் பார்த்து வருகிறது.

Nayantharas Kolamavu Kokila special show at early morning

சண்டக்கோழி2 சிங்கிள் ட்ராக்கை ஆகஸ்ட் 20ல் வெளியிடும் விஷால்

சண்டக்கோழி2 சிங்கிள் ட்ராக்கை ஆகஸ்ட் 20ல் வெளியிடும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sandakozhi 2 first single track from August 20விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி.

இன்றும் திரைப்பட விரும்பிகளின் மிகவும் பிடித்தமான படம் என்று சொன்னால் இப்படத்தை கண்டிப்பாக சொல்வார்கள். வெளிவந்து பல வருடம் ஆன பின்னரும் இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக சண்டக்கோழி உள்ளது.

பிளாக்பஸ்டர் சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் விஷால், இயக்குனர் லிங்குசாமி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இந்த வருடம் வெளியாக உள்ள திரைப்படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக இது உள்ளது. சண்டக்கோழி 2 டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திங்கள்கிழமை அன்று யுவன் இசையில் சண்டக்கோழி 2 முதல் சிங்கிள் வெளியாகவுள்ளது.

Sandakozhi 2 first single track from August 20

60 வயது மாநிறம் படத்துக்கு யு சர்ட்டிபிகேட்; ஆகஸ்ட் 31ல் ரிலீஸ்

60 வயது மாநிறம் படத்துக்கு யு சர்ட்டிபிகேட்; ஆகஸ்ட் 31ல் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vikram Prabhus 60 Vayadu Maaniram Censored U and Release on 31st Augustகலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது.

இப்படத்திற்கு சென்சாரில் யு சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

இப்படத்தின் முழு சூட்டிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளை முடித்துவிட்டே படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabhus 60 Vayadu Maaniram Censored U and Release on 31st August

*மேயாத மான்* இந்துஜாவுடன் துருவா இணையும் *சூப்பர் டூப்பர்*

*மேயாத மான்* இந்துஜாவுடன் துருவா இணையும் *சூப்பர் டூப்பர்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhruva and Indhuja starring Super Duper movie newsதுருவா – இந்துஜா, சாரா, தேங்காய் சீனிவாசன் பேரன் ஆதித்யா நடிக்கும் “சூப்பர் டூப்பர்” இன்று பூஜையுடன் ஆரம்பம்.

ப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஏகே என்கிற அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் “சூப்பர் டூப்பர்”. இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இது ஒரு முழு நீள பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட பரபரப்பான த்ரில்லர் படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தை இயக்கும் ஏகே அதாவது அருண் கார்த்திக் குறும்படவுலகில் முத்திரை பதித்தவர். இவரது ‘லேகா’ பரவலான கவனம் பெற்ற படமாகும் .

படத்தின் நாயகனாக துருவா நடிக்கிறார். இவர் ‘ஆண்மை தவறேல் ‘படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக இந்துஜா நடிக்கிறார்.

இவர் ஏற்கெனவே ‘மேயாத மான்’, ‘மெர்க்குரி’, ‘பூமராங்’, ‘அறுபது வயது மாநிறம்’ படங்களின் நாயகி .

படம் பற்றி இயக்குநர் அருண் கார்த்திக் பேசும் போது , ” இந்தப் படம் எல்லாரும் ரசிக்கும் படி இருக்கும். இது வழக்கமான கதை கொண்ட படமல்ல என்பதைப் புரிந்துதான் நாயகன், நாயகி இருவருமே நடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

இதில் பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் ஆதித்யா முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகிறார். ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ஷாரா நடிக்கிறார்.

இவர் ‘மீசையை முறுக்கு’, ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’ , படங்களில் நடித்தவர் . அது மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் பிரபலமானவர்.

இப்படி சமூக ஊடகங்களில் புகழ் பெற்ற பலரும் இதில் நடிக்கிறார்கள் ” என்கிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்பவர் சுந்தர்ராம் கிருஷ்ணன் , இசையமைப்பவர் திவாகரா தியாகராஜன். படத்தொகுப்பு வேல் முருகன், கலை இயக்கம் சூர்யா.

இன்று தொடங்கி படப்பிடிப்பை 45 நாட்களில் முடிக்கும் திட்டத்தோடு மும்முரமாக இருக்கிறது “சூப்பர் டூப்பர்” படக்குழு.

Dhruva and Indhuja starring Super Duper movie news

super duper

பியார் பிரேமா காதல் படம் வெற்றி; இளனுக்கு கார் பரிசளித்த யுவன்

பியார் பிரேமா காதல் படம் வெற்றி; இளனுக்கு கார் பரிசளித்த யுவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan and elanகடந்த வாரம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை புரிந்து வரும் படம் “பியார் பிரேமா காதல்”.

இப்படம் மாபெரும் வெற்றி பெறவே, படத்தின் தயாரிப்பளர்கள் யுவன் ஷங்கர் ராஜா, இர்பான் மாலிக், ராஜ ராஜன் ஆகியோர் படத்தின் இயக்குனருக்கு ஒரு கார் பரிசாக கொடுத்து மகிழ்ந்தனர்.

” இந்த கார் எனக்கு மகிழ்ச்சி தந்தாலும், என் மீது நம்பிக்கை வைத்து , எனக்கு சுதந்திரம் தந்து, நான் எதிர்பார்த்ததை விட விளம்பர யுத்திகள் பல செய்து என்னை மகிழ்ச்சியில் திக்கு முக்காட செய்த என் தயாரிப்பாளர்களின் என் மீதான நம்பிக்கையும், அன்பும் தான் எனக்கு கிடைத்த மிக பெரிய பரிசு. வளர்ந்து வரும் இயக்குனருக்கு இதை விட வேறு என்ன கிடைத்திட வேண்டும்” என்கிறார் இயக்குனர் இளன்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான கே productions ராஜராஜன் கூறுகையில்…

“ஒரு தயாரிப்பாளராக ஒரு படத்தின் வெற்றி என்பது வெறும் வசூல் அடிப்படையில் மட்டுமே பார்க்க கூடாது என்பேன்.

படம் பார்க்க வரும் ரசிகன் முகம் மலர்ச்சியுடன், அயர்ச்சி இல்லாமல் திரை அரங்கை விட்டு வெளியே வந்தால், அவனுடைய அந்த திருப்தி தான், தயாரிப்பாளருக்கு பெருமை, தயாரிக்கும் நிறுவனத்துக்கும் பெருமை. எங்கள் இயக்குனர் இலன் எங்களுக்கு அந்த பெருமையை அளித்து உள்ளார்.

யுவனின் இசைக்கு ஈடு தந்து படத்தின் வெற்றியை கோலாகலமாக்கி இருக்கிறார். அந்த உழைப்புக்கும் , உத்வேகத்துக்கும் எங்களின் சிறிய பரிசு தான் இந்த கார். இலன் தந்த நம்பிக்கை, எங்களுக்கு மிக பெரிய உந்துதல். இன்னமும் இளைய இயக்குனர்களை எங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து , தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்ப்போம்’ என்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலக்கிய ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் இருவரும் ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு விஜய்சேதுபதி-25; தனுஷ் 15 லட்சம் உதவி

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு விஜய்சேதுபதி-25; தனுஷ் 15 லட்சம் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi and dhanushகடந்த 50 ஆண்டுகளில் பார்க்காத வெள்ளத்தை தற்போது கேரளா கண்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக பெய்த தொடர் மழையால் கேரள தேசமே வெள்ளக் காடாக காட்சியளித்து வருகிறது.

தற்போது இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால், பஸ், ரயில் மற்றும் விமான போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன், மக்களுக்கு உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அடுத்த வாரம் வரும் (ஆகஸ்ட் 25) ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரோகினி, பிரகாஷ்ராஜ், அபி சரவணன் உள்ளிட்ட நிவாரண நிதி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதி ரூ. 25 லட்சமும், தனுஷ் 15 லட்சமும் நிதியை கொடுத்து உதவியுள்ளனர்.

More Articles
Follows