தன் காதலனை குறித்து பொது மேடையில் பேசிய நயன்தாரா

தன் காதலனை குறித்து பொது மேடையில் பேசிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nayantharaஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார் நயன்தாரா.

அறம் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் கோலமாவு கோகிலா என்ற படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து இமைக்கா நொடிகள் படமும் தயாராகவுள்ளது.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய World Of Women 2018 என்ற விருது விழாவில் கலந்து கொண்டார் நயன்.

அவருக்கு சினிமாவில் சாதித்து வரும் பெண் என்ற அடிப்படையில் ஒரு விருது வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நயன்தாரா, என்னுடைய இந்த முன்னேற்றத்திற்கு காரணமான என் அம்மா, அப்பா, அண்ணன் ஆகியோருக்கு நன்றி என்றார்.

முக்கியமாக தன் காதலனுக்கும் நன்றி என்றார்.

அவரின் காதலன் யார்? என்பதை நாங்கள் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள போகிறீர்களா..?

nayanthara world of women

 

ஆதரவற்றோருக்கும் கிடா விருந்தளித்த தொட்ரா படக்குழுவினர்

ஆதரவற்றோருக்கும் கிடா விருந்தளித்த தொட்ரா படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thodraa movie shoot wrap with Kida virundhu

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.

இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

பிருத்வி ராஜன், வீணா, ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.

படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது.

அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர்.

அவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.

இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.

ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது.
இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.

“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார்.

அவருக்கும், விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றார் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம்.எஸ்.குமாரும்.

Thodraa movie shoot wrap with Kida virundhu

thodra wap

Breaking: ஏஆர்.ரஹ்மான்-சிவகார்த்திகேயன் இணையும் பட நாயகி இவர்தான்

Breaking: ஏஆர்.ரஹ்மான்-சிவகார்த்திகேயன் இணையும் பட நாயகி இவர்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rakul preet singh has been roped as female lead in SivaKartikeyans next scifi flickபொன்ராம் இயக்கும் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இதில் நாயகியாக சமந்தா நடிக்க இமான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ரெமோ, வேலைக்காரன், சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து இந்த புதுப்படத்தையும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் இப்பட நாயகி யார்? என்பதை தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று படநாயகி ரகுல் பிரித்தி சிங்தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Rakul preet singh has been roped as female lead in SivaKartikeyans next scifi flick

Rakul Preet Singh may romance with Vijay for AR Murugadoss movie

 

படுக்கைக்கு அழைக்கும் நடிகைகள் பெயரை வெளியிடுவேன் : நேஹா ஞானவேல்ராஜா

படுக்கைக்கு அழைக்கும் நடிகைகள் பெயரை வெளியிடுவேன் : நேஹா ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gnanavelraja Wife Nehas contraversy tweetசினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் கூறி வருவதை பார்த்து இருக்கிறோம்.

ஆனால் நடிகைகள் படு மோசம். விபச்சாரிகளை விட கேவலமாக நடந்துக் கொள்கிறார்கள் என ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள். அதுவும் திருமணமானவர்களை குறி வைத்தே இதை செய்கின்றனர்.

ஆண்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் அவர்கள் வாய்ப்புக்காக இதை செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

உண்மையை கூற வேண்டும் என்றால் திரையுலகை சேர்ந்த சில கதாநாயகிகள் தான் சில பெண்களின் வாழ்க்கையை பாழாக்குகின்றனர்.

கதாநாயகிகள் சிலரின் உண்மை முகம் தெரியாமல், அவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

விபச்சார அழகிகளை விட மோசமான நடத்தை கொண்ட கதாநாயகிகளை அம்பலப்படுத்த வேண்டியது அவசியம்.

ஒரு பெண்ணின் கணவர் என்று தெரிந்தே, அந்த ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் கதாநாயகிகளை தெருவில் வைத்து நாய்களை அடித்து விரட்டுவது போல் விரட்டினால் கூட தவறில்லை.

இதுபோன்ற நாயகிகள் சிலரை தான் எச்சரித்தும் பார்த்துவிட்டதாகவும், கெஞ்சியும் பார்த்துவிட்டதாகவும் நேஹா தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த கதாநாயகிகள் கேட்பது போல் தெரியவில்லை என்பதால் அந்த நடிகைகள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இதனால் பல நடிகைகள் பயத்தில் இருக்கிறார்களாம்.

Producer Gnanavel rajas wife Neha rages against heroines

producer neha tweet

க்யா ரே 6 பைஃட்டிங்கா.?; காலாவில் ரஜினியின் அதிரடி ஆக்சன்ஸ்

க்யா ரே 6 பைஃட்டிங்கா.?; காலாவில் ரஜினியின் அதிரடி ஆக்சன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Kaala movie Rajinikanth having 6 fight scenesரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் அடுத்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்திருந்தார்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இப்படம் தள்ளிப்போகும் என செய்திகள் வந்தன.

ஆனால் வரும் செய்திகளில் உண்மையில்லை.

நாங்கள் எந்த விதமான அறிவிப்பையும் வழங்கவில்லை என காலாவை வெளியிடும் லைகா படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் காலா படத்தின் கிளைமேக்ஸ் எது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காலா டீசரில் ரஜினிகாந்த் அனல் பறக்கும் நெருப்பில் சண்டைப்போடுவது போல் ஒரு சில காட்சிகள் வரும், அது தான் காலா படத்தின் கிளைமேக்ஸ் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாம். இடைவேளைக்கு பின்னர் முழுவதுமே ஆக்‌ஷன் காட்சிகள்தான் என தெரிய வந்துள்ளது.

In Kaala movie Rajinikanth having 6 fight scenes

போட்டோவுல அனிருத் இல்ல நான்தான்; சீக்ரெட்டை உடைத்த மாடல்

போட்டோவுல அனிருத் இல்ல நான்தான்; சீக்ரெட்டை உடைத்த மாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumoursலைகா தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் கோலமாவு கோகிலா என்ற படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இவர் இந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன.

அப்போதுதான் ஒரு பெண் போட்டோ இணையத்தில் வைரலானது.

அட நம்ம அனிருத்துதான் அந்த பெண். அப்படியே இருக்காரு என்று சொல்ல அது வைரலானது.

இந்நிலையில் அந்த சம்பந்தப்பட்ட பெண் மாடல் ஷனோ என்பவர் ‘நான் ஒரு மாடல், இது என் புகைப்படம் தான்’ என விளக்கம் அளித்து இருக்கிறார்.

அனிருத்துக்கு எதிராக தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

மற்றொரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அதான் இது…

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumours

Model Shaano clarifies that Anirudh lady getup photo rumours

More Articles
Follows