தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2023 பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய படங்கள் வெளியானது.
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்கள் வெளியானது.
இந்த நான்கு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
‘வாரிசு’ படம் உலகளவில் 150 கோடியை கடந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘துணிவு’ பட வசூல் குறித்து அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அதுவும் 120 கோடியை நிச்சயமாக கடந்திருக்கும்.
மேலும் ‘வால்டர் வீரய்யா’ மற்றும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ ஆகிய படங்களும் வசூல் வேட்டை செய்து வருகின்றன.
ஆக இந்த நான்கு படங்களும் இதுவரையில் ரூபாய் 500+ கோடிக்கும் மேல் வசூலை அள்ளி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் தென் இந்திய திரைப்படங்கள் வசூல் வேட்டை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆர் ஆர் ஆர், பொன்னியின் செல்வன் 1, விக்ரம், கே ஜி எஃப் 2 உள்ளிட்ட படங்கள் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Vijay Ajith Chiranjeevi & Balakrishna films collected Rs 500 crores